6.19.2009

கவிதை எழுத விருப்பமானவர்கள் மட்டும் வாங்க.

நம் தாய் மொழியில் கவிதை எழுதுவது என்பது மிகவும் இலகுவானது. கொஞ்சம் தமிழ் எழுத்துக்கள் நன்றாக எழுதத்தேரிந்தாலே போதும்.

சரி எப்படி என்று பார்ப்போமா!கொஞ்சம் கீழே போங்க...

முதலில் என்ற எழுத்தை எழுத பழகுங்கள்.
பிறகு வி என்ற எழுத்தும்,
கடைசியில் வை என்ற எழுத்தும் எழுதப் பழகுங்கள்.

இனிதான் ரொம்ப முக்கியமான வேலை,
ஒவ்வொரு எழுத்தையும் பக்கத்தில பக்கத்தில எழுத வேண்டும்.

இப்ப அழகான கவிதை சரி,
கவிதை

இப்ப சொல்லுங்க கவிதை எழுதுவது ஈசிதானே!பி.கு- திட்ட விரும்பும் நபர்கள் நம்ம மொக்கைத் தல சென்ஷி அவர்களுக்கு திட்டுங்கள் . அவருதானே தொடங்கி வச்சவரு.

எச்சரிக்கை- சென்ஷி அவர்கள் மொக்கைச் சங்கம் ஒன்றை தன் தலைமையில் ஆரம்பிக்க முயன்று வருவதாக தகவல் கசிந்துள்ளது. எனக்கு அதிலே செயலாளர் பதவி தர எண்ணியும் உள்ளாராம். எல்லோரும் கவனம்.14 comments:

சென்ஷி said...

இதெல்லாம் ஆகற கதையில்ல..

என்னை தனியா அடி வாங்க வைக்குறதெல்லாம் அழுகுணி ஆட்டம்.. செயலாளருக்கும் அடி விழும்! :))

நாமக்கல் சிபி said...

தலைவர் சென்ஷி வாழ்க!

FloraiPuyal said...

நீங்க சொன்னத வச்சி "கவிவை" எழுதிட்டேன். ஆனா "கவிதை" எப்படி எழுதறது?

Nundhaa said...

இது தான்யா deconstructionism ... எதுவும் புனிதமில்லை ... எதையும் விட்டு வைக்காதீர்கள் .... போட்டு உடையுங்கள் (கட்டுடைத்தல் அல்ல)

மயாதி said...

சென்ஷி said...

இதெல்லாம் ஆகற கதையில்ல..

என்னை தனியா அடி வாங்க வைக்குறதெல்லாம் அழுகுணி ஆட்டம்.. செயலாளருக்கும் அடி விழும்! :))

June 19, 2009 7:50 அம//

எல்லாம் தலைவன் செயல்...

மயாதி said...

நாமக்கல் சிபி said...

தலைவர் சென்ஷி வாழ்க!

June 19, 2009 8:10 அம//

தலை மறைவா வாழட்டும் என்றுதானே வாழ்த்துறீங்க ..

மயாதி said...

Nundhaa said...

இது தான்யா deconstructionism ... எதுவும் புனிதமில்லை ... எதையும் விட்டு வைக்காதீர்கள் .... போட்டு உடையுங்கள் (கட்டுடைத்தல் அல்ல)//

ஐயோ என்னங்க நான் ஏதோ விளையாட்டா சொல்லப் போக நீங்க இப்படி கோபப் பட்டா?

மயாதி said...

FloraiPuyal said...

நீங்க சொன்னத வச்சி "கவிவை" எழுதிட்டேன். ஆனா "கவிதை" எப்படி எழுதறது?

June 19, 2009 8:37 //

ஆக , மொக்கையையும் முழுசா வாசிக்கும் பொறுமை சாலி ஒரே ஒருவர்தான் கிடைச்சு இருக்காங்க சென்ஷி .....

FloraiPuyal நண்பரே உங்கள் பொறுமைக்கு வாழ்த்துக்கள்...
எல்லாம் சென்ஷியோட ஐடியா தான் நான் பொறுப்பல்ல

சென்ஷி said...

//ஆக , மொக்கையையும் முழுசா வாசிக்கும் பொறுமை சாலி ஒரே ஒருவர்தான் கிடைச்சு இருக்காங்க சென்ஷி .....//

விடாதீங்க.. அவரை அப்படியே அமுக்கி வைச்சு அந்த ’வை’க்குள்ள இருக்குற ‘தை’ய காட்டுங்க :)

நாமக்கல் சிபி said...

கதையளவிற்குச் சொல்வதை
விதையளவிற்குச் சுருக்கிச் சொல்வதுதான்

க(தை) வி(தை) தை

சென்ஷி said...

//நாமக்கல் சிபி said...

கதையளவிற்குச் சொல்வதை
விதையளவிற்குச் சுருக்கிச் சொல்வதுதான்

க(தை) வி(தை) தை
//

ஆஹா.. தலைவா பிச்சு உதர்றீங்களே :)

Anonymous said...

தை மாதத்தில்
விதை த்ததை
கதை யாக சொன்னான்
கவி

கிடைத்தது

கவிதை

FloraiPuyal said...

ஆகா, மொக்கையா இது? இதெல்லாம் முன்னாடியே சொல்லறதில்லையா?

நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...

கவிதை எழுதுறது இம்புட்டு தானா? நா என்னமோ இரவெல்லாம் மண்டைகாய வானத்த பாத்துக்கிட்டு ... கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருக்க கூடாதா... லேட்ட சொன்னாலும் லேட்டஸ்டா சொல்லியிருக்கிங்க .. அருமை ..( மனசாட்சியே இல்லாம இப்படி எல்லா பிண்ணோட்டம் இட்ட நமக்கு சென்ஷி கிட்ட சொல்லி பொருளாளர் போஸ்ட் வாங்கி தருவீங்க இல்ல???