6.19.2009

பார்வை ஒரு துளி
நீ
பார்த்தாய்
கரைந்தது
நிலவின் கறை...

.....................................
பார்க்காதே!
கண் கூசுகிறதாம்
சூரியனுக்கு...

.....................................
உன் பார்வையின்
சூட்டைக்
குளிப்பாட்டுகின்றன
கவிதைகள்

..................................
மௌனங்களில்
சேமிப்பதை
பார்வையில்
செலவழிக்கும்
ஊதாரி நீ ...

................................
நீ பார்க்கும்போது
உனக்குத்
தெரிவதைவிட
அதிகமாகத்
தெரிகிறேன்
எனக்கு நான்

..............................
வில்லை
உடைத்த
ராமன்
வந்தால் கூட
உன் பார்வை
அம்புகளை
வளைக்க
முடியாது..

.................................
நீ பார்த்தாய்
கல்லாக சபிக்கப்பட்ட
மனங்களுக்கு
விமோசனம்..

................................
வெட்கப்பட்டு
தலைகுனிந்து
போகாதே
நிறைய
மனங்களுக்கு
விமோசனம்
தேவை இங்கே...


13 comments:

சென்ஷி said...

//மௌனங்களில்
சேமிப்பதை
பார்வையில்
செலவழிக்கும்
ஊதாரி நீ ...//

செம்ம கலக்கல் :)

nilavakan said...
This comment has been removed by the author.
S.A. நவாஸுதீன் said...

மௌனங்களில்
சேமிப்பதை
பார்வையில்
செலவழிக்கும்
ஊதாரி நீ ...

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். சூப்பர்

sakthi said...

வெட்கப்பட்டு
தலைகுனிந்து
போகாதே
நிறைய
மனங்களுக்கு
விமோசனம்
தேவை இங்கே..

அழகு வரிகள்

யாழினி said...

அஹாஹா...எப்படி மாயாதி? கவித கவித உயிர புழியுது.

அட்டகாசம் போங்க!

பதிவன் said...

மயாதி,
உங்க கவிதையை குங்குமத்தில் வாசிச்சேன். நன்று.

மயாதி said...

சென்ஷி said...

//மௌனங்களில்
சேமிப்பதை
பார்வையில்
செலவழிக்கும்
ஊதாரி நீ ...//

செம்ம கலக்கல் :)//

நன்றி

மயாதி said...

சென்ஷி said...

//மௌனங்களில்
சேமிப்பதை
பார்வையில்
செலவழிக்கும்
ஊதாரி நீ ...//

செம்ம கலக்கல் :)//

நன்றி

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

மௌனங்களில்
சேமிப்பதை
பார்வையில்
செலவழிக்கும்
ஊதாரி நீ ...

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். சூப்பர்//

நன்றி

மயாதி said...

sakthi said...

வெட்கப்பட்டு
தலைகுனிந்து
போகாதே
நிறைய
மனங்களுக்கு
விமோசனம்
தேவை இங்கே..

அழகு வரிகள்//

நன்றிக்கா ....

மயாதி said...

யாழினி said...

அஹாஹா...எப்படி மாயாதி? கவித கவித உயிர புழியுது.

அட்டகாசம் போங்க!//

நன்றி யாழினி

மயாதி said...

பதிவன் said...

மயாதி,
உங்க கவிதையை குங்குமத்தில் வாசிச்சேன். நன்று.

தமிழ்ப்பறவை said...

//மௌனங்களில்
சேமிப்பதை
பார்வையில்
செலவழிக்கும்
ஊதாரி நீ ...//
எப்படி இப்படில்லாம்... நல்லா இருந்தது பார்வைத் துளிகள்