6.22.2009

காதலைத் தொலைத்தவர்களுக்காக மட்டும் (கட்டாயமல்ல )

காதலில்
தொலையலாம்
யாரும் காதலை
தொலைக்க
முடியாது...


காதல்
புனிதமானது ....
காதலிப்பவர்
விட்டுப் போனாலும்
காதல்
யாரையும்
விட்டுப்போகாது


காதலுக்காக
தற்கொலை
செய்பவர்கள்
தங்களை
மட்டுமல்ல
காதலையும்
கொலை
செய்கிறார்கள்...
சாக வைப்பதல்ல
உயிர்ப்பிப்பதே
காதல்...


நீங்கள் காதலை
தொலைத்தவர்களா?
இல்லை ...
உங்களைத்
தொலைத்தவர்கள்....
உங்களைக்
கண்டுபிடியுங்கள்
உள்ளேயே
ஒட்டிக் கொண்டிருக்கிறது
இன்னும் காதல்
2 comments:

பிரியமுடன்.........வசந்த் said...

காதல் ஒளித்து விளையாடும் விளையாட்டுத்தானே

ஒருகட்டத்தில் ஒரு கட்டத்தில் ஒரேயடியாக தொலைந்து விடுகிறது

கவிதை வரிகள் மெருகு கூடுகிறது மயாதி

மயாதி said...

பிரியமுடன்.........வசந்த் said...

காதல் ஒளித்து விளையாடும் விளையாட்டுத்தானே

ஒருகட்டத்தில் ஒரு கட்டத்தில் ஒரேயடியாக தொலைந்து விடுகிறது

கவிதை வரிகள் மெருகு கூடுகிறது மயாதி

June 22, 2009 9:32 அம//

நன்றி வசந்த்