6.03.2009

இன்றைய காதல் தத்துவம்

எவ்வளவு
செலவழித்தாலும்
முடிவதில்லை
காதல்...

காதலால்தான்
துண்டுவிழுகிறது
நிறைய பேரின்
பட்ஜெட்டிலும்
வாழ்க்கையிலும்


முதல் காதல்
மறக்காதாம்...
இரண்டாவதாகவும்
காதல் வருமா ?

கோயில் இல்லை
பூஜை இல்லை
அர்ச்சிக்கப்படுகிறது
காதல்

வாழ்கிறவர்கள்
மனதில் உள்ளதோ
இல்லையோ
சாகிறவர்கள் மனதில்
சத்தியமாய் இருக்கும்
ஒரு காதல்
காதல் இல்லாமல்
முடிந்துவிடாது
வாழ்க்கை


சாமியை காண்பதற்காக
முற்றும் துறக்கிறோம்
காதலை கண்டதற்காகவும்
முற்றும் துறக்கிறோம்36 comments:

VSK said...

எழுத முடியாதெனச் சொல்லி என்னென்னமோ அட்டகாசமாக எழுதுறீங்களே சாமி!

நல்ல அலசல்.... காதலைப் பற்றி!

அந்த அர்ச்சிக்கப்படுதல் மனதைத் தொட்டது!

VSK said...

வண்ணம் ரொம்பவே கண்ணை உறுத்துகிறது! கொஞ்ச[சு]ம் கவனிக்கலாமே!
:))

நட்புடன் ஜமால் said...

\\எவ்வளவு
செலவழித்தாலும்
முடிவதில்லை
காதல்...\\

ஏனுங்க முடியோனும்

நட்புடன் ஜமால் said...

முதல் காதல்
மறக்காதாம்...
இரண்டாவதாகவும்
காதல் வருமா ?\\

மூன்றாவதாகக்கூட வரும்

முதல் மறக்காது

நட்புடன் ஜமால் said...

\\காதல் இல்லாமல்
முடிந்துவிடாது
வாழ்க்கை\\


முடிந்துவிட்ட வாழ்க்கையில்க்கூட‌
(இறந்து விட்டிருந்த ஒருத்தர் மீது)
காதல் இருக்கும்
யாரேனும் ஒருவருக்கு

நட்புடன் ஜமால் said...

லேபில்: இவை கவிதையில்லை


ஆம் நண்பரே

இவை கவிதையே அல்ல‌

காதல் ...

காதல் ...

காதல் ...

sakthi said...

வாழ்கிறவர்கள்
மனதில் உள்ளதோ
இல்லையோ
சாகிறவர்கள் மனதில்
சத்தியமாய் இருக்கும்
ஒரு காதல்
காதல் இல்லாமல்
முடிந்துவிடாது
வாழ்க்கை


உண்மை

சத்தியமான வார்த்தை

ரசித்தேன் உங்கள் வரிகளை

வாழ்த்துக்கள்

sakthi said...

நட்புடன் ஜமால் said...

லேபில்: இவை கவிதையில்லை


ஆம் நண்பரே

இவை கவிதையே அல்ல‌

காதல் ...

காதல் ...

காதல் ...


ரீப்பீட்டு

மயாதி said...

VSK said...

//எழுத முடியாதெனச் சொல்லி என்னென்னமோ அட்டகாசமாக எழுதுறீங்களே சாமி!

நல்ல அலசல்.... காதலைப் பற்றி!

அந்த அர்ச்சிக்கப்படுதல் மனதைத் தொட்டது!//


நான் இப்படத்தானுங்கோ ஏதாவது அலட்டிக்கொண்டு சீ சீ அலசிக்கொண்டுதன் இருப்பன்

நன்றி நண்பா

மயாதி said...

VSK said...

//வண்ணம் ரொம்பவே கண்ணை உறுத்துகிறது! கொஞ்ச[சு]ம் கவனிக்கலாமே!//

அப்படியா கவனிச்சாப் போச்சு !

மயாதி said...

நட்புடன் ஜமால் said...


\\எவ்வளவு
செலவழித்தாலும்
முடிவதில்லை
காதல்...\\

ஏனுங்க முடியோனும்


ஏனுங்கோ நான் சின்ன பையன் தெரியாத்தனமா ஏதோ தத்துவம் அது இது என்று சொல்ல ..

வேணாம் விட்டுடுங்க அண்ணா அழுதுடுவன் ,
உங்கட அனுபவத்துக்கும் அறிவுக்கும் முன்னால நம்மளால ஏலாது சாமி ..

நன்றி அண்ணா !

முதல் காதல்
மறக்காதாம்...
இரண்டாவதாகவும்
காதல் வருமா ?\\

மூன்றாவதாகக்கூட வரும்

முதல் மறக்காது/////////

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

//முடிந்துவிட்ட வாழ்க்கையில்க்கூட‌
(இறந்து விட்டிருந்த ஒருத்தர் மீது)
காதல் இருக்கும்
யாரேனும் ஒருவருக்கு//

அட நமக்கு இந்த ஐடியா வரலையே
சூப்பர் அண்ணா !
தாங்கல ...

மயாதி said...

sakthi said...

//வாழ்கிறவர்கள்
மனதில் உள்ளதோ
இல்லையோ
சாகிறவர்கள் மனதில்
சத்தியமாய் இருக்கும்
ஒரு காதல்
காதல் இல்லாமல்
முடிந்துவிடாது
வாழ்க்கை


உண்மை
சத்தியமான வார்த்தை

ரசித்தேன் உங்கள் வரிகளை

வாழ்த்துக்கள்//


நமக்கு பொய் சொல்ல வராதுங்கோ..
நன்றி

மயாதி said...

லேபில்: இவை கவிதையில்லை

நட்புடன் ஜமால் said...

//ஆம் நண்பரே

இவை கவிதையே அல்ல‌

காதல் ...

காதல் ...

காதல் ...//

sakthi said...

//நட்புடன் ஜமால் said...

லேபில்: இவை கவிதையில்லை


ஆம் நண்பரே

இவை கவிதையே அல்ல‌

காதல் ...

காதல் ...

காதல் ...


ரீப்பீட்டு//

இப்படி ஒரு லேபில் போட்டா,
இல்லை இது கவிதைதான் என்று சொல்லுவீங்க எண்டு பார்த்தா கவுத்திட்டேன்களே..

அதுக்கென்ன காதலும் கவிதைதானே என.

ஆ.முத்துராமலிங்கம் said...

காதலை பற்றி சின்ன நையாண்டி இழையோடியபடி சில விடயங்களை அழகாக சொல்லி விட்டீர்கள்.

நல்லா இருக்கு

நட்புடன் ஜமால் said...

\\
அதுக்கென்ன காதலும் கவிதைதானே என\\


கவிதைகள் அனைத்தும் காதல் அல்ல‌

அனைத்து காதலுமே

கவிதை தான் இரசிப்பவர்களுக்கு

நட்புடன் ஜமால் said...

\\இப்படி ஒரு லேபில் போட்டா,
இல்லை இது கவிதைதான் என்று சொல்லுவீங்க எண்டு பார்த்தா கவுத்திட்டேன்களே..\\


உங்கட நேர்மை பிடித்திருக்கின்றது.

இது கவிதை தான் என்று சொல்லும் அளவுக்கு நமக்கு தகுதியில்லீங்கோ ...

அன்புடன் அருணா said...

ரொம்ப நல்லாருக்கு!!!

மயாதி said...

ஆ.முத்துராமலிங்கம் said..
//
காதலை பற்றி சின்ன நையாண்டி இழையோடியபடி சில விடயங்களை அழகாக சொல்லி விட்டீர்கள்.

நல்லா இருக்கு//

நன்றி முத்து + ராமன் +லிங்கம் ...

மயாதி said...

அன்புடன் அருணா said...
//
ரொம்ப நல்லாருக்கு!!!//

என்னங்க இது காதலைப் பற்றி சும்மா உலரினாலே நல்லத்தான் இருக்கும் போல...
நன்றி அக்கா

மயாதி said...

Blogger நட்புடன் ஜமால் said...

\\
அதுக்கென்ன காதலும் கவிதைதானே என\\


கவிதைகள் அனைத்தும் காதல் அல்ல‌

அனைத்து காதலுமே
கவிதை தான் இரசிப்பவர்களுக்கு///


அதானே சொன்னன் உங்களுக்கு முன்னால நாங்க தூசு

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

\\இப்படி ஒரு லேபில் போட்டா,
இல்லை இது கவிதைதான் என்று சொல்லுவீங்க எண்டு பார்த்தா கவுத்திட்டேன்களே..\\


உங்கட நேர்மை பிடித்திருக்கின்றது.

இது கவிதை தான் என்று சொல்லும் அளவுக்கு நமக்கு தகுதியில்லீங்கோ//


உண்மைய சொல்லுறதுல என்ன இருக்கு நாமெல்லாம் ஒரு குடும்பம் மாதிரி தானே...

நாம் என்று சொன்னது நேர்மையான பதிவாளர்களை ....

என்னது உங்களுக்கு தகுதி இல்லையா ?
அவையடக்கம் கொஞ்சம் ஓவர் அண்ணா ..

சேரல் said...

//எவ்வளவு
செலவழித்தாலும்
முடிவதில்லை
காதல்...
//

எவ்வளவு எழுதியும் தீர்வதில்லை காதல் :)

-ப்ரியமுடன்
சேரல்

மயாதி said...

//எவ்வளவு
சேரல் said...

//செலவழித்தாலும்
முடிவதில்லை
காதல்...
//

எவ்வளவு எழுதியும் தீர்வதில்லை காதல் :)//


என்னங்க இண்டைக்கு பின்னூட்டம் எல்லாமே கவிதையா இருக்கு....

அது முடியாது
அனால்
நிறைய
வாழ்க்கைகளை
முடிக்கும் காதல்..

thanks

S.A. நவாஸுதீன் said...

எவ்வளவு
செலவழித்தாலும்
முடிவதில்லை
காதல்...

செலவு செய்யப்பட்டாலே அது காதல்.

S.A. நவாஸுதீன் said...

காதலால்தான்
துண்டுவிழுகிறது
நிறைய பேரின்
பட்ஜெட்டிலும்
வாழ்க்கையிலும்

அதை நிரப்புவதும் காதல் தான்.

S.A. நவாஸுதீன் said...

முதல் காதல்
மறக்காதாம்...
இரண்டாவதாகவும்
காதல் வருமா ?

காதல் என்பது ஒன்றுதான். வாடகை ஏறும்போது வீடு மாறுவதைப் போலதான். காதல் இடம் மாறிக் கொண்டிருக்கும். இடம் தான் எண்ணிக்கையில் கூடலாம். (சும்மா தமாசு)

S.A. நவாஸுதீன் said...

வாழ்கிறவர்கள்
மனதில் உள்ளதோ
இல்லையோ
சாகிறவர்கள் மனதில்
சத்தியமாய் இருக்கும்
ஒரு காதல்
காதல் இல்லாமல்
முடிந்துவிடாது
வாழ்க்கை

சரிதான்

மயாதி said...

வந்துட்டிங்களா அண்ணா ....
S.A. நவாஸுதீன் said..

//காதலால்தான்
துண்டுவிழுகிறது
நிறைய பேரின்
பட்ஜெட்டிலும்
வாழ்க்கையிலும்

அதை நிரப்புவதும் காதல் தான்.//
ஜமால் அண்ணா போட்டு தாக்கினது போதாது என்று நீங்க வேற!!!!!!!!!!
இனிமே இந்த தத்துவம் பேசுற வேலையே வேணாம் பேசாம கவிதை மட்டுமே எழுதலாம் என்று முடிவு எடுத்துட்டன்...

பதில் கவிதை எல்லாம் நல்லா இருக்கு .
நன்றி அண்ணா !

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

//எவ்வளவு
செலவழித்தாலும்
முடிவதில்லை
காதல்...

செலவு செய்யப்பட்டாலே அது காதல்.//


அண்ணிக்கு நிறைய செலவழிச்சு இருக்கிங்க போல ....

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

//முதல் காதல்
மறக்காதாம்...
இரண்டாவதாகவும்
காதல் வருமா ?

காதல் என்பது ஒன்றுதான். வாடகை ஏறும்போது வீடு மாறுவதைப் போலதான். காதல் இடம் மாறிக் கொண்டிருக்கும். இடம் தான் எண்ணிக்கையில் கூடலாம். (சும்மா//

இதுவெல்லோ தத்துவம் !
நம்மால முடியாது சாமி விட்டுடுங்க ..

அபுஅஃப்ஸர் said...

//காதலால்தான்
துண்டுவிழுகிறது
நிறைய பேரின்
பட்ஜெட்டிலும்
வாழ்க்கையிலும்//

துண்டுமட்டுமே விழுது
தலையே விழுது

சினிமா படங்களெல்லாம் பார்ப்பது இல்லியா

அபுஅஃப்ஸர் said...

//முதல் காதல்
மறக்காதாம்...
இரண்டாவதாகவும்
காதல் வருமா ?
//

இரண்டு என்னா 8 கூட வரும் ஆனாலும் முதல் காதல் முதலில் பிழிந்த தேங்காய்பால் மாதிரி

அபுஅஃப்ஸர் said...

//சாகிறவர்கள் மனதில்
சத்தியமாய் இருக்கும்//

செத்தவர்க்ளை பற்றி ஒரு காதல் மனதில் இருக்கும்

நாணல் said...

//கோயில் இல்லை
பூஜை இல்லை
அர்ச்சிக்கப்படுகிறது
காதல்//

nalla irukkungka...

//சாகிறவர்கள் மனதில்
சத்தியமாய் இருக்கும்
ஒரு காதல்
காதல் இல்லாமல்
முடிந்துவிடாது
வாழ்க்கை//

unmai thaan ...

மயாதி said...

அபுஅஃப்ஸர் said...
//காதலால்தான்
துண்டுவிழுகிறது
நிறைய பேரின்
பட்ஜெட்டிலும்
வாழ்க்கையிலும்//

துண்டுமட்டுமே விழுது
தலையே விழுது

சினிமா படங்களெல்லாம் பார்ப்பது இல்லியா////


//முதல் காதல்
மறக்காதாம்...
இரண்டாவதாகவும்
காதல் வருமா ?
//

இரண்டு என்னா 8 கூட வரும் ஆனாலும் முதல் காதல் முதலில் பிழிந்த தேங்காய்பால் ///


முடியல முடியல....
விட்டுவிடுங்க தப்பிப்போரன்
நன்றி