6.13.2009

தவறி விழுந்த வார்த்தைகள்நாவினால்
சுட்டபுண்
ஆறிவிடும்
ஆறாதே
உன் மௌனம்
சுட்ட புண்...

************

நீ
உச்சரிக்கவில்லை
என்பதால்
மெல்லினம்
ஆகிப்போனது...
வல்லினம்

*****************
உன் வாயில்
இருந்து
தவறி விழுந்த
ஒரு
வார்த்தை
கவிதையாகிப்
போய்க்
கிடக்கிறது..

**************

நீ மௌனமாகவே
இருப்பதால்
சந்தோசத்தில்
குதிக்கின்றன
வார்த்தைகள்
உதிர்த்துவிடாமல்
உன்னோடேயே
வைத்துக்
கொள்வதால்...

***************
நாங்கள் கதைத்தால்
வார்த்தைகள்
வாக்கியமாகும்
நீ கதைத்தால்
காவியமாகும்...

****************

நீ
உச்சரிக்கின்ற
ஆங்கில
வார்த்தையோடு
இனக்கலவரம்
நடத்துகின்றன
தமிழ்
வார்த்தைகள்...
ஆக்கிரமிப்பு
செய்துவிட்டதாய்

********************

உன் மௌனம்
வார்த்தைகளின்
மாநாடு...

**************

நீ எழுதி
வைத்த
வார்த்தைகள்...
தமிழுக்கு
உயில்

*****************

நாவடக்கம்
தேவைதான்
அதற்காக
என்னை
அடக்கம்
பண்ணிவிடாதே..

15 comments:

Anonymous said...

மெளனத்தைப் பற்றி மாநாடு அல்லவா இங்கு அரங்கேறியிருக்கிறது...

உன் கவிதைகள் கேட்டுமா அவள் மொழி பேசவில்லை.....

இங்கு நாங்களோ இதைப் படித்துவிட்டு
விழி மூடவும் மறந்தோம்...சொற்சுவை

nilavakan said...
This comment has been removed by the author.
மயாதி said...

தமிழரசி said...

மெளனத்தைப் பற்றி மாநாடு அல்லவா இங்கு அரங்கேறியிருக்கிறது...

உன் கவிதைகள் கேட்டுமா அவள் மொழி பேசவில்லை.....

இங்கு நாங்களோ இதைப் படித்துவிட்டு
விழி மூடவும் மறந்தோம்...சொற்சுவை//

நானே கடுப்பில இருக்கன் நீங்க வேற உசுப்பேத்தி விடாதீங்க அக்கா...

அது சரி யார் அவள் ? எனக்கே தெரியாதே....

நன்றி அக்ஸ் ...

நாணல் said...

hmm hmmm:))

மயாதி said...

நாணல் said...

hmm hmmm:))

என்னங்க நாணல் அவ்வளவு மோசமாகவா இருக்கு ?
ஹா ஹா ஹா...

நன்றி

ஆ.முத்துராமலிங்கம் said...

வார்த்தையை வைத்து விளையாடி இருக்கீங்க.

பிரியமுடன்.........வசந்த் said...

//நீ
உச்சரிக்கின்ற
ஆங்கில
வார்த்தையோடு
இனக்கலவரம்
நடத்துகின்றன
தமிழ்
வார்த்தைகள்...
ஆக்கிரமிப்பு
செய்துவிட்டதாய்
//
நல்லாயிருக்கு மயாதி

S.A. நவாஸுதீன் said...

நீ மௌனமாகவே
இருப்பதால்
சந்தோசத்தில்
குதிக்கின்றன
வார்த்தைகள்
உதிர்த்துவிடாமல்
உன்னோடேயே
வைத்துக்
கொள்வதால்...

மௌனத்தின் வித்தியாசமான கோணம். அழகு

sakthi said...

எத்தனை கவிதை தான் கைவசம் வைத்து உள்ளீர்கள்...

மயாதி said...

sakthi said...

எத்தனை கவிதை தான் கைவசம் வைத்து உள்ளீர்கள்...//

கைவசம் என்பதை விட மனவசம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்...
நன்றி தோழி.

தமிழிச்சி said...

இத்தனை கவிதை எழுத உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது? வீட்டில் ஒரு வேலையும் செய்ய மாட்டீர்களோ? ஹ ஹ ஹ

நட்புடன் ஜமால் said...

உன் வாயில்
இருந்து
தவறி விழுந்த
ஒரு
வார்த்தை
கவிதையாகிப்
போய்க்
கிடக்கிறது..

**************

நீ மௌனமாகவே
இருப்பதால்
சந்தோசத்தில்
குதிக்கின்றன
வார்த்தைகள்
உதிர்த்துவிடாமல்
உன்னோடேயே
வைத்துக்
கொள்வதால்...

***************
நாங்கள் கதைத்தால்
வார்த்தைகள்
வாக்கியமாகும்
நீ கதைத்தால்
காவியமாகும்...------------------------


இவையாவன
யாம் இம்முறை
இன்புற்று
இரசித்தது.

மயாதி said...

தமிழிச்சி said...
இத்தனை கவிதை எழுத உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது? வீட்டில் ஒரு வேலையும் செய்ய மாட்டீர்களோ? ஹ ஹ ஹ//

எப்படீங்க இவ்வளவு சரியா கண்டு பிடிச்சீங்க?

மயாதி said...

நன்றி ஜமால் அண்ணா !

பிரியமுடன்.........வசந்த் said...

//நீ மௌனமாகவே
இருப்பதால்
சந்தோசத்தில்
குதிக்கின்றன
வார்த்தைகள்
உதிர்த்துவிடாமல்
உன்னோடேயே
வைத்துக்
கொள்வதால்...//

என்னங்க

இப்படி வார்த்தை ஜாலம்

போட்டு அசத்துறீங்க.....