6.06.2009

மழை பற்றிய என் பகிர்தல்

ஒரு நதி
நனைகிறது
மழை

பெய்கிறது தண்ணீர்
மட்டுமல்ல
கவிதையும்

நான் ஒதுங்குவது
பயந்தல்ல
என்னை நனைத்து
உன்னை அழுக்காக்க
இஸ்டமில்லை


உன் தூவானத்தை
சுருக்கிக் கொள்
பிளாட்பாரத்தில்
படுக்கிறார்கள்
நிறையப்பேர்


சாபம் பெற்று கிடக்கும்
காளான்கள்
உயிர்பெறுகின்றன
உன் பாதம் பட்டு


கருமேகங்களே
காவேரி நீரை
சுமந்து வந்து
எங்கள் பாவங்களை
கழுவிவிடேன்
நாங்கள்
தூரத்தில் இருக்கிறோம்


அவளை
நனைத்துவிடாதே
அபிஷேகத் தண்ணி
வடிகாலில்
ஓடக்கூடாதுஉனக்கும்
காதலின் ஸ்பரிசத்துக்கும்
மட்டுமே
அனுமதி
எப்போது வேண்டுமானாலும்
தூக்கம்
கெடுக்கலாம்
17 comments:

நட்புடன் ஜமால் said...

ஏனுங்கோ

இப்படி எழுதிகிட்டே இருக்கியளே

எப்படிங்க இது ...

Nundhaa said...

//

ஒரு நதி
நனைகிறது

பெய்வது தண்ணீர்
மட்டுமல்ல

நான் ஒதுங்குவது
பயந்தல்ல
என்னை நனைத்து
உன்னை அழுக்காக்க
இஸ்டமில்லை

உன் தூவானத்தை
சுருக்கிக் கொள்
பிளாட்பாரத்தில்
படுக்கிறார்கள்
நிறையப்பேர்

சாபம் பெற்று கிடக்கும்
காளான்கள்
உயிர்பெறுகின்றன
உன் பாதம் பட்டு

கருமேகங்களே
காவேரி நீரை
சுமந்து வந்து
எங்கள் பாவங்களை
கழுவிவிடேன்
நாங்கள்
தூரத்தில் இருக்கிறோம்

அவளை
நனைத்துவிடாதே
அபிஷேகத் தண்ணி
வடிகாலில்
ஓடக்கூடாது

உனக்கும்
காதலின் ஸ்பரிசத்துக்கும்
மட்டுமே
அனுமதி
எப்போது வேண்டுமானாலும்
தூக்கம்
கெடுக்கலாம்

//

என்று சற்றே மாற்றி வாசித்துக் கொள்கிறேன் ... மழை பற்றிய என் கவிதைகளை நினைவில் வர நனையாமல் மிதக்கிறேன் இந்த வெள்ளத்தில் ... I like it ...

Kavi kilavan said...

கருமேகங்களே
காவேரி நீரை
சுமந்து வந்து
எங்கள் பாவங்களை
கழுவிவிடேன்

நாணல் said...

மழையில நனையனும் போல இருக்கே.. கவிதை மிக அருமை மழையப் போல...

தமிழ்ப்பறவை said...

நல்லா இருந்தது.. நானும் கொஞ்சம் நனைந்தேன் மழையில், கவிதையில்...

சேரல் said...

//அவளை
நனைத்துவிடாதே
அபிஷேகத் தண்ணி
வடிகாலில்
ஓடக்கூடாதுஉனக்கும்
காதலின் ஸ்பரிசத்துக்கும்
மட்டுமே
அனுமதி
எப்போது வேண்டுமானாலும்
தூக்கம்
கெடுக்கலாம்
//

:)

மயாதி said...

நன்றி...

நட்புடன் ஜமால்
Nundhaa
Kavi kilavan
நாணல்
தமிழ்ப்பறவை
சேரல்

S.A. நவாஸுதீன் said...

ஒரு நதி
நனைகிறது
மழை

பெய்கிறது தண்ணீர்
மட்டுமல்ல
கவிதையும்

சரிதாங்க. நீங்களும் ஒரு கவிதை சிரபுஞ்சி தான். தினம் இரண்டு முறையாவது பெய்கிறது. சூப்பர் மயாதி

S.A. நவாஸுதீன் said...

நான் ஒதுங்குவது
பயந்தல்ல
என்னை நனைத்து
உன்னை அழுக்காக்க
இஸ்டமில்லை

எப்படித்தான் இந்த மாதிரி யோசிக்கிறீங்களோ

S.A. நவாஸுதீன் said...

உன் தூவானத்தை
சுருக்கிக் கொள்
பிளாட்பாரத்தில்
படுக்கிறார்கள்
நிறையப்பேர்

மனதைத் தொட்டது

S.A. நவாஸுதீன் said...

கருமேகங்களே
காவேரி நீரை
சுமந்து வந்து
எங்கள் பாவங்களை
கழுவிவிடேன்
நாங்கள்
தூரத்தில் இருக்கிறோம்

இடையூற (இருக்குத)ப்பா

S.A. நவாஸுதீன் said...

அவளை
நனைத்துவிடாதே
அபிஷேகத் தண்ணி
வடிகாலில்
ஓடக்கூடாது

இது சூப்பர்

மயாதி said...

நன்றி S.A. நவாஸுதீன்
உங்கள் அன்புக்கு ...

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...


கருமேகங்களே
காவேரி நீரை
சுமந்து வந்து
எங்கள் பாவங்களை
கழுவிவிடேன்
நாங்கள்
தூரத்தில் இருக்கிறோம்

இடையூற (இருக்குத)ப்பா//


மன்னிக்கவும் அண்ணா comment விளங்கவில்லை
கவிதைக்கு இடையூராக இருக்கிறது என்கிறீர்களா?
நீக்கிவிடவா ?

யுவன் பிரபாகரன் said...

மழை மாடியில் இருந்து ரசிக்க....
ஆனால் பிளாட்பாரத்தில் வசிக்க ?

S.A. நவாஸுதீன் said...

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...


கருமேகங்களே
காவேரி நீரை
சுமந்து வந்து
எங்கள் பாவங்களை
கழுவிவிடேன்
நாங்கள்
தூரத்தில் இருக்கிறோம்

இடையூற (இருக்குத)ப்பா//


மன்னிக்கவும் அண்ணா comment விளங்கவில்லை
கவிதைக்கு இடையூராக இருக்கிறது என்கிறீர்களா?
நீக்கிவிடவா ?

நான் சொன்னது கர்நாடகாவில் காவிரிக்கு இடையூறாய் இருக்கும் எடியூரப்பாவை.

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

//நான் சொன்னது கர்நாடகாவில் காவிரிக்கு இடையூறாய் இருக்கும் எடியூரப்பாவை//

அப்படியா! மன்னித்து விடுங்கள் நான் ஒரு tube light