6.13.2009

மீண்டும் மீண்டும் தவறு செய்வோம்

தவறுகளில்தான்
உயிர் வாழ்கிறது
வாழ்க்கை.

சின்ன
தவறானாலும்
கிடைக்கிற
மன்னிப்பு
மிகப் பெரிது...

தவறுகள்தான்
தன்னைத்தானே
அறிமுகப்படுத்தி
வைக்கிறது
ஒருவருக்கு

தவறு விட்டுத்
திருந்தும்போதுதான்
பகுத்தறிவையே
கண்டுபிடித்தது
மனித இனம்

காதல்
ஊறிக் கிடப்பதே
தவறில்தான்

குழந்தை
வாழப்பழகுவதும்
தவறில்தான்


தவறு
செய்யாதவர்
கடவுளாகலாம்
ஆனால்
கடைசிவரை
மனிதராகவே
முடியாது

தண்டனைகள்
உடலைத்தான்
தண்டிக்கின்றன..
தவறுகள்தான்
ஆன்மாவைத்
தண்டிக்கின்றன...


ஒருவர்
இறந்துவிட்டால்...
தவறிவிட்டார்
என்று
தவறுதலாகவும்
சொல்லி -
விடாதீர்கள்
தவறு என்பது
மரணமல்ல
உயிர்ப்பு..
மனங்களின்
உயிர்ப்புமீண்டும் மீண்டும்
தவறு
செய்வோம்
யார் மனதும்
காயப்படாமல்...
நம் மனது
உயிர் பெற்று
மனிதனாவோம்...
யார் மனதும்
காயப்படாமல்...
நம் மனது
உயிர் பெற்று
மனிதனாவோம்...

19 comments:

வலசு - வேலணை said...

//
தவறு
செய்யாதவர்
கடவுளாகலாம்
ஆனால்
கடைசிவரை
மனிதராகவே
முடியாது
//
மிக அருமையான கருத்து.
மொத்தத்தில் கருத்துச் செறிவான ஒரு கவிதை. வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//மீண்டும் மீண்டும்
தவறு
செய்வோம்
யார் மனதும்
காயப்படாமல்...//

நல்ல வரிகள்

sakthi said...

தவறு
செய்யாதவர்
கடவுளாகலாம்
ஆனால்
கடைசிவரை
மனிதராகவே
முடியாது

unmai alagana kavithai

தீப்பெட்டி said...

சிறப்பான கவிதை..

யாழினி said...

அருமையாக உள்ளது உங்களது கவிதைகள் அனைத்தும். நான் உங்களது பெரும்பாலான கவிதைகள் யாவும் வாசித்துள்ளேன். யாவுமே மிகவும் அழகு. உங்களது கவிதைகள் ஓவ்வொன்றுக்கும் இடையில் பொருத்தமான படம் ஒன்றினை இட்டீர்களானால் இன்னும் அழகாக தோன்றுமே...

S.A. நவாஸுதீன் said...

தவறு
செய்யாதவர்
கடைசிவரை
மனிதராகவே
முடியாது

சரிதான்

S.A. நவாஸுதீன் said...

தண்டனைகள்
உடலைத்தான்
தண்டிக்கின்றன..
தவறுகள்தான்
ஆன்மாவைத்
தண்டிக்கின்றன...

அது தவறென்று உணருபவர்களுக்கு மட்டும்

நிஜமா நல்லவன் said...

நீங்க ரொம்ப நல்லா கவிதைகள் எழுதுறீங்கன்னு கேள்விப்பட்டேன். முதல் முறையா உங்கள் பதிவுக்கு வருகிறேன். எல்லா கவிதைகளையும் படிக்க வேண்டும் என்று ஆசையா இருக்கு. நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்!

மயாதி said...

நன்றி
வலசு - வேலணை
ஆ.ஞானசேகரன்
sakthi
தீப்பெட்டி

மயாதி said...

நன்றி S.A. நவாஸுதீன் அண்ணா

மயாதி said...

நிஜமா நல்லவன் said...

நீங்க ரொம்ப நல்லா கவிதைகள் எழுதுறீங்கன்னு கேள்விப்பட்டேன். முதல் முறையா உங்கள் பதிவுக்கு வருகிறேன். எல்லா கவிதைகளையும் படிக்க வேண்டும் என்று ஆசையா இருக்கு. நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்!//

நன்றி நண்பரே ! உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் ..
நீங்க நிஜமாகவே நல்லவர்தான் போங்கோ...

மயாதி said...

யாழினி said...

அருமையாக உள்ளது உங்களது கவிதைகள் அனைத்தும். நான் உங்களது பெரும்பாலான கவிதைகள் யாவும் வாசித்துள்ளேன். யாவுமே மிகவும் அழகு. உங்களது கவிதைகள் ஓவ்வொன்றுக்கும் இடையில் பொருத்தமான படம் ஒன்றினை இட்டீர்களானால் இன்னும் அழகாக தோன்றுமே..//

வாருங்கள் தோழி , எம் தேசத்தில் இருந்து ஒரு பெண் எழுத்தாளினியை முதலில் சந்திக்கிறேன்...
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

இனிவரும் பதிவுகளில் முயற்சி செய்கிறேன்
உங்கள் தளத்தில் இன்னும் நிறைய எழுதுங்கள்..

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ்

என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

Anonymous said...

சரி சரி இப்ப என்ன பண்ணிட்டு வந்த அதைச் சொல் அம்மா அடிக்காம நான் பார்த்துக்கிறேன்...உடனே எனக்கு கவிதைல தூது ....அம்மா தம்பியை இந்த முறை

சின்ன
தவறானாலும்
கிடைக்கிற
மன்னிப்பு
மிகப் பெரிது...

இதுக்காக விட்டுடலாம் சின்னதப்புத்தான் அதான் கவிதையில சொல்லிட்டார்ல்ல,,,,,,,,

Anonymous said...

கவிதையாய் தவறை திருத்தும் சித்தாந்தம் ........உண்மையை விளித்திருக்கிறது தம்பி,,,,,,,

Anonymous said...

மயாதி said...
நிஜமா நல்லவன் said...

நீங்க ரொம்ப நல்லா கவிதைகள் எழுதுறீங்கன்னு கேள்விப்பட்டேன். முதல் முறையா உங்கள் பதிவுக்கு வருகிறேன். எல்லா கவிதைகளையும் படிக்க வேண்டும் என்று ஆசையா இருக்கு. நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்!//

நன்றி நண்பரே ! உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் ..
நீங்க நிஜமாகவே நல்லவர்தான் போங்கோ...

உனக்கு கவிதை எழுத நேரம் இருக்கிறது படிக்கனும்னா நேரம் கிடைக்கனுமா?
அப்பாடி வந்த வேலை முடிந்தது வரேன்...

மயாதி said...

சரி சரி இப்ப என்ன பண்ணிட்டு வந்த அதைச் சொல் அம்மா அடிக்காம நான் பார்த்துக்கிறேன்...உடனே எனக்கு கவிதைல தூது ....அம்மா தம்பியை இந்த முறை

சின்ன
தவறானாலும்
கிடைக்கிற
மன்னிப்பு
மிகப் பெரிது...

இதுக்காக விட்டுடலாம் சின்னதப்புத்தான் அதான் கவிதையில சொல்லிட்டார்ல்ல,,,,,,//

அக்கா ! அப்படியென்ன கோபம் ? தேவை என்றால் சும்மா ரெண்டு அடியை அடிச்சு போட்டு விடுங்க, அதற்காக இப்படியெல்லாம் மாட்டி விட நினைக்கிறீங்களே...

மயாதி said...

மயாதி said...
நிஜமா நல்லவன் said...

நீங்க ரொம்ப நல்லா கவிதைகள் எழுதுறீங்கன்னு கேள்விப்பட்டேன். முதல் முறையா உங்கள் பதிவுக்கு வருகிறேன். எல்லா கவிதைகளையும் படிக்க வேண்டும் என்று ஆசையா இருக்கு. நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்!//

//நன்றி நண்பரே ! உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் ..
நீங்க நிஜமாகவே நல்லவர்தான் போங்கோ...
உனக்கு கவிதை எழுத நேரம் இருக்கிறது படிக்கனும்னா நேரம் கிடைக்கனுமா?
அப்பாடி வந்த வேலை முடிந்தது வரேன்...//

உங்கள் நல்ல மனசு வாழ்க !
இந்த பெண்களே இப்படித்தான் ...( சும்மா )

கண்ணா || Kanna said...

//மீண்டும் மீண்டும்
தவறு
செய்வோம்
யார் மனதும்
காயப்படாமல்//

ரசிக்க வைத்த வரிகள்..

கலக்கல் கவிஞரே......