பேனாக்கள் பேசும்!
பேனாக்கள்
பேசும்!
மனிதர்கள்
மனங்களைக்
காயப்படுத்துவதைப்
போல் ...
பேனாக்கள்
பேப்பரைக்
காயப்படுத்தாமலேயே
பேசும்..
கக்கியதெல்லாம்
உண் `மை`
என்றாலும்
கடைசியில்
குப்பைத்
தொட்டிக்குத்தான்
போகின்றன
வெற்றுப்
பேனாக்கள்...
மனிதர்களும்
அப்படித்தான்!
பேனாவும்
சுவைக்கும்..
காதலைப்பற்றி
எழுதினால்
இனிக்கும்....
கண்ட கண்ட
கருமத்தையெல்லாம்
எழுதினால்
கசக்கும்
அநியாயத்தை
எழுதினால்
கோபத்தில்...
உறை (ரை) க்கும் ..
உங்கள்
பேனாக்களுக்கு
உறை (
ரை)
க்கட்டும்...
அல்லது
இனிக்கட்டும்...
5 comments:
கண்ட கண்ட
கருமத்தையெல்லாம்
எழுதினால்
கசக்கும்
////
அதுதான் விசைப் பலகைல தட்டச்சுறீங்களா??
மு.மேத்தா வாசனை!
:D
நீரோடை போல் தெளிவாய், ஆழகாய் இருக்கிறது ...
நல்ல இருக்கிறது
கக்கியதெல்லாம்
உண் `மை`
என்றாலும்
கடைசியில்
குப்பைத்
தொட்டிக்குத்தான்
போகின்றன
வெற்றுப்
பேனாக்கள்...
மனிதர்களும்
அப்படித்தான்!
ஆஹா அருமை இந்த வரிகள்
Post a Comment