6.29.2009

பிச்சைக்காரனை விட ஒரு ரூபாய் கம்மி

கொழும்பு நகரில்
அன்று மதிய நேரம்...

பசியின் அவசரத்தில் நல்ல தரமான கடைக்கு போக அவகாசமில்லாமல் , நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலே இருந்த ஒரு சிறிய சாப்பாட்டுக் கடையில் சாப்பிடப் போனேன். சின்னக் கடையானாலும் சாப்பிட முன் பாத்திரத்தை சுடு நீரால் கழுவித்தான் தந்தார்கள். ஆனாலும் சாப்பாடு பரிமாறுபவர் வெறும் தண்ணியால் கை கழுவியே நிறைய நாட்கள் இருக்கும் போல இருந்தது. இருந்தாலும் என்ன பசியின் அவசரம் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை.

சாப்பிடத் தொடங்கிவிட்டேன்!
சாப்பிடும் போதுதான் கவனித்தேன் நான் இருந்த மேசைக்கு அருகில்தான் குப்பை போடும் வாளி இருந்தது. அந்தக் கடையில் பாத்திரத்தின் மேல் லஞ்ச் சீட் எனப்படும் மெல்லிய பொலித்தின் போட்டு அதிலேதான் சாப்பாடு பரிமாறுவார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் அந்த லஞ்ச் சீட்டை அப்படியே மடித்து அந்தக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, கடமைக்கு ஒருதரம் பாத்திரத்தை சுடுநீரில் பந்தாவாக காட்டிவிட்டு மீண்டும் சாப்பாடு வழங்கப்படும் (எல்லாக் கடைகளையும் போல)

எனக்கு முன் சாப்பிட்ட நிறையப் பேரின் மிச்ச சாப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக முடியப்பட்டு அந்த வாளியில் கிடந்தது. ஈக்கள் மொய்த்து அவற்றை சுவை பார்த்துக் கொண்டிருந்தன. பார்ப்பதற்கே அருவருப்பாய் இருந்த அந்த காட்சியை தவிர்த்து விட்டு சாப்பாட்டைத் தொடர்ந்தேன்.

அப்போது ஒரு பிச்சைக்காரன் வந்து அந்த வாளியை தன் கையால் கிளறத் தொடங்கினான். அவன் கையெல்லாம் ஈ மொய்த்துக் கொண்டிருந்தது. நான் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தேன்! சற்று நேரத்தில் கொஞ்சம் அதிகமாக மிச்ச சாப்பாடு இருந்த சில முடிச்சுக்களை தெரிவு செய்து கொண்டு வெளியில் சென்றான். அங்கே கடைக்கு வெளியில் அவன் மனைவியும் , இரண்டு குழந்தைகளும் நின்றிருந்தார்கள்.

அவன் அந்த குப்பை வாளியில் கிடந்த முடிச்சுக்களை கொடுக்க அவர்கள் சந்தோசமாக சாப்பிடத் தொடங்கினார்கள்.
எனக்கு அந்த குழந்தைகள் குப்பைத் தொட்டியில் சாப்பிடுவதை நேரில் பார்த்தும் மனசு கனக்கத் தொடங்கிவிட்டது (இதற்கு முன் படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்).

நான் எனது சாப்பாட்டுக் காசைக் கொடுத்துவிட்டு , வெளியே வந்தபோது அந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று தோன்றியதால், என் பேர்சில் மாற்றப் பட்டு சில்லறையாக வெறும் பதினேழு ரூபாயே தேறியது.

சரி அதையாவது கொடுப்போம் என்று நெருங்கியபோதுதான் கவனித்தேன் , அந்தப் பிச்சைக்காரன் கையில் ஒரு புது சிகரெட் , அப்போதுதான் பற்றவைத்துக் கொண்டிருந்தான். அது இலங்கையில் பிரபலமான கோல்ட் லீப் எனப்படும் சிகரெட் வகை. அது ஒன்றின் விலை 18 ரூபாய், நான் கொடுக்க நினைத்ததோ வெறும் 17 ரூபாய்.
யாவும் நிஜம்


என் பழைய கவிதையொன்று...

பிச்சைக்காரன்

மிச்சம் நமக்கு
குப்பை
அவனுக்குச்
சாப்பாடு

21 comments:

coolzkarthi said...

அருமை...ஹி ஹி ஹி....ஒரு தம் பதினெட்டு ரூபாயா?

vajee said...

koya makka

S.A. நவாஸுதீன் said...

சீரியஸா ஆரம்பிச்சு சிரிப்பா முடிச்சிட்டீங்க. ஆமா ஒரு சிகெரெட் பதினெட்டு ரூபாயா?

kavikkuyil said...

yaa i also met some people here

Anonymous said...

யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.....அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்....

யாழினி said...

இவர்களை நினைத்தால் என்ன தான் சொல்வதென்றே தெரியவில்லை. அவன் சிகரெட் பிடிக்கும் காசில் அக் குழந்தைகளுக்காவது நல்ல சாப்பாடு வேண்டிக் கொடித்திருக்கலாம்.

தமிழிச்சி said...

மனதைக் கனக்க வைத்தது. இங்கே யாரைக் குற்றம் சொல்வது மயாதி.? இவங்கள் எல்லாம் ஏன் குழந்தைகளைப் பெறுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

அன்புடன் அருணா said...

அருமை....பூங்கொத்து!!

மயாதி said...

coolzkarthi said...

அருமை...ஹி ஹி ஹி....ஒரு தம் பதினெட்டு ரூபாயா?//

ஆமா என்ன பண்ணுறது , இப்படி விலையை ஏற்றி போட்டானுகள்...

நன்றி கார்த்தி.

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

சீரியஸா ஆரம்பிச்சு சிரிப்பா முடிச்சிட்டீங்க. ஆமா ஒரு சிகெரெட் பதினெட்டு ரூபாயா?//

ஆமா .
நன்றி அண்ணா

மயாதி said...

kavikkuyil said...

yaa i also met some people here//

thanks

மயாதி said...

தமிழரசி said...

யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.....அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்....//

கவலைப் படாதீங்க , தம்பிய நம்பலாம்

மயாதி said...

யாழினி said...

இவர்களை நினைத்தால் என்ன தான் சொல்வதென்றே தெரியவில்லை. அவன் சிகரெட் பிடிக்கும் காசில் அக் குழந்தைகளுக்காவது நல்ல சாப்பாடு வேண்டிக் கொடித்திருக்கலாம்.

June 30, 2009 2:04 அம//

நன்றி யாழினி

மயாதி said...

தமிழிச்சி said...

மனதைக் கனக்க வைத்தது. இங்கே யாரைக் குற்றம் சொல்வது மயாதி.? இவங்கள் எல்லாம் ஏன் குழந்தைகளைப் பெறுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.//

நன்றி நண்பியே

மயாதி said...

அன்புடன் அருணா said...

அருமை....பூங்கொத்து!!

June 30, 2009 5:38 அம//

நன்றி அக்கா

சந்ரு said...

உன்மையிலேயே உங்கள் பதிவுகள் அ ருமை தொடர்ந்தும் எழுதுங்கள்...
வாழ்த்துக்கள்...

அபுஅஃப்ஸர் said...

ம்ம் என்னமோ போங்க யாரையும் குறைந்து எடைப்போட முடியலே

கிரி said...

இவங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

தமிழ்ப்பறவை said...

வித்தியாசமா இருக்கு செய்தி...
அங்க இங்க தேத்தி ஒரு ரூபா அவனுக்குச் சேர்த்துக் கொடுத்திருக்கலாம்...

ஜெஸ்வந்தி said...

மயாதி, ஒரு சந்தேகம். சிகரெட்டைப் பார்த்த பின்பு நீங்கள் அந்த 17 ரூபாயை அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்தீர்களா இல்லையா? முடிவு தெரிந்தால் நல்லம். அவனால் அந்தப் குழந்தைகளைப் பராமரிக்கவும் முடியவில்லை . மற்றவர் அனுதாபத்தையும் பெற முடியவில்லை. என்ன செய்வது.மதியில்லா மாந்தர்கள். இதைத்தானே உங்கள் கதை சொல்கிறது. நல்ல கருத்து.