6.30.2009

வாழ்க்கை நிறையக் கவிதை -பகுதி 3

பல வருடங்கள்
படித்து
தலைமைச்
சமையல் காரன்
ஆனவனுக்குக் கூட...
முதலாம் வகுப்பே
படித்த அம்மாவின்
கைப் பக்குவம்
இல்லை...



என் நகம்
வெட்டும் நான்
உயர் ஜாதி...
என் தலைமுடி
வெட்டுபவன்
கீழ்ஜாதி...?



நாளைக்கு
நான்
வேலைக்கு
வேளைக்குப்
போக வேண்டும்
என்பதற்காக ....
என் நித்திரையை
குழம்பி விடாமல்
நடுச்சாமத்தில்
அழும் குழந்தையை
அவசரப்பட்டு
அணைக்கும்..
மனைவியின்
அக்கறையை
ரசிப்பதற்காகவே...
விழித்துக் கொள்கிறது
மனசு...



வேறு பெண்களைப்
பார்த்தாலே
சகோதரியாக
நினைக்கும் மனசு
வீதியில் நின்று
``போலாமா ?``
என்று கேட்கும்
பெண்களை
என்ன
முறைகொண்டு
நினைப்பது...?

குங்குமத் தொடர் தொடரும்..
இது அவசரமாய் கவிதை கேட்ட ஜமால் அண்ணாவுக்காக சமர்ப்பணம்...

24 comments:

S.A. நவாஸுதீன் said...

பல வருடங்கள்
படித்து
தலைமைச்
சமையல் காரன்
ஆனவனுக்குக் கூட...
முதலாம் வகுப்பே
படித்த அம்மாவின்
கைப் பக்குவம்
இல்லை...

ஹா ஹா. இது நிதர்சனமான உண்மை

S.A. நவாஸுதீன் said...

என் நகம்
வெட்டும் நான்
உயர் ஜாதி...
என் தலைமுடி
வெட்டுபவன்
கீழ்ஜாதி...?

ஹ்ம்ம்.

S.A. நவாஸுதீன் said...

நாளைக்கு
நான்
வேலைக்கு
வேளைக்குப்
போக வேண்டும்
என்பதற்காக ....
என் நித்திரையை
குழம்பி விடாமல்
நடுச்சாமத்தில்
அழும் குழந்தையை
அவசரப்பட்டு
அணைக்கும்..
மனைவியின்
அக்கறையை
ரசிப்பதற்காகவே...
விழித்துக் கொள்கிறது
மனசு...

அழகு

நட்புடன் ஜமால் said...

வாழ்க்கையே ஒரு கவிதைதான்

நட்புடன் ஜமால் said...

வாழ்க்கை

நிறைய(வும்)

கவிதையாக வாழ வேண்டும் ...

அமுதா said...

/*மனைவியின்
அக்கறையை
ரசிப்பதற்காகவே...
விழித்துக் கொள்கிறது
மனசு */
அழகு

காமராஜ் said...

நல்லாருக்கு
ரெண்டாம் கவிதை சூப்பர்
மற்றவை சூப்பரோ சூப்பர்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஹலோ! எப்படி உங்கள் சிந்தனை போகுது என்று சிந்தித்தே நான் களைத்துப் போனேன்.
எல்லாம் சூப்பர். அம்மாக்கு ice வைத்தது மிகவும் nice.

பாலா said...

superunga

நாளைக்கு
நான்
வேலைக்கு
வேளைக்குப்
போக வேண்டும்
என்பதற்காக ....
என் நித்திரையை
குழம்பி விடாமல்
நடுச்சாமத்தில்
அழும் குழந்தையை
அவசரப்பட்டு
அணைக்கும்..
மனைவியின்
அக்கறையை
ரசிப்பதற்காகவே...
விழித்துக் கொள்கிறது
மனசு...

ithu classssssssssssssssssss

மயாதி said...

//ஹா ஹா. இது நிதர்சனமான உண்மை

அழகு//


நன்றி நவாஸ் அண்ணா !

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

வாழ்க்கை

நிறைய(வும்)

கவிதையாக வாழ வேண்டும் ...

July 1, 2009 12:51 அம//

உண்மைதான் !
நன்றி அண்ணா...

மயாதி said...

அமுதா said...

/*மனைவியின்
அக்கறையை
ரசிப்பதற்காகவே...
விழித்துக் கொள்கிறது
மனசு */
அழகு

July 1, ௨௦௦//

நன்றி அக்கா

மயாதி said...
This comment has been removed by the author.
மயாதி said...

காமராஜ் said...

நல்லாருக்கு
ரெண்டாம் கவிதை சூப்பர்
மற்றவை சூப்பரோ சூப்பர்.
//

நன்றி நண்பரே!

மயாதி said...

ஜெஸ்வந்தி said...

ஹலோ! எப்படி உங்கள் சிந்தனை போகுது என்று சிந்தித்தே நான் களைத்துப் போனேன்.
எல்லாம் சூப்பர். அம்மாக்கு ice வைத்தது மிகவும் nice.//

காதலிக்கு வேண்டுமானால் கவிதைஎழுதி ஐஸ் வைக்கலாம் அது எப்படி அம்மாவுக்கு ஐஸ் வைக்கிறது?

மயாதி said...

பாலா said...

சுபெருங்க//

நன்றி அண்ணா !

ஜெஸ்வந்தி - Jeswanthy said...
This comment has been removed by the author.
ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//மயாதி said...
காதலிக்கு வேண்டுமானால் கவிதைஎழுதி ஐஸ் வைக்கலாம் அது எப்படி அம்மாவுக்கு ஐஸ் வைக்கிறது?//
கண்டு பிடிச்சுட்டேன்! கவிதைஎழுதி, அப்பாவுக்குத் தெரியாமல் அம்மாவிடம் pocket money வாங்கத்தான்.

மயாதி said...

ஜெஸ்வந்தி said...

//மயாதி said...
காதலிக்கு வேண்டுமானால் கவிதைஎழுதி ஐஸ் வைக்கலாம் அது எப்படி அம்மாவுக்கு ஐஸ் வைக்கிறது?//
கண்டு பிடிச்சுட்டேன்! கவிதைஎழுதி, அப்பாவுக்குத் தெரியாமல் அம்மாவிடம் pocket money வாங்கத்தான்.//

நானும் கண்டு பிடிச்சிட்டன், நீங்க லூசு தானே!
ஹா ஹா ஹா ......

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//இது அவசரமாய் கவிதை கேட்ட ஜமால் அண்ணாவுக்காக சமர்ப்பணம்...//

... அவசரமாய் எழுதியது என்பது கொஞ்சம் பில்டப் தானே ...? நல்லா இருக்கு

ஆ.சுதா said...

இரண்டாவது நன்று
மூன்றாவது அழகு.

மயாதி said...

நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...

//இது அவசரமாய் கவிதை கேட்ட ஜமால் அண்ணாவுக்காக சமர்ப்பணம்...//

... அவசரமாய் எழுதியது என்பது கொஞ்சம் பில்டப் தானே ...? நல்லா இருக்கு

July 1, 2009 5:19 அம//
நம்புங்கையா நம்புங்க...

காலையில சட் பண்ணும் போது ஜமால் அண்ணா கவிதை போடப்பா என்றார் , அதுக்குப் பிறகு யோசித்து எழுதினதுதான் அது...

மயாதி said...

ஆ.முத்துராமலிங்கம் said...

இரண்டாவது நன்று
மூன்றாவது அழகு.//

நன்றி நண்பரே..

அப்துல்மாலிக் said...

//நாளைக்கு
நான்
வேலைக்கு
வேளைக்குப்
போக வேண்டும்
என்பதற்காக ....
என் நித்திரையை
குழம்பி விடாமல்
நடுச்சாமத்தில்
அழும் குழந்தையை
அவசரப்பட்டு
அணைக்கும்..
மனைவியின்
அக்கறையை
ரசிப்பதற்காகவே...
விழித்துக் கொள்கிறது
மனசு...
//

ரசித்தது மனைவியின் அக்கரையை சொன்னவிதம் சூப்பர்