6.20.2009

நீங்கள் படித்திருக்க முடியாதவையும் நான் படித்தவையும்எழுதியது - சவிதா

தேடல்


இல்லை, தண்டு , வேர்
எல்லாமே கசந்தாலும்
காக்கைகள்
கவனித்து விடுகின்றன
வேம்பில்
பழங்களும்
இருப்பதை
இனிக்க இனிக்க...
உயிர்

கூவிக் கூவி விற்பவர்களும்
பேசிப் பேசி வாங்குபவர்களும்
அறியமாட்டார்கள்
தப்பித்த மீன்களின்
ஆனந்தம்.


கவிதையாதல்

நனையாத மழை நாட்களும்
நடவாத புல் தரைகளும்
பாடாத ராகங்களும்
பாத்திராத வண்ணங்களும்
கனத்துக் கனத்துக்
கவிதைகளாகிவிடுகின்றன
ஒரே நாளில்..

No comments: