6.22.2009

உங்கள் குழந்தை எத்தனை அடி வளரும் என்று இப்போதே காட்டும் கணிபொறி !

உங்கள் குழந்தைகள் வளர்ந்த பிறகு எவ்வளவு உயரத்தை எட்டிப் பிடிக்கும் என்று இப்போதே அனுமானித்துக் கொள்ள ஆசையாக உள்ளதா?

நல்லது

அதை அறிந்து கொள்ள இணையத்தில் நான் கண்ட ஒரு கணி பொறியை சொல்லுகிறேன்.

அதற்கு முன் சில அறிவுரைகள்,

இது கணித்துச் சொல்லுவது வெறுமனே , குழந்தை எவ்வளவு உயரத்துக்கு வளர்வதற்கான பாரம்பரியத் தகுதி பெற்றுள்ளது என்பதை மட்டுமே.
குழந்தைக்கு வழங்கப் படும் போசாக்கு மற்றும் குழந்தையை பாதிக்கும் வேறு நோய்கள் போன்றவைகளே குழந்தை அந்த உயரத்தை எட்டிப் பிடுக்குமா என்பதை தீர்மானிக்கும்.

http://www.keepkidshealthy.com/welcome/htcalculator.html

இந்த லிங்கில் சென்று அங்கே கிடைக்கும் கணிப்பானில் குழந்தையின் அம்மா மற்றும் அப்பாவின் உயரத்தை பதிவதன் மூலம் , எவ்வளவு உயரம் வரை உங்கள் குழந்தை வளரும் சாத்தியம் உள்ளது என்று அறிந்து கொள்ளுங்கள்.

குழந்தையின் வளர்ச்சி பற்றிய சந்தேகங்களை பின்னூட்டத்தில் கேளுங்கள்.

1 comment:

ஜெஸ்வந்தி said...

அடேயப்பா ஒருவருக்கும் பிள்ளை எந்த உயரம் வளரும் என்று அறிய விருப்பமில்லை என்று நினைக்கிறேன். உயரமாயிருந்தால் என்ன ? குட்டையாய் இருந்தால் என்ன ? பிள்ளை பிள்ளைதானே?