6.19.2009

வரம் வாங்கி கவிதை எழுதுபவன்

கவிதை எழுத
முடியலையே
என்று தவம்
இருந்தேன்
வரமாக
நீ
கிடைத்தாய்...
இப்போ கவிதை
தவிர
வேறு எழுத
முடியவில்லை....

*****************
அவரவர்
பார்ப்பதைத்தான்
கவிதையாக
எழுதுவார்கள்
நானோ
நீ
பார்ப்பதையே
கவிதையாக
எழுதுகிறேன்...

*****************
என்னைக்
காதலிக்காவிட்டாலும்
என் கவிதைகளை
நீ காதலித்தாக
வேண்டும்...
உன்னையே நீ
காதலிக்காவிட்டால்?


7 comments:

சென்ஷி said...

ஆரம்பிச்சுட்டாருய்யா இன்னிக்கு கோட்டாவை! :))

இரண்டாவது நல்லாயிருக்குது!

தமிழரசி said...

வார்த்தை வரம் வாங்கி வந்துள்ளாய்.....கவிதைகளை நீ காதலிக்க காதல் உன்னை கவிஞனாக்குகிறது.....

மயாதி said...

சென்ஷி said...

ஆரம்பிச்சுட்டாருய்யா இன்னிக்கு கோட்டாவை! :))

இரண்டாவது நல்லாயிருக்குது!

June 19, 2009 8:16 PM//

என்ன தல இது புதுக் கணக்கு ?
நன்றி

மயாதி said...

தமிழரசி said...

வார்த்தை வரம் வாங்கி வந்துள்ளாய்.....கவிதைகளை நீ காதலிக்க காதல் உன்னை கவிஞனாக்குகிறது....//

என்ன அக்கா செய்யுறது நீங்க தம்பிக்கு அக்கறையா ஒரு பொண்ண பார்த்து கொடுத்தா நான் ஏன் இப்படி கவிதையெல்லாம் போய் காதலிக்கப் போறன்...

S.A. நவாஸுதீன் said...

என்னைக்
காதலிக்காவிட்டாலும்
என் கவிதைகளை
நீ காதலித்தாக
வேண்டும்...
உன்னையே நீ
காதலிக்காவிட்டால்?

இது ரொம்ப நல்லா இருக்கு

nilavakan said...
This comment has been removed by the author.
தமிழ்ப்பறவை said...

//*****************
என்னைக்
காதலிக்காவிட்டாலும்
என் கவிதைகளை
நீ காதலித்தாக
வேண்டும்...
உன்னையே நீ
காதலிக்காவிட்டால்?
//
வேற வழியே இல்லை அவங்களுக்கு...