6.25.2009

உமிழ் நீர் அஞ்சலி


மு.கு- எழுத்துக்கு சொந்தக்காரர் உங்களுக்கு அறிமுகமில்லாத தனஞ்சயன் .

வெட்டுவார்கள் என்று
தெரியாமல்
கொட்டியதைஎல்லாம்
கொத்தித் தின்றாயே

அசைந்தால் மெலிந்து
விடுவாய் என்றார்கள்
அவர்களின்
அக்கறை கண்டு
புளங்காகிதம்
கொண்டாயே

அவர்களின் அக்கறையின்
காரணம்
எப்படித் தெரியும்
உனக்கு?

கொக்கரிக்கக் கூட
நேரமின்றி
கொத்துவதிலேயே
குறியாய் இருந்தாயே
கழுத்தை
கொத்திய போதாவது
பாழும் மனிதர்களின்
எண்ணம் புரிந்ததா
உனக்கு?


பிறீமாவை
அன்ன பூரனியாய்
எண்ணி இருந்தாயே
அது செய்த
துரோகம் புரிகிறதா?

பிறீமா தீனியை
குழம்பு வைக்க
முடியாமல்
உனக்கு கொடுத்து
உன்னைக் குழம்பு
வைத்தார்களே
இதுவா மனிதம்?

கெட்டவர்களின்
மரணமும்
எதிரிகளின்
மரணமும்தான்
மகிழ்ச்சியைக்
கொடுக்கும்

அரையடி நாக்குக்கு
மகிழ்ச்சி
கொடுப்பதற்காகவே
உன் உயிரை
மாய்த்துக் கொண்டவன்...
உன் மரணத்தில்
சோகத்தை விட
மகிழ்ச்சியையே
அதிகம்
கொடுத்தாய்...

இறந்தும் ஈந்த
வள்ளல்கள் உண்டு...

மரித்தும் மகிழ்ச்சி
தரும்
உத்தமனே
உன் ஆத்மா
சாந்தியடையட்டும்...

உண்ட களிப்பில்
களைப்பில்
நண்பர்கள்...

9 comments:

ஆ.முத்துராமலிங்கம் said...

சாந்தி அடையட்டும்!!!

நட்புடன் ஜமால் said...

கடைசி வரிகள் உண்மை ...


:)

மயாதி said...

ஆ.முத்துராமலிங்கம் said...

சாந்தி அடையட்டும்!!!//

நன்றி முத்து ..

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

கடைசி வரிகள் உண்மை ...//

நன்றி அண்ணா

நீண்ட நாட்களாய் உங்களை காணவில்லை என்று என் கவிதைகள் கவலையில்

Anonymous said...

யாரந்த மனிதம் கோழிக்காக கொக்கரித்த உள்ளம்.....

//பிறீமாவை//

என்றால் என்னப்பா?

கவிதையாகியும் நிறைவை தந்த வள்ளல் வாழ்க....

மயாதி said...

தமிழரசி said...

யாரந்த மனிதம் கோழிக்காக கொக்கரித்த உள்ளம்.....

//பிறீமாவை//

என்றால் என்னப்பா?

ு...
மக்கு akka
அது தானே அடுத்த வரியில் சொல்லி இருக்கு..
அது கோழித் தீனி ஒன்றின் உட்பத்திப் பெயர். இலங்கையில் பிரபல்யம் ஆனது

கவிக்கிழவன் said...

மிருகங்களில் காட்டும் கருணை
மனதை தாக்கிவிட்டது
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

நாணல் said...

nalla kavithai... rusikkaga saapidupavargal sindiththal sari...

வடிவேல் விஜிதரன் said...

தனன்சயனின் ஆரம்பகாலக் கவிதைகளில் ஒன்று இது. காலத்தின் சம்மட்டி அவரது மனதின் உளியைச் செப்பனிட்டதில் இப்போது அவரது கவிதைகளின் சீர்மை வியப்பூட்டுகிறது. தனன்சயன் விரைவில் உங்களுக்குப் படிக்கக் கிடைப்பார்.