6.01.2009

இப்படிக்கு! பேசுவது உங்கள் காதல் ....

வைத்தியர் சொன்னார்
என் ரத்தம் முழுக்க
சீனியாம்
ஆஹா ....
உன் முத்தம்
செய்த வேலை

முருகன் கோயில்
பக்கம் மட்டும்
போய் விடாதே
மூன்றாவது
கல்யாணம் செய்யும்
ஆசை வந்துவிடும்
முருகனுக்கு

என் இதயத்திலிருந்து
வெளியே எடுத்து
விட்டேன் உன்னை
ரத்தத்தைக் கண்டால்
மயக்கம் வருமாமே
உனககு

கோயிலுக்குப் போனால்
எல்லோரும் சாமியைப்
பார்ப்பார்கள்
சாமி மட்டும்
உன்னைப் பார்க்கும்

நான் மென்மையான
மனசுக்காரனாம்
பின்னெப்படி
நீ இருக்குமிடம்
கல்லாகவா
இருக்கும்

நீ புறப்படுபோது
கையசைத்துப்
போகிறாய்
ஆசிர்வதிக்கப்படுகின்றன
என் கவிதைகள்

ஒவ்வொரு நாளின்
முடிவிலும்
கவலைப்படுகிறது
மனசு
உன்னோடு வாழாமல்
ஒரு நாள்
வீணாகிப்போனதே
என்று

நீ வெளியே
வந்தால்
அமாவாசையில் கூட
எட்டிப்பார்க்கிறது
நிலவு

நல்லூர்க் கோயில்
தேரைப் போல
மவுசு
பெறுகிறது
நீ பயணம்
செய்யும்
பஸ் வண்டி

பன்னிரண்டு
வருடத்துக்கொருமுறைதான்
குறிஞ்சி மலர்
பூக்குமாம்...
ஐயோ
இன்னும் பன்னிரண்டு
வருடம்
காத்திருக்க வேண்டுமா
உன்
புன்னகைக்கு

என்
தாய்மொழியில்தான்
அதிகம் வார்த்தைகள்
இருப்பதாய்
கர்வப்பட்டுக்கொண்ட
மனசு
உன்னைப் பற்றி
எழுதும் போது
புலம்புகிறது...
இன்னும் நிறைய
வார்த்தைகளை
கண்டுபிடிக்காமலேயே
விட்டுவிட்டோமென்று

நீ பொய்
சொல்வதில்லை
சொன்னாலும்
மெய்யாகிப்
போகிறது

32 comments:

S.A. நவாஸுதீன் said...

வைத்தியர் சொன்னார்
என் ரத்தம் முழுக்க
சீனியாம்
ஆஹா ....
உன் முத்தம்
செய்த வேலை

ஹா ஹா ஹா.

S.A. நவாஸுதீன் said...

முருகன் கோயில்
பக்கம் மட்டும்
போய் விடாதே
மூன்றாவது
கல்யாணம் செய்யும்
ஆசை வந்துவிடும்
முருகனுக்கு


என்
தாய்மொழியில்தான்
அதிகம் வார்த்தைகள்
இருப்பதாய்
கர்வப்பட்டுக்கொண்ட
மனசு
உன்னைப் பற்றி
எழுதும் போது
புலம்புகிறது...
இன்னும் நிறைய
வார்த்தைகளை
கண்டுபிடிக்காமலேயே
விட்டுவிட்டோமென்று

சூப்பர்

கவிக்கிழவன் said...

உன்னைப் பற்றி
எழுதும் போது
புலம்புகிறது...

meena said...

முருகன் கோயில்
பக்கம் மட்டும்
போய் விடாதே
மூன்றாவது
கல்யாணம் செய்யும்
ஆசை வந்துவிடும்
முருகனுக்கு\\\\\

கவித்துவத்துடன் நல்ல நையாண்டியும் செய்கிறீர்கள் அண்ணா.

மயாதி said...

நன்றி ....
கவிக்கிழவன்
நவாஸ் !!

கவிதையை விட
உங்கள் கருத்துகளை
அதிகம்
நேசிக்கிறேன்.

மயாதி said...

என்ன செய்றது மீனா தங்கச்சி....
நையாண்டி நமக்கு கூட பிறந்ததாச்சே!

ஜெஸ்வந்தி said...

அழகான கவிதை மயாதி. மிகவும் ரசித்தேன்..

மயாதி said...

நன்றி ஜெஸ்வந்தி....

உங்கள் புனை பெயரும் ஒரு கவிதை போலதான் இருக்கு.
ரசித்தேன்.

அபுஅஃப்ஸர் said...

பெண்மையை கடவுளே சைட் அடிக்கும் உங்க வரிகள் அற்புதம்

Thamizhmaangani said...

//வைத்தியர் சொன்னார்
என் ரத்தம் முழுக்க
சீனியாம்
ஆஹா ....
உன் முத்தம்
செய்த வேலை//

கவிஞர்ய்யா நீ! கலக்குறீங்க:)

Thamizhmaangani said...

//நீ வெளியே
வந்தால்
அமாவாசையில் கூட
எட்டிப்பார்க்கிறது
நிலவு//

ரூம் போட்டு யோசிப்பீங்களோ! சூப்பர்!
கவிதையில் வரும் ஒவ்வொரு வரியும் அருமையிலும் அருமை!:)

Anonymous said...

யாரங்கே அழைத்து வாருங்கள் இவர் காதலியை ....எம் பெருமான் முருகன் மயங்கும் பேரெழில் கொண்டோளை காண ஆவலாய் உள்ளேன்....

கவிதைகளில் காதல் ரசம்......

$anjaiGandh! said...

//வைத்தியர் சொன்னார்
என் ரத்தம் முழுக்க
சீனியாம்
ஆஹா ....
உன் முத்தம்
செய்த வேலை//

ஹாஹா..
ரொம்ப ரசிச்சேம் மயாதி.. :))

மயாதி said...

நன்றி அபுஅஃப்ஸர் ...

ரசித்துத்தனே படைச்சிருக்கான் கடவுள்..

மயாதி said...

Thamizhmaangani said...

//வைத்தியர் சொன்னார்
என் ரத்தம் முழுக்க
சீனியாம்
ஆஹா ....
உன் முத்தம்
செய்த வேலை//

கவிஞர்ய்யா நீ! கலக்குறீங்க:)

அப்பாடா நீங்களாவது சொல்லிட்டிங்களே ...
நன்றி.

Sivakumar said...
This comment has been removed by the author.
Sivakumar said...
This comment has been removed by the author.
nzpire said...

///நீ வெளியே
வந்தால்
அமாவாசையில் கூட
எட்டிப்பார்க்கிறது
நிலவு ///


எங்க ஒக்காந்துதான் யோசிக்கிறீங்களோ.....

ஒரு நல்ல வாசிப்புக்கு நன்றி.......

Shafi Blogs Here said...

மிகவும் நன்றாக இருக்கிறது கவி நன்பரே!! வாழ்த்துக்கள்...திரும்பியும் வந்து எட்டி பார்ப்போம்ல.

மயாதி said...

thanks

மயாதி said...

தமிழரசி said...
யாரங்கே அழைத்து வாருங்கள் இவர் காதலியை ....எம் பெருமான் முருகன் மயங்கும் பேரெழில் கொண்டோளை காண ஆவலாய் உள்ளேன்....

இருக்கிற பிரச்சனை போதாதென்று நீங்க வேற...

நன்றி தமிழரசி

மயாதி said...

Thamizhmaangani said...

//ரூம் போட்டு யோசிப்பீங்களோ! சூப்பர்!
கவிதையில் வரும் ஒவ்வொரு வரியும் அருமையிலும் அருமை!:)//

நீங்க வேற இருக்கிற வெயிலில வெளியில இருக்கவே ஏலாம இருக்கு இதுக்குள்ள ரூம் வேறயா?
AC ரூம் போடவெல்லாம் நமக்கு கட்டுப்படியாகாது ...தோழா / தோழி

மயாதி said...

// ஹாஹா..
ரொம்ப ரசிச்சேம் மயாதி.. :))
June 2, 2009 4:29 AM //

நல்லா ரசிங்க .....
உங்கள் ரசனைதானே
எனக்கு சாப்பாடு...
நன்றி

மயாதி said...

nzpire said...
///நீ வெளியே
வந்தால்
அமாவாசையில் கூட
எட்டிப்பார்க்கிறது
நிலவு ///


எங்க ஒக்காந்துதான் யோசிக்கிறீங்களோ.....

ஒரு நல்ல வாசிப்புக்கு நன்றி.......உங்கள் வாசிப்புக்கும் நன்றி ..

மயாதி said...

Shafi Blogs Here said...

//மிகவும் நன்றாக இருக்கிறது கவி நன்பரே!! வாழ்த்துக்கள்...திரும்பியும் வந்து எட்டி பார்ப்போம்ல.//

நாங்களும் தொடர்ந்து எழுதுவோமுல்ல...
நன்றி

பிரியமுடன்.........வசந்த் said...

//முருகன் கோயில்
பக்கம் மட்டும்
போய் விடாதே
மூன்றாவது
கல்யாணம் செய்யும்
ஆசை வந்துவிடும்
முருகனுக்கு//

நச் வரிகள்

அசத்துங்க மயாதி

gowripriya said...

மிக அழகான வரிகள்

மயாதி said...

நன்றி வசந்த் ...
ஒவ்வொருநாளும் வாறிங்களே...
நன்றி

மயாதி said...

நன்றி பிரியா...

அன்புடன் அருணா said...

மயாதி சூப்பரா எழுதறீங்க!!!

மயாதி said...

அன்புடன் அருணா said...
//மயாதி சூப்பரா எழுதறீங்க!!!//

சூப்பரா எழுதிறனா ? நானா ?
டைப் அடிக்கிறான் எண்டு சொல்லுங்க அக்கா/தங்கச்சி ...
என்ட எழுத்த பார்த்தா சத்தி வரும் .

ஹி ஹி ஹி .....

கோபிக்காதிங்க சும்மா கடிச்சு பார்த்தன்.

நன்றி அக்கா / தங்கச்சி.

goma said...

காதல் தேன்கூட்டிலிருந்து,சொட்டுச் சொட்டாய் கவிதைத் துளி விழுந்துகொண்டே இருக்கிறதே....
அமாவாசையில் நிலவு எட்டிப் பார்க்கிறது,முருகனுக்கும் ஆசை வரும் ..எல்லாமே .அசத்தல்தான்