6.18.2009

மனிதக் காதல் அல்ல..

உனக்குத்
தருவதற்காய்
சின்ன வயதில்
இருந்தே
சேர்த்து
வைத்திருப்பேனோ...
உன்னைப்
பார்த்ததும்
இத்தனை
கவிதைகள் வந்து
கொட்டி விடுகின்றனவே!

************************

பிரியும் போது
நீ
தந்துவிட்டுப்
போகும்
முத்தம்...
பிரிந்த பின்பும்
சேர்த்து
வைக்கிறது
நம்மை...

********************

ஜாதகப்
பொருத்தம்
பார்த்தவன்
சொன்னான்
நமக்கு
பொருத்தம்
இல்லையாம்...
உண்மைதான்
மனிதர்
உணர்ந்து
கொள்ள
இது மனிதக்
காதல்
அல்ல..15 comments:

சென்ஷி said...

மூன்றுமே போட்டி போட்டுக்கொண்டு ஒன்றையொன்று முந்துகின்றன..

கலக்கல் :))

(ஒரு நாளைக்கு எத்தனை பதிவு போடுவீங்க.. உங்களுக்காகவே பேஜ் ரிஃப்ரெஷ் செய்ய வேண்டியிருக்குது!) :)

மயாதி said...

சென்ஷி said...

மூன்றுமே போட்டி போட்டுக்கொண்டு ஒன்றையொன்று முந்துகின்றன..

கலக்கல் :))

(ஒரு நாளைக்கு எத்தனை பதிவு போடுவீங்க.. உங்களுக்காகவே பேஜ் ரிஃப்ரெஷ் செய்ய வேண்டியிருக்குது!) :)

June 19, 2009 12:13 AM

எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தல ..
நன்றி

நட்புடன் ஜமால் said...

பிரியும் போது
நீ
தந்துவிட்டுப்
போகும்
முத்தம்...
பிரிந்த பின்பும்
சேர்த்து
வைக்கிறது
நம்மை...\\

இது மிகவும் பிடித்தது.

தமிழிச்சி said...

கவிதை கலக்குது. நடத்துங்க.

சி. கருணாகரசு said...

கலக்கலா இருக்கு கவிதை
கவிதைக்குள் யார் அந்த கவி"தை"???

" உழவன் " " Uzhavan " said...

மூன்றுமே சூப்பர்.
மனிதக் காதல் இல்லேனா.. இது என்ன "கமல்" காதலா? :-)

sakthi said...

உனக்குத்
தருவதற்காய்
சின்ன வயதில்
இருந்தே
சேர்த்து
வைத்திருப்பேனோ...
உன்னைப்
பார்த்ததும்
இத்தனை
கவிதைகள் வந்து
கொட்டி விடுகின்றனவே!


ம்ம்ம்ம்

அதான் இத்தனை கவிதையா???

நடக்கட்டும் நடக்கட்டும்....

நாமக்கல் சிபி said...

நீங்க ஏன் புஸ்தகம் போடக் கூடாது?

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

பிரியும் போது
நீ
தந்துவிட்டுப்
போகும்
முத்தம்...
பிரிந்த பின்பும்
சேர்த்து
வைக்கிறது
நம்மை...\\

இது மிகவும் பிடித்தது.//

நன்றி...

மயாதி said...

தமிழிச்சி said...

கவிதை கலக்குது. நடத்துங்க.//

என்னங்க வயித்தக் கலக்குதா?
ஹா ஹா ஹா...

நன்றி

மயாதி said...

சி. கருணாகரசு said...

கலக்கலா இருக்கு கவிதை
கவிதைக்குள் யார் அந்த கவி"தை"???//

அது தெரிஞ்சா நான் ஏனுங்க இப்படி அலட்டி உங்களுக்கு அருக்கப் போறன்...

மயாதி said...

உழவன் " " Uzhavan " said...

மூன்றுமே சூப்பர்.
மனிதக் காதல் இல்லேனா.. இது என்ன "கமல்" காதலா? :-)//

இப்படியெல்லாம் கேள்வி கேட்டு மாட்டி விடப் பார்க்குறீங்களா?

அதென்னங்க கமல் காதல்?

நன்றி உழவா ...

மயாதி said...

sakthi said...

ம்ம்ம்ம்

அதான் இத்தனை கவிதையா???

நடக்கட்டும் நடக்கட்டும்....//

ஐயோ தாயே அப்படி யாரும் இல்ல சும்மா வதந்திகளை சொல்லி என் வாழ்க்கையில கைவச்சுடாதம்மா ?

நன்றி சக்தி

மயாதி said...

நாமக்கல் சிபி said...

நீங்க ஏன் புஸ்தகம் போடக் கூடாது?//

புத்தகம் தானே கொஞ்சம் பொறுங்க தலைவா..
இந்த புத்தகம் எடுக்கிறான், ..,,.... போடப்போறன்......போட்டுத்தன்.

இப்ப சரியா ? ஹா ஹா ஹா ...

நண்பா இலங்கையில வைரமுத்துவோட புத்தகத்தைக் சும்மா குடுத்தாலே கம்மிப் பேருதான் வாங்குவாங்க .....
இந்த லட்ஷனத்துல நம்ம புத்தகத்த ஸோ ரூமுல கூட வைக்க மாட்டானுகள்..

ஏனுங்க நம்ம வயித்துல கை வைக்கிறீங்க.

நன்றி நண்பா

தமிழ்ப்பறவை said...

மயாதி சார்...
நாங்க படிக்கிறதுக்கும், பின்னூட்டம் போடுறதுக்கும் டைம் கொடுங்க சார்...
முதல் கவிதை எனக்குப் பிடித்திருந்தது.