பொய்யாகத்தான்
சிரிக்கிறார்கள்
என்று
தெரிந்தும்
பதிலுக்கு
சிரித்து விட்டுத்தான்
போக
வேண்டியிருக்கிறது!
மேலதிகமாக
வேலை
செய்து வரும்
மேலதிக
சம்பளத்திற்கு
மேலதிகமாக
ஏதாவது
செலவு...
வந்துவிடுகிறது
ஒவ்வொரு மாதமும்!
மதுப்போத்தல்
வாங்கும் போது
அழுத்துக்கொல்வதை
விட....
அதிகமாக
அழுத்துக்கொல்கிறது
மனசு
பிள்ளைக்கு
பால் போத்தல்
வாங்கும் போது!
விலைவாசி
ஏறிவிட்டதே
என்று....
வாங்கிய
கடனைத்
திருப்பிக்கொடுக்கும்
போது
சந்தோசப்படுகிறது
மனசு...
இன்னுமொருமுறை
நம்பிக் கடன்
தருவார்
என்று...
மரண வீட்டில்
அறிமுகமானவர்களை
பார்த்து
வழமைபோல்
சிரிக்கலாமா
இல்லையா
என்று
இத்தனை
வயசாகியும்
தெரியவில்லை
எனககு
சிக்கெரெட்
வாசத்தை விட
அதை
மறைப்பதற்காக
பூசும்
வாசத்தை
வைத்தே
கண்டுபிடித்து
விடுகிறாள்
மனைவி
நான்
சிக்கெரெட்
பிடித்திருப்பதை ....
சிதறிக்கிடந்த
என்
அறையின்
பொருட்களை
ஒழுங்காக்கியபின்
தேடித்தான்
எடுக்க
வேண்டியிருக்கிறது
எனககு
தேவையான
போருட்களை....
நான்
சின்ன வயசில்
செய்ததாக
சொல்லும்
சாகசங்களை
மனைவி
பொய்
என்று
அறிந்து விட்டதால்
பிள்ளைகளிடமே
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
இன்னும்
கொஞ்ச நாளில்
பேரப்பிள்ளைகளிடம் தான்
சொல்லவேண்டியிருக்கும் .......
எல்லோருக்கும்
தெரிந்த
என்
முதல் காதலை
விட...
எனக்கு மட்டும்
தெரிந்த
முதல் காதலே
அதிகம்
சுவாரசியமாக
இருக்கிறது...
கையில்
கொஞ்சம்
அதிகமாக
பணம்
இருந்தாலே !
பக்கத்தில்
வருபவர்கள்
எல்லோரையும்
திருடனாகத்தான்
பார்க்கிறது
மனசு...
பழைய
காதலை
மறைப்பதற்காக
மனைவியை
அதிகம்
காதல்
செய்யவேண்டியிருக்கிறது
இப்போது ...
விடுமுறை
என்றாலே
வெளியேதான்
செல்லத் துடிக்கிறது
மனசு.....
வீட்டிலே
காத்துக்கிடக்கின்றன
நிறைய
வேலைகள்....
மயானத்தை
கடக்கும் போது
மட்டும்
வாழ்க்கையில்
அமைதி இல்லை
என்று
நினைக்க
தோன்றுவதில்லை
மனசுக்கு ...
வாசலில்
கொண்டுவந்து
தரும்
மரக்கறி
வியாபாரியிடம்
சண்டைபோட்டு
மிச்சம்
பிடிப்பதை விட
அதிகமாக
உபரிப்பணம் (Tips)
கொடுக்கிறாள்
மனைவி !
மேசை அருகே
பீசா
கொண்டுவருபவனுக்கு ...
பி.கு- நான் ஆரம்பத்தில் இட்ட எனக்குப் பிடித்தமான இடுகையை நிறையப்பேர் வாசித்து இருக்க மாட்டீர்கள் என்ற நம்ப்பிக்கையில் மீண்டும் பதிவிடுகிறேன். ஏற்கனவே வாசித்த நண்பர்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.அன்று தொடராக இட்டதை ஒரே இடுகையில் இடுகிறேன்.
39 comments:
எல்லாம் அழகு கவிதைகளாக இருக்கின்றது
இதை தவிர
\\மரண வீட்டில்
அறிமுகமானவர்களை
பார்த்து
வழமைபோல்
சிரிக்கலாமா
இல்லையா
என்று
இத்தனை
வயசாகியும்
தெரியவில்லை
எனககு\\
மிகவும் எதார்த்தமாய் இருக்கின்றது இது
அத்தனையும் நல்லா இருக்குது மயாதி... இதுதான் பிடிச்சுருக்குன்னு சொல்ல முடியாம எல்லாமே அசத்தல் ரகம்..
எனினும் எனக்கு பிடிச்ச சில வரிகள்...
/வாங்கிய
கடனைத்
திருப்பிக்கொடுக்கும்
போது
சந்தோசப்படுகிறது
மனசு...
இன்னுமொருமுறை
நம்பிக் கடன்
தருவார்
என்று...//
தவறா நினைச்சுகலைன்னா வாக்கியங்களை அடுக்குற முறையை கொஞ்சம் மாத்திப்பாருங்களேன்!
super
உண்மையா சொல்றேன், நான் உங்க ரசிகர் ஆயிட்டேன். கவிதையெல்லாம் எப்படி பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க?
simply superb i tell u
//பழைய
காதலை
மறைப்பதற்காக
மனைவியை
அதிகம்
காதல்
செய்யவேண்டியிருக்கிறது
இப்போது ...//
நீங்க இப்போ எங்க உட்கார்ந்து இருக்கீங்களோ நிற்குறீங்களோ, ஆனால், இந்த கவிதையில தான் உண்மையா நிற்கிறீர்கள்! சபாஷ்!
உங்கள் வலைப்பூவின் பெயரைப் போலவே கொஞ்சம் அல்ல நெஞ்சம் நிறையவே கொஞ்சுகிறது கவிதைகள்.....வாழ்கையின் எதார்த்தம் கவிதையாய் பொழிகிறது.....
எல்லா வரிகளுமே அருமை +யதார்த்தம்
பொய்யாகத்தான்
சிரிக்கிறார்கள்
என்று
தெரிந்தும்
பதிலுக்கு
சிரித்து விட்டுத்தான்
போக
வேண்டியிருக்கிறது!
நாமும் பொய்யாக!
மதுப்போத்தல்
வாங்கும் போது
அழுத்துக்கொல்வதை
விட....
அதிகமாக
அழுத்துக்கொல்கிறது
மனசு
பிள்ளைக்கு
பால் போத்தல்
வாங்கும் போது!
விலைவாசி
ஏறிவிட்டதே
என்று....
நல்ல சிந்தனை.
பணப்பற்றாக்குறை
வீட்டில் பிரச்னை
கவலையை மறக்க
போனான் கள்ளுக்கடை
இப்பொது பணமே இல்லை.
வாங்கிய
கடனைத்
திருப்பிக்கொடுக்கும்
போது
சந்தோசப்படுகிறது
மனசு...
இன்னுமொருமுறை
நம்பிக் கடன்
தருவார்
என்று...
யப்பா, கலக்குறீங்க. ரொம்ப எதார்த்தம்
மரண வீட்டில்
அறிமுகமானவர்களை
பார்த்து
வழமைபோல்
சிரிக்கலாமா
இல்லையா
என்று
இத்தனை
வயசாகியும்
தெரியவில்லை
எனககு
சான்ஸே இல்ல. இது டாப்
சிக்கெரெட்
வாசத்தை விட
அதை
மறைப்பதற்காக
பூசும்
வாசத்தை
வைத்தே
கண்டுபிடித்து
விடுகிறாள்
மனைவி
நான்
சிக்கெரெட்
பிடித்திருப்பதை ....
ஹா ஹா ஹா.
எல்லோருக்கும்
தெரிந்த
என்
முதல் காதலை
விட...
எனக்கு மட்டும்
தெரிந்த
முதல் காதலே
அதிகம்
சுவாரசியமாக
இருக்கிறது...
Super
வாசலில்
கொண்டுவந்து
தரும்
மரக்கறி
வியாபாரியிடம்
சண்டைபோட்டு
மிச்சம்
பிடிப்பதை விட
அதிகமாக
உபரிப்பணம் (Tips)
கொடுக்கிறாள்
மனைவி !
மேசை அருகே
பீசா
கொண்டுவருபவனுக்கு ...
ஹ்ம்ம். என்னத்த சொல்ல
எல்லா கவிதைகளுமே அருமையா இருக்கு மயாதி.
எல்லாம் அழகு கவிதைகளாக இருக்கின்றது
இதை தவிர
\\மரண வீட்டில்
அறிமுகமானவர்களை
பார்த்து
வழமைபோல்
சிரிக்கலாமா
இல்லையா
என்று
இத்தனை
வயசாகியும்
தெரியவில்லை
எனககு\\
மிகவும் எதார்த்தமாய் இருக்கின்றது இது//
நன்றி ஜமால் அண்ணா !
அப்ப ஒன்றுதான் உருப்படியா இருக்கா?
( சும்மா தமாஷ் அண்ணா)
சென்ஷி said...
தவறா நினைச்சுகலைன்னா வாக்கியங்களை அடுக்குற முறையை கொஞ்சம் மாத்திப்பாருங்களேன்!//
நிச்சயமாக இனி வரும் கவிதைகளில் கவனம் செலுத்துகிறேன் நண்பரே.....
( இதை எல்லோரும் வாசித்து விட்டார்களே இனி என்னத்துக்கு?)
நன்றி நண்பரே..
பனையூரான் said...
//super//
நன்றி நண்பரே
Thamizhmaangani said...
//உண்மையா சொல்றேன், நான் உங்க ரசிகர் ஆயிட்டேன். கவிதையெல்லாம் எப்படி பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க?
simply superb i tell உ//
நன்றி நண்பி...
எப்படி படிப்பெல்லாம் ? கவனமா படிங்க தங்கச்சி...
Thamizhmaangani said...
/பழைய
காதலை
மறைப்பதற்காக
மனைவியை
அதிகம்
காதல்
செய்யவேண்டியிருக்கிறது
இப்போது ...//
நீங்க இப்போ எங்க உட்கார்ந்து இருக்கீங்களோ நிற்குறீங்களோ, ஆனால், இந்த கவிதையில தான் உண்மையா நிற்கிறீர்கள்! சபாஷ்//
கால் கடுக்குது கொஞ்சம் இருக்கலாமா?
தமிழரசி said...
உங்கள் வலைப்பூவின் பெயரைப் போலவே கொஞ்சம் அல்ல நெஞ்சம் நிறையவே கொஞ்சுகிறது கவிதைகள்.....வாழ்கையின் எதார்த்தம் கவிதையாய் பொழிகிறது..//
நன்றி சகோதரி...
அரசியே சொல்லியாச்சு இனி என்ன ?
பூங்குழலி said...
//எல்லா வரிகளுமே அருமை +யதார்த்தம்//
வாருங்கள் தோழி ,,,வாழ்த்துக்கு நன்றி
வாருங்கள் நவாஸுதீன் அண்ணா ..
இப்படி ஒவ்வொரு வரியா புட்டு புட்டு வக்கிறீங்களே..
எப்படி அண்ணா இவ்வளவு பொறுமையும் நல்ல மனசும் உங்களுக்கு கிடைச்சுது?
//மதுப்போத்தல்
வாங்கும் போது
அழுத்துக்கொல்வதை
விட....//
அப்போ சரக்கு அடிச்சாதான் கவிதை வருமா?
கவிதைகள் அனைத்தும் நன்றாக உள்ளது.
படிப்பெல்லாம் நல்லா போகுது!:) நன்றி:)
Thamizhmaangani said...
//மதுப்போத்தல்
வாங்கும் போது
அழுத்துக்கொல்வதை
விட....//
அப்போ சரக்கு அடிச்சாதான் கவிதை வருமா?
கவிதைகள் அனைத்தும் நன்றாக உள்ளன...//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா...
சரி நான் அப்படி சொல்லவே இல்லையே !
/*மரண வீட்டில்
அறிமுகமானவர்களை
பார்த்து
வழமைபோல்
சிரிக்கலாமா
இல்லையா
என்று
இத்தனை
வயசாகியும்
தெரியவில்லை
எனககு
*/
அருமை...
//வாங்கிய
கடனைத்
திருப்பிக்கொடுக்கும்
போது
சந்தோசப்படுகிறது
மனசு...
இன்னுமொருமுறை
நம்பிக் கடன்
தருவார்
என்று..//
இதை சற்று சிரமப்பட்டே தேர்ந்தெடுத்தேன்...
மனைவி மற்றும் காதல் பற்றியவற்றிலிருந்து...
அத்தனையும் கணீர்!!
- karti n
kartin said...
இதை சற்று சிரமப்பட்டே தேர்ந்தெடுத்தேன்...
மனைவி மற்றும் காதல் பற்றியவற்றிலிருந்து...
அத்தனையும் கணீர்!!
- karti //
நன்றி மச்சோ !!!!!!!!!!
kartin said...
இதை சற்று சிரமப்பட்டே தேர்ந்தெடுத்தேன்...
மனைவி மற்றும் காதல் பற்றியவற்றிலிருந்து...
அத்தனையும் கணீர்!!
- karti //
நன்றி மச்சோ !!!!!!!!!!
அமுதா said...
//அருமை...//
நன்றி அமுதா அக்கா!
எதையும் குறை சொல்லமுடியாது.. எல்லாமே நல்லா இருக்கு
நசரேயன் said...
//எதையும் குறை சொல்லமுடியாது.. எல்லாமே நல்லா இருக்கு//
நன்றிங்க
எல்லாமே யதார்த்தமான கவிதைகள்....
//சிக்கெரெட்
வாசத்தை விட
அதை
மறைப்பதற்காக
பூசும்
வாசத்தை
வைத்தே
கண்டுபிடித்து
விடுகிறாள்
மனைவி
நான்
சிக்கெரெட்
பிடித்திருப்பதை .//
அய்யய்யோ கண்டுபிடுச்சுடுவாங்களா?
பிரம்மாதம்
நாகரீக உலகம் எல்லோரின் வாழ்க்கையையும் கோமாளித்தனமாக மாற்றிவிட்டது.
வாழ்வின் இயல்புகளை அருமையாகக் கூறியுள்ளீர்கள்.
எல்லாமே கலக்கல் பாஸ்...
அசத்தல்..
25-06-2009 - குங்குமத்தில் இந்த கவிதை பிரசுரமாகி இருக்கிறது. வாழ்த்துக்கள் மயாதி
S.A. நவாஸுதீன் said...
25-06-2009 - குங்குமத்தில் இந்த கவிதை பிரசுரமாகி இருக்கிறது. வாழ்த்துக்கள் மயாதி//
ஆமா நன்றி அண்ணா!
அது சரி குங்குமத்தில முழுவதும் வெளி வந்திருக்கா அல்லது ஒரு சின்ன பகுதி மட்டும் தானா? இங்கே குங்குமம் வந்து சேர இன்னும் ஒரு கிழமை செல்லும்
Post a Comment