6.16.2009

அம்மா தந்ததும் நீ தந்ததும் முதல் முத்தம்...

முத்தங்கள் பேசும்
வார்த்தைகள்
போலல்ல
அவை எப்போதும்
என்னை
காயப்படுத்தியதில்லை...

இந்த உலகத்தில்
அம்மாவும்
நானும்
முதலில்
பேசியது
முத்தம்...

அம்மா மட்டுமா
எல்லோரும்
ஆரம்பத்தில்
முத்தத்துடந்தான்
அறிமுகமானார்கள்...

இவையெல்லாம்
அறிந்துகொள்ளும்
அறிவு
அப்போது
இல்லாவிட்டாலும்
இப்போது
என் பகுத்தறிவு
சொல்லுகிறது...

வாயில்
வார்த்தை
குடியேற குடியேற
முத்தங்கள்
குறைந்துபோயின...

இப்போதெல்லாம்
அன்பில்
கிடைக்கிற
முத்தங்களைவிட
சம்பிரதாயங்களுக்காக
கிடைக்கிற
முத்தங்களே
அதிகம்...

இன்று
அபூர்வமாய்
கிடைத்தது
அன்போடு
உன் முத்தம்

அந்த முத்தம்
அம்மா
முதன் முதலாய்
எனக்குத்தந்த
நான்
அறிந்திராத
முத்தத்தை
ஞாபகப் படுத்தியது
எனக்கு...

அம்மா கூட
ஞாபகப் படுத்தாத
அந்த முத்தத்தை
நீ
ஞாபகப் படுத்தினாய்
நன்றி..

9 comments:

நட்புடன் ஜமால் said...

வாயில்
வார்த்தை
குடியேற குடியேற
முத்தங்கள்
குறைந்துபோயின...\\

நிதர்சனம்

\\இப்போதெல்லாம்
அன்பில்
கிடைக்கிற
முத்தங்களைவிட
சம்பிரதாயங்களுக்காக
கிடைக்கிற
முத்தங்களே
அதிகம்...\\

குழந்தைக்கு தானே

S.A. நவாஸுதீன் said...

வாயில்
வார்த்தை
குடியேற குடியேற
முத்தங்கள்
குறைந்துபோயின...

இது "நச்"

மயாதி said...

நட்புடன் ஜமால் said..

\இப்போதெல்லாம்
அன்பில்
கிடைக்கிற
முத்தங்களைவிட
சம்பிரதாயங்களுக்காக
கிடைக்கிற
முத்தங்களே
அதிகம்...\\

குழந்தைக்கு தானே//

நன்றி அண்ணா...

அப்படியும் இருக்கலாம்
ஆனால் நான் நினைத்தது என்னை மற்றும் பெரியவர்களை..
மன்னித்துக் கொள்ளுங்கள் அண்ணா !

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

வாயில்
வார்த்தை
குடியேற குடியேற
முத்தங்கள்
குறைந்துபோயின...

இது "நச்"//

நன்றி அண்ணா !

நட்புடன் ஜமால் said...

மன்னித்துக் கொள்ளுங்கள் அண்ணா !\\

இது எதுக்குப்பா!

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

மன்னித்துக் கொள்ளுங்கள் அண்ணா !\\

இது எதுக்குப்பா//

உங்கள் எண்ணமும் என் எண்ணமும் யாரையும் காயப்படுத்தாமல் வேறுபட்டால் மன்னிப்பு கேட்பதுதானே நியாயம் அண்ணா !

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்லா இருக்கு

Anonymous said...

முதன் முதலாய் முத்தத்துக்கு முழு அர்த்தம் சொன்னாய் முத்ததின் இன்றைய நிலை சம்பிரதாயமே......

" உழவன் " " Uzhavan " said...

முத்தம் தொடர்ந்து கிடைக்க வாழ்த்துக்கள் :-)