6.02.2009

இது வெறும் வாலுங்க (தலை நீங்கதான் )

என்னங்க தலைப்பைப் பார்த்துக் குழம்பிட்டிங்களா? அது ஒன்றும் இல்லை இன்றைக்கு நான் கவிதைகளை மட்டுமே பிரசுரிக்கிறேன் தலைப்பை நீங்களே அனுமானித்துக் கொள்ளுங்கள் .
முடிந்தால் பின்னூட்டத்தில் உங்கள் தலைப்புகளை போட்டு விடுங்கள். நல்ல தலைப்புக்கு
பரிசாக ( லஞ்சமாக ) ஒரு பரிசுக் கவிதையை நாளை பிரசுரிக்கிறேன் ( குறித்துக் கொள்ளுங்கள் நல்ல தலைப்புக்கு ).
இதுக்கு மேல நான் கதைக்கல கவிதைக்கு போவோமா !( தலை இருக்க வால்.............அதுதாங்க )
மேல் ஜாதிக்கும்
கீழ் ஜாதிக்கும்
இடையில் நசுங்கிச்
சாகிறது ...
மனித ஜாதி


இறுதி மூச்சுக்குச்
சற்றுமுன் ...
தற்கொலை
செய்பவனின் கடைசி
ஆசை
இன்னும் கொஞ்சம்
வாழ வேண்டும்


அலைந்து திரிகிறது
அமைதி தேடி
சமாதியானவரின்
ஆவி
எத்தனை பேருக்குத்தான்
இடம் கொடுக்கும்
அமைதிதுடிப்பதைவிட
நடிப்பது
அதிகம்
இதயங்கள்...காதலுக்கு தாஜ்மகால்
ஒன்றுதான்
கல்லறைகள் அதிகம்வாழ்வதைவிட
செத்துப்பிழைப்பது அதிகம்
மனிதர்கள்

கிணற்றுக்குள் இருந்து
உலகம் பார்க்க
பழகி விட்டன
தவளைகள்
நாம் இன்னும்
தவளையையே
பார்த்துக்கொண்டிருக்கிறோம்


முகப்பூச்சு
கண் மை
உதட்டுச்சாயம்
காசு கொடுத்து
வாங்கும் இவை
எல்லாவற்றையும்விட
அழகாய் இருக்கிறது
இயற்கையான
வெட்கம்
இரவு முழுக்க
குரைத்து குரைத்து
எந்தக்கள்ளனையுமே
வர விடவில்லை
``டொம்மி ``
புதழ்ந்துகொண்டிருக்கும் போதும்
குறைத்தது ``டொம்மி ``
பார்த்தீங்களா
நான் சொன்னது
அதுக்கும் விளங்கிட்டது
இன்னும் கூடியது புகழ்ச்சி
பாவம் இரவில் இருந்து
பசியோடு குறைக்கிறது
``டொம்மி ``


27 comments:

பிரியமுடன்.........வசந்த் said...

தனக்கு தானே கொள்ளி

//மேல் ஜாதிக்கும்
கீழ் ஜாதிக்கும்
இடையில் நசுங்கிச்
சாகிறது ...
மனித ஜாதி//

நப்பாசை

//இறுதி மூச்சுக்குச்
சற்றுமுன் ...
தற்கொலை
செய்பவனின் கடைசி
ஆசை
இன்னும் கொஞ்சம்
வாழ வேண்டும்//

பற்றாக்குறை

//அலைந்து திரிகிறது
அமைதி தேடி
சமாதியானவரின்
ஆவி
எத்தனை பேருக்குத்தான்
இடம் கொடுக்கும்
அமைதி//

ஆஸ்கரை நோக்கி.....

//துடிப்பதைவிட
நடிப்பது
அதிகம்
இதயங்கள்...//

இதுக்கு மேல முடியல.....

சென்ஷி said...

நல்லாயிருக்குங்க!

ஸ்ரீதர் said...

//கிணற்றுக்குள் இருந்து
உலகம் பார்க்க
பழகி விட்டன
தவளைகள்
நாம் இன்னும்
தவளையையே
பார்த்துக்கொண்டிருக்கிறோம்//
அருமை. கவிதைதான் இது.நினைக்கிறேன் என்று லேபில் எதுக்கு.

அதிஷா said...

எல்லா கவிதையும் டாப்பு டக்கரு..

ஆனா தலைப்புலாம் வைக்கற அளவுக்கு ...

S.A. நவாஸுதீன் said...

மத்தளம்

மேல் ஜாதிக்கும்
கீழ் ஜாதிக்கும்
இடையில் நசுங்கிச்
சாகிறது ...
மனித ஜாதி

நப்பாசை (Repeattttu)
இறுதி மூச்சுக்குச்
சற்றுமுன் ...
தற்கொலை
செய்பவனின் கடைசி
ஆசை
இன்னும் கொஞ்சம்
வாழ வேண்டும்

அமைதி இல்லா அமைதி
அலைந்து திரிகிறது
அமைதி தேடி
சமாதியானவரின்
ஆவி
எத்தனை பேருக்குத்தான்
இடம் கொடுக்கும்
அமைதி

S.A. நவாஸுதீன் said...

மீதிக்கு கொஞ்சம் தாமதமாக வருகிறேன். ஆணி ஜாஸ்திப்பா

வால்பையன் said...

என்னைய தான் கூப்பிடுறிங்கிளோன்னு எட்டி பார்த்தேன்!

//கிணற்றுக்குள் இருந்து
உலகம் பார்க்க
பழகி விட்டன
தவளைகள்
நாம் இன்னும்
தவளையையே
பார்த்துக்கொண்டிருக்கிறோம்//

இந்த கவிதையில் சொக்கி நின்றேன்!

தமிழ்ப்பிரியா said...

அழியும் ஜாதி
------------

மேல் ஜாதிக்கும்
கீழ் ஜாதிக்கும்
இடையில் நசுங்கிச்
சாகிறது ...
மனித ஜாதி


ஆசை யாரை விட்டது?
---------------------

இறுதி மூச்சுக்குச்
சற்றுமுன் ...
தற்கொலை
செய்பவனின் கடைசி
ஆசை
இன்னும் கொஞ்சம்
வாழ வேண்டும்
அமைதி பற்றாக்குறை
--------------------

அலைந்து திரிகிறது
அமைதி தேடி
சமாதியானவரின்
ஆவி
எத்தனை பேருக்குத்தான்
இடம் கொடுக்கும்
அமைதி


புதிய தொழில்
------------

துடிப்பதைவிட
நடிப்பது
அதிகம்
இதயங்கள்...முடிவு
------

காதலுக்கு தாஜ்மகால்
ஒன்றுதான்
கல்லறைகள் அதிகம்


மீண்டவர் அதிகம்
----------------

வாழ்வதைவிட
செத்துப்பிழைப்பது அதிகம்
மனிதர்கள்காலம் மாறிப் போச்சு
--------------------

கிணற்றுக்குள் இருந்து
உலகம் பார்க்க
பழகி விட்டன
தவளைகள்
நாம் இன்னும்
தவளையையே
பார்த்துக்கொண்டிருக்கிறோம்

செயற்கையை மிஞ்சும் இயற்கை
------------------------------

முகப்பூச்சு
கண் மை
உதட்டுச்சாயம்
காசு கொடுத்து
வாங்கும் இவை
எல்லாவற்றையும்விட
அழகாய் இருக்கிறது
இயற்கையான
வெட்கம்பொதுநலம்
----------

இரவு முழுக்க
குரைத்து குரைத்து
எந்தக்கள்ளனையுமே
வர விடவில்லை
``டொம்மி ``
புதழ்ந்துகொண்டிருக்கும் போதும்
குறைத்தது ``டொம்மி ``
பார்த்தீங்களா
நான் சொன்னது
அதுக்கும் விளங்கிட்டது
இன்னும் கூடியது புகழ்ச்சி
பாவம் இரவில் இருந்து
பசியோடு குறைக்கிறது
``டொம்மி ``

மயாதி said...

நன்றி வசந்த் அண்ணா ,

கொஞ்சம் பொறுங்கோ எல்லா தலைப்பையும் சேர்த்துப் பார்ப்பம் ..

மயாதி said...

சென்ஷி said..
//நல்லாயிருக்குங்க!.//


thanks

மயாதி said...

ஸ்ரீதர் said...

//கிணற்றுக்குள் இருந்து
உலகம் பார்க்க
பழகி விட்டன
தவளைகள்
நாம் இன்னும்
தவளையையே
பார்த்துக்கொண்டிருக்கிறோம்//
அருமை. கவிதைதான் இது.நினைக்கிறேன் என்று லேபில் எதுக்கு./////


எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத்தான் ஸ்ரீதர்

thanks

மயாதி said...

அதிஷா said...
//எல்லா கவிதையும் டாப்பு டக்கரு..

ஆனா தலைப்புலாம் வைக்கற அளவுக்கு ...//


தலைப்பெல்லாம் வைக்கிற அளவுக்கு தகுதியில்லாத கவிதை என்றா சொல்ல வாறிங்க..
ஹி ஹி ஹி ..

நன்றி அதிஷா

மயாதி said...

நன்றி S.A. நவாஸுதீன்

எல்லாருடைய தலைப்பும் வந்து சேரட்டும் பிறகு சேர்த்துப் பார்ப்பம்

மயாதி said...

வால்பையன் said...

என்னைய தான் கூப்பிடுறிங்கிளோன்னு எட்டி பார்த்தேன்!

//கிணற்றுக்குள் இருந்து
உலகம் பார்க்க
பழகி விட்டன
தவளைகள்
நாம் இன்னும்
தவளையையே
பார்த்துக்கொண்டிருக்கிறோம்//

இந்த கவிதையில் சொக்கி நின்றேன்!


வந்ததுக்கு நன்றி பையா..
சொக்குங்க ஆனால் வேலை கவனம் ..

மயாதி said...

தமிழ் பிரியா ....

நன்றி

எல்லா தலைப்பும் வந்த பிறகு சேர்த்து இடுகிறேன் தோழி

கவிக்கிழவன் said...

நன்றாக உள்ளது

மயாதி said...

கவிக்கிழவன் சிட்...

//நன்றாக உள்ளது //

அப்படியா ?
நன்றி யாதவன்

அபுஅஃப்ஸர் said...

வாழ்க்கைப்பாடம்

//கிணற்றுக்குள் இருந்து
உலகம் பார்க்க
பழகி விட்டன
தவளைகள்
நாம் இன்னும்
தவளையையே
பார்த்துக்கொண்டிருக்கிறோம்//

இது படித்து லயித்தேன்

அதிஷா said...

நான் எனக்கு தகுதியில்லனு சொல்ல வந்தேன் பாஸ். ;-)

மயாதி said...

தெரியும் அதிஷா .....

சும்மா சீன்டிப்பார்ப்போம் என்றுதான் சொன்னேன் ...
என்றாலும் எங்களுக்கு அவையடக்கம் ரொம்ப ஓவர் போங்கோ.

nilavakan said...

இப்படியும் கவிதை எழுதலாமா ?

மயாதி said...

super

rosemaryars said...

good poems
keep it up

பாலா... said...

தின ம்...

வாழ்வதைவிட
செத்துப்பிழைப்பது அதிகம்
மனிதர்கள்

அழகு

முகப்பூச்சு
கண் மை
உதட்டுச்சாயம்
காசு கொடுத்து
வாங்கும் இவை
எல்லாவற்றையும்விட
அழகாய் இருக்கிறது
இயற்கையான
வெட்கம்

நட்புடன் ஜமால் said...

மனிதன் மேல் ஜாதி

மழையில் உப்பு

அமைதியா(ஆ)வி

ந(து)டி

அறைகல்(ள்)

கோழை

கிணற்று தவளை அல்லது கிணற்று மனிதன்

இயற்கை அல்லது உண்மை அல்லது உன் மெய்

புகழ்-ச்சீ


--------------------


எல்லாமே ’தலை’ வரிசைப்படுத்தி கொள்ளுங்கள்

நாணல் said...

எல்லா கவிதையும் நல்லா இருக்குங்க...

மயாதி said...

நாணல் said...

//எல்லா கவிதையும் நல்லா இருக்குங்க...//

நன்றி மட்டும்தான் சொல்லமுடியும் ...
நன்றி