6.21.2009

ஒரு பதிவருக்காய் வழிந்த என் கவிதை....


எங்களையெல்லாம்
தமிழ்தான்
ஆளுகிறது
நீயோ
தமிழை
ஆளுகிறாய்...

தாய் மொழியால்
எல்லோருக்கும்
கௌரவம்..
தாய் மொழிக்கு
சிலரால்தான்
கௌரவம்
அதில் நீயும்
ஒன்று


எங்கள் எண்ணத்தில்
வார்த்தைகளே
வந்து விழும்
உன் எண்ணத்திலோ
கவிதைகளே
வந்து விழும் ...

உன்
அளவுக்கதிகமான
காதல்
சேமிக்கப்பட
முடியாமல்
கொட்டி வழிகிறது
கவிதைகளாய்..

பசியைப் பற்றி
நீ எழுதினாய்
ஒருநாள்
சில பேர்
பசியை
மறந்திருந்தனர்
பலநாள்..


இதுவரை
தமிழ் இனித்தது
இப்போது
ஓசையும்
எழுப்புகிறது
உன்னால்...

வற்றாத உன்
கவி ஊற்றுக்கு
சிறு துளியாய்
என் கவித்துளி
சமர்ப்பணம்...


அப்பாடா!
உன்னைபற்றி
எழுதவில்லை
எனறு..
என்னை
நச்சரித்துக்கொண்டே
இருந்த கவிதைகள்
இனியாவது
நிம்மதியாய்
இருக்க விடுமா
என்னை..


12 comments:

சென்ஷி said...

:)

அந்தப்பதிவருக்கு வாழ்த்துக்கள்!

ஆயில்யன் said...

கவிதை பெற்ற அந்தப்பதிவருக்கு வாழ்த்துக்கள்! :)

நட்புடன் ஜமால் said...

கவிதையாய் ஒரு கவிஞனை பாட வைத்த அந்த கவிஞருக்கு வாழ்த்துகள்

யாழினி said...

பதிவருக்கு வாழ்த்துக்கள்!

ஆனால் பதிவர் யாரென்று சொல்லவேயில்லையே?

தமிழ்ப்பறவை said...

அந்தப் பதிவரைப் பத்தி சொல்லலாமே...தெரிந்து கொள்கிறேன். அதிலென்ன சஸ்பென்ஸ்...

S.A. நவாஸுதீன் said...

எங்கள் எண்ணத்தில்
வார்த்தைகளே
வந்து விழும்
உன் எண்ணத்திலோ
கவிதைகளே
வந்து விழும் ...

சரியாச் சொன்னீங்க மயாதி. இது என்னவோ நிஜம்தான். இவர் ஒரு கவியரசி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை

S.A. நவாஸுதீன் said...

பசியைப் பற்றி
நீ எழுதினாய்
ஒருநாள்
சில பேர்
பசியை
மறந்திருந்தனர்
பலநாள்..

நெகிழவைத்த கவிதைதான் அது.

S.A. நவாஸுதீன் said...

அப்பாடா!
உன்னைபற்றி
எழுதவில்லை
எனறு..
என்னை
நச்சரித்துக்கொண்டே
இருந்த கவிதைகள்
இனியாவது
நிம்மதியாய்
இருக்க விடுமா

இது மயாதி "டச்"

Anonymous said...

மெய் சிலிர்க்கவில்லை

உயிர் சிலிர்த்தேன்.....

நன்றிப்பா....
என் தம்பி என்பதால் அல்ல... நீயும் என் இனம் தான் தமிழன் என்பதால் உறவுகளுக்கு இடையே வேஷ உடை எதற்கு என்பதால் நன்றி......

நான் உன்னை எழுதனும் என்று சொன்னேன் என்னை நீ முந்திக் கொண்டாய்.....

sakthi said...

தமிழரசியாரே வாழ்த்துக்கள்....

ஒருவரை மனம் திறந்து பாராட்ட மிகப்பெரிய மனம் வேண்டும் மயாதி
அது உங்களிடம் இருக்கின்றது....

அந்த நல்ல எண்ணத்திற்கு பாராட்டுக்கள்....

வாழ்க வளமுடன்!!!!

தமிழிச்சி said...

பெயர் தெரியாத பதிவருக்கு என் வாழ்த்துக்கள்.

மயாதி said...

என் அன்பு அக்காவை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்