5.31.2009

கொஞ்சும் கவிதை நிறைய காதல் ..

வைத்தியர்
சொன்னார்
என் இதயத்தில்
ஓட்டையாம்..
ஐயோ !
நீ
வீழ்ந்து விடப்
போகிறாயே...


கொலுசு ...
கால்தடம்...
நீ குப்பை
கொட்டும்
குப்பைத்தொட்டி...
இப்படி
எல்லாவற்றையும்
பேசப் பழக்கிய
நீ
எப்போது
பேசப் போகிறாய் !


நீ நட்ட
ரோஜா செடி
பூ
பூக்கும்
முன்னமே
பூக்கத்தொடங்கி
விட்டது
கவிதைகளை


நிலாவில்
ஒட்சிசன்
தேவையில்லை ...
எனக்கு
நீ
உனக்கு
நான்
போதும் ...
வா
குடியேறுவோம்


செருப்பு
சீப்பு
மட்டுமல்ல
கடிகாரம் கூட
கடிக்கிறது
உனக்காக
காத்திருக்கும்
போது


இரவில்
அண்ணாந்து
வானம்
பார்க்க
பிடிக்கவில்லை
ஒரு
நட்சத்திரம் கூட
உன்னைப்போல
அழகாய்
இல்லை...


அழகி
என்று
மட்டுமே
முகவரியிடப்பட்ட
கடிதங்களையும்
உன்வீட்டில்
சேர்த்து
விடுகிறான்
தபால்காரன்


பெறுமதி

குப்பை பொறுக்கும்
சிறுவர்கள்
குப்பைத்தொட்டியில்
கிடைக்கும்
குப்பைகளை
பொறுக்குவதில் காட்டும்
ஆர்வத்தில்
ஒரு துளியையேனும்
காட்டுவதில்லை
குப்பைத்தொட்டியில்
கிடக்கும்
குழந்தைகளை
பொறுக்குவதில்....

5.30.2009

வீதியோரம்


இறுக்கமாய்
அணைத்தபடி
தூங்கிக்கொண்டிருந்தாள்
தன் குழந்தைகளை...
அவள் அணைப்பில்
அந்த குழந்தைகளை
பார்த்தபோது
புரிந்தது !
வீடு இல்லை
அவளுக்குத்தான்
குழந்தைகளுக்கல்ல...


அழுக்காய் இருந்தாலும்
அவளையும்
சில பேர்
பார்த்துவிட்டுத்தான்
போகிறார்கள்...
நிச்சயமாய்
பரிதாபமாயல்ல!
அழுக்கு படிந்த
அவள் ஆடையில்
அங்கங்கே
கிழிசல்கள் ...

5.26.2009

உன் வீதி


உன் வீடு
இருக்கும் வீதி
என் வீடு

உன் வீதியில்தான்
வீழ்ந்து கிடக்கிறது
என் விதி

உன் வீதியில்
பயணிக்கும்
ஒவ்வொரு பயணமும்
உல்லாசப்பயணம்

நீ
நடந்துபோகும்
வீதிக்கும்
உயிர் வந்துவிடுகிறது...
மூச்சு விடுகின்றன
உன்
சுவடுகள்

உன் வீதியில்
தார்
போடச்சொல்லி
யாரும் கேட்கவில்லை
கிரவல் மண்ணில்தான்
தெளிவாக தெரியும்
உன் சுவடுகள்

உன் வீதிக்கு
பெயர் கூட
இல்லை
ஆனால் புகழ்
நிறைய...

ஊரடங்குச்சட்டம்
போட்டாலும்
இயங்கிக்கொண்டிருக்கும்
உன் வீதி
மட்டும்

இப்படி
நீ தனியாக
போகும்போது
இருந்த
அத்தனை
சிறப்பும்
நீ கணவனோடு
போகும் போதும்
இருக்கத்தான்
செய்கிறது...
இருந்தாலும்
மனசு
இல்லை
ரசிப்பதற்கு


தயவுசெய்து
என் இறுதி
ஊர்வலத்தை
அவள் வீதியில்
மட்டும்
கொண்டுபோய்
விடாதீர்கள்...
மீண்டும்
உயிர் பெற
இஷ்டம் இல்லை
எனக்கு....

5.25.2009

ஜதீகம்

திருமண வீட்டில்
மறைவாகத்தான்
நிற்கசொல்கிறார்கள்
விதவையாம்...

இப்படித்தான்
அவள் திருமணமும்...
விதவைகள்
மறைந்து நிற்க
சுமங்களிகள்தான்
நடத்தி வைத்தார்கள்!

5.24.2009

காதலிக்கும் போது!

காதலிக்கும் போதே
கற்பழிந்து போகிறது
மனசு
ஆணாக இருந்தாலும்...
பெண்ணாக இருந்தாலும்...

காதலிக்கும் போதுதான்
ஆண்கள் அழகாகிறார்கள்
அதற்கு முன்பே
அழகாகிவிடுகிறார்கள்
பெண்கள்....

5.23.2009

அன்பு

தன் பிள்ளைகளுக்காக
இன்னும்
கடவுளை
பிரார்த்தித்துக்கொண்டுதான்
இருக்கிறார்கள்
அம்மாக்களும் ...
அப்பாக்களும்...

முதியோர் இல்லத்தில்
இருந்துகொண்டும்!

காதல் ரசம்

விழி மூடியே
நீ
நடக்கலாம்
வழியெல்லாம்
என் விழி...


சாமிக்காக
பறிக்கப்படும்
பூக்கள் எல்லாம்
கதறியழுகின்றன...
நீ
சூடிக்கொள்வாய்
என்றெல்லவா
பூத்தன !

5.22.2009

கண்ணீர்


கொஞ்சம் கொஞ்சமாய்
என் உயிர் வழிகிறது
உன் கண்களில்...
கண்ணீர்

கண்ணியம்



நீ - என்
மார்பில்
தலை வைத்து
தூங்கும்போது
என் இதயம்
துடிப்பதை நிறுத்தி
தாலாட்டுப்பாட
தொடங்கிவிடுகிறது


























































5.21.2009

முத்தம்

என்
முரட்டு உதடுகள்
உன்னைக் காயப்படுத்திவிடுமோ
என்ற அச்சத்தில்தான்
இன்னும்
முத்தமிடாமல் இருக்கின்றன....

5.20.2009

சோறு


வயிற்றை நிரப்புகிறது
நமது கை
மனசை நிரப்புகிறது
பரிமாறுபவரின்
கை.....

தனிமை


இறுதிவரை
நீ
வராமலேயே
நடந்து முடிந்த
கோயில்
ஊர்வலம்
என் -
இறுதி
ஊர்வலத்தை விட

சோகமானது...

5.19.2009

பித்து

இறுதி
உர்வலங்கள் கூட
சந்தோசமாக
கொண்டாடப்படுகிறது !

நடைப்பிணமாக
இருப்பதை விட
வேறென்ன
செய்யமுடியும்
எங்களால்...

ஒன்று மட்டும்
உண்மை

உலகத்தின்
ஆயுசு
குறைகிறது....

5.18.2009

கோயில்

கருவறைக்குள்ளேயே
இருக்கிறாயே !
எப்போது பிறந்து வருவாய்
சாமி ...

எம் மண் பேசுகிறது....!

அழுவதற்கு கூட
உரிமையில்லை
ஒப்பாரி வைக்கிறோம்
மௌனமாக....


எங்களுக்கெல்லாம்
தோஷம்
சந் தோஷம்
எங்குமில்லை
பரிகாரம்

எங்கள்
குரல்வளை
நசுக்கப்பட்டாலும்
எங்கள்
மண்
பேசும்...

5.17.2009

என் கிறுக்கல்கள்

கோயில்களிலும்
கொள்ளை போகின்றன
சாமி(கள்)!
விக்கிரகங்கள் ....

ஒழுங்கு
ஓன்றன் பின் ஒன்றாக
நிறையப் பயணிககலாம்
ஒற்றையடிப்பாதையில்

புனிதம்
பாவத்தை சுமப்பவர் மட்டுமல்ல
காதலைச்சுமப்பவர்களும்
உயிர்த்தெழலாம்
நிஜம்
ஒவ்வொரு பண்டிகையிலும்
மிஞ்சுகிறது
புத்தாடையும் அதற்கு -
வாங்கிய கடனும்

தேவதை
நீ தேவாரம் பாடும் போது
உயிர்த்தெழுகிறது
சாமி சிலை
யுத்தம்
வெற்றியை கொண்டாடும்
ஒவ்வொரு பட்டாசு சத்தத்திலும்
ஒளிந்து போகிறது
நிறைய ஒப்பாரிகள்

ஆருடம்
பொருத்தமாகத்தான் இருக்கிறது
விவாகரத்துப் பெறுபவர்களின்
ஜாதகமும்

மூடம்
செவ்வாய்க் கிரகம்
சென்றாலும் தீராது
செவ்வாய் தோஷம்

5.16.2009

சில நிஜங்கள் ...! பகுதி 2

இலவசமாய்
என்னவெல்லாம்
கொடுக்கிறார்கள்
என்பதை
வைத்தே
வாக்குகள்
தீர்மானிக்கப்படுகின்றன !
அதுசரி
இலவசமாய்
கொடுப்பதற்கு
இவர்கள்
என்ன
அட்சய பாத்திரமா
வைத்திருக்கிறார்கள் ...


அதிகம்
வாக்குகள்
பெற்றால்
தலைவர்
ஆகலாம்
அது
நல்ல -
வாக்கானாலும் சரி
கள்ள -
வாக்கானாலும் சரி !


காயம் பட்டவனின்
குருதியின்
நிறத்தை வைத்தல்ல
தோலின்
நிறத்தை வைத்தே
தீர்மானிக்கப்படுகின்றன
உலகத்தின்
உதவிகள் ...

கை நீட்டி
உதவி
கேட்டால்
உதவுவதை விட்டு
எத்தனை பேர்
கை நீட்டுகிறார்கள்
என்று
கணக்குக்காட்டி
பெருமைப்பட்டுக்
கொள்கிறார்கள்
இந்த
உலகத்தினர் !
தொடரும் ...

மவுசு

சொல்லிவிட்ட
காதலை விட ..
சொல்லாத
காதலுக்கு
மவுசு
அதிகம்தான்
யாரிடம்
வேண்டுமானாலும்
சொல்லிக்கொள்ளலாமே!

5.14.2009

ஏகாந்தம்


இருவரும்

நிறைய

பரிமாறிக்கொள்கிறோம்

ஒரு

வார்த்தையைக் கூட

செலவழிக்காமல்

சுவடு


நீ
நடந்து போன
பாதையில்
எறும்பு
மொய்த்தது.....
கோலம்
போடுவது
எறும்பு
மொய்க்கத்தானே!

5.13.2009

அம்மா


பால்
வற்றிப்போனாலும்
பாசம்
சுரக்கும்
முலையால்தான்
இன்னும்
உயிர்
வாழ்கின்றன
நிறையக்
குழந்தைகள் ...

வறுமை

மீள் இடுகை

தன் மார்பைக்
கிழித்துப்
பார்க்கிறாள்
ஒரு
தாய்
உள்ளேயாவது!
ஒரு துளி
பால்
கிடைக்குமா
அழுதிடும்
அவள்
குழந்தைக்கு...

5.12.2009

சில நிஜங்கள் .....

பக்கத்து வீட்டுப்
பிள்ளை
பசியில்
அழும் சத்தம்
கேட்டும் ...
மிஞ்சிய
சோற்றை
குளிர்சாதனப்பெட்டியில்
சேமித்துவிட்டு
கோயிலுக்குப்
போகிறார்கள்
மனிதர்கள்...


வீட்டில் ....
மனிதர்களும்
வளர்ப்பு நாயும்!
புதுச்சோறு
சாப்பிட....
பழைய சோறு
பத்திரமாய்
இருக்கிறது
வரப்போகும்
பிச்சைக்காரனை
எதிர்பார்த்து ....


அளவுக்கதிகமான
அலங்காரத்தில்
அவர்களை
அழகுபடுத்தி ...
வாழ்க்கையை
அசிங்கமாக்கி
விடுகிறார்கள்
மனிதர்கள் ....

மனிதனை விட
கேவலமான
மிருகம் இல்லை
அதுதான்
மிருகத்தை
வதை செய்வதாய்
மனிதனை
கைது
செய்யும்
சட்டம்
மனிதனை
வதை செய்வதாய்
எந்த
மிருகத்தையும்
கைது
செய்வதில்லை


தன்னை
நல்லவனாக
காட்டிக்கொள்ள
ஒவ்வொரு
மனிதனும்
நிறைய
கெட்ட வேலைகள்
செய்யவேண்டியிருக்கிறது ....

5.10.2009

அவசரகாலச் சட்டம்

கண்கள் கட்டப்பட்டு ...
வாய் பொத்தப்பட்டு...
காதுகள் அடைக்கப்பட்டு...

என்னடா
காந்தியம்
பேசுறான்
என்று
தப்பாய்
நினைத்து
விடாதீர்கள் !

இதுதான்
எங்கள்
இப்போதைய
நிலைமை .....

சாப்பிடக்கூட
வாய்
திறக்க
பயமாய்
இருக்கின்றது

அதற்கும்
அவசரமாய்
ஏதாவது
சட்டம்
போட்டிருப்பார்கள்
கைதுசெய்திட ....

5.06.2009

ஆதிக்கம்

தலைமைச்
சமையல்காரன்
வீட்டில் கூட...
எல்லாச்
சமையலையும்
மனைவிதான்
செய்யவேண்டியிருக்கிறது!

5.05.2009

கொஞ்ச(சு)ம் கவிதை! நிறைய காதல் ..

மன்னித்துவிடு
உன்னைக்
கேட்காமலேயே
உன்னை
பாவித்து
விடுகிறேன்
என்
கவிதைகளுக்காக...


கறுப்புப்
பூனை
கடந்து
போனதால்
பயந்து கொண்டே
பயணத்தைத்
தொடங்கினேன் ...
இடையில்
உன்னைக்
கண்டேன் ...
யார்
சொன்னது
கறுப்புப்
பூனை
கெட்ட
சகுனம்
என்று ...




தற்கொலை
செய்வதற்காக
இருவரும்
விஷம்
குடித்து
நீண்ட
நாட்களாகி
விட்டது...
இன்னும்
இறக்கவில்லை

நீ
தந்தது
எப்படி
விஷமாகும்!



மற்றப்பெண்களைப்
போலல்ல...
உன்னால்
எந்த
ரகசியத்தையும்
காப்பாற்ற
முடியாது!

நீ
பேசுவது
வாயால்
மட்டுமில்லை...



நீ
ஓடி வருவதை
பார்த்ததும்
என்
மூச்சையெல்லாம்
சேமிக்கத்
தொடங்கிவிட்டேன்...

ஓடி
வந்த
களைப்பில்
நீ
மூச்சு
வாங்கும்போது
தரவேண்டுமல்லவா!




ஒவ்வொரு
அழகான
பெண்ணைப்
பார்க்கும்
போதும்
இவளைவிட
அழகானவள்
கிடைப்பாளென
இலகுவாக
தப்பித்துக்கொல்லும்
எனக்கு
உன்னைப்
பார்க்கும்போது
மட்டும்
அப்படி
முடிவதில்லை...




நீ வரும்
வரை
உனக்காக...
காத்திருக்கிறேன்
நீ வ்ந்த
பிறகும்
காத்திருக்கிறேன்
முத்தத்திற்காக...

ஒரு அழகான பொண்னும் நிறைய பையன்களும்

கர்ப்பிணித்தாய்
அங்கவீனர்
மதகுருமார்
இவர்களுக்கு
ஒதுக்கியது
போக...

மிச்சம்
இருக்கும்
எல்லா
ஆசனத்தையும்
உனக்கு
ஒதுக்கித்தருகிறார்கள்

நீ
பஸ்சில்
ஏறும்
போது...

தாய்மை


ஒவ்வொரு
குழந்தையின்
முதல்
அழுகையும்
உணர்த்துகிறது
பிரசவம்
அல்ல !
பிரசுகம்

பாசம்

என்
முகத்தை
எப்போது
முதன் முதலாய்
பார்த்தேன்
என்று
சத்தியமாய்
எனக்கு
ஞாபகம்
இல்லை

ஆனால்,

என்
முகத்தை
எப்போது
முதன் முதலாய்
பார்த்தாள்
என்று..

நிச்சயமாய்
அம்மாவுக்குத்
தெரிந்திருக்கும்

உண்மை

ஒரு
கவிதை
எழுதவதற்கு
யோசிப்பதை விட...
அதிகம்
யோசிக்க
வேண்டியிருக்கிறது
ஒரு
பொய்
சொல்வதற்கு

ஆபத்து

சில
இடங்களில்
மெளனமாகவே
இருக்க
வேண்டியிருக்கிறது!
தமிழன்
என்பதை
மறைப்பதற்காக...

யதார்த்தம்

வார்த்தைகளில்
பொய்
சொல்ல
தைரியம்
இல்லாதவர்களுக்கு
கடைசியில்...
கை
கொடுக்கிறது
சிரிப்பு!

5.04.2009

பசி

சாப்பிடத்
தொடங்கும் போது
இருக்கும்
அவசரம்
முடியும்
போது
இருப்பதில்லை!

தாத்பரியம்

ஆணுறையை
வீசி
எறிவார்கள்!
அது
ஏமாற்றிவிட்டால்
குழந்தையை
வீசி
எறிவார்கள்!
குப்பைத்தொட்டியில்...

திருத்தம்

மதம்
பிடித்து
யானை
போல்
அலைவதை
விட
நாத்திகனாக
இருப்பது
மேல்!

ஜனநாயகம்

எவர்
வேண்டுமானாலும்
பேசலாம்...
ஆனால்!
எழுதிக்கொடுப்பதை
மட்டும் ?

கண்ணீர் அஞ்சலி

கடவுளின்
புதிய
அவதாரம்
இறந்து
போனது

ஒரு
மதக்கலவரத்தில்

5.03.2009

நாகரீகம்

காதலியை
கல்யாணம்
கட்டவே
யோசிக்கிறார்கள்

எப்படி..
தாஜ்மஹால்
கட்டுவார்கள்?

(அ)தர்மம்

கோயில்
வாசல் முன்
பிச்சைக்காரன்
மற்றும்
கோயில் உண்டியல்


பணம்
போடப்படுகிறது
அவன்
தட்டிலும்
உண்டியலிலும்


கோயில்
பெரிதாக
கட்டப்பட்டுக்
கொண்டேயிருக்கிறது
அவன்
இன்னும்
கட்டத்தொடங்கவேயில்லை
தன்
வீட்டை

கலவரம்


மனிதன்
கொல்லப்படுகிறான்

மதம்
வளர்கிறது...

பாவம்
அப்படியே
இருக்கிறான்
கடவுள்...

பிச்சைக்காரன்

மிச்சம்!
நமக்கு
குப்பை...
அவனுக்குச்
சாப்பாடு
...

அரசியல்

பிச்சையாக
பணம்
கிடைத்தால்
பிச்சைக்காரன்
வாக்கு
கிடைத்தால்
பணக்காரன்

இன்று

பஸ்ஸின்
பின்னிருக்கை
தியேட்டரின்
ஒதுக்கிருக்கை
கடற்கரையோர
கல்லிருக்கை
எல்லாவற்றிலும்
அசிங்கப்பட்டுப்
போய்க்
கிடக்கிறது..
காதல்
வா
இருவரும்
சேர்ந்து..
புனிதமாக்குவோம்

தொலைபேசி

உன்
இலக்கத்தை
சுழற்றும்
போது...
ஒரு
கணத்தில்
உலகத்தை
சுற்றி..
வருகிறது
மனசு

மாயை

சாமியைத்
தேடி
காவி
உடை
தரித்தான்

கழற்றிப்
போட்ட
நிற
உடுப்பில்
ஒட்டிக்கொண்டிருந்தார்
இருந்தார்

கடவுள்

அவர்
தூனிலும்
இருப்பார்
துரும்பிலும்
இருப்பார்..

சமையல் குறிப்பு

தேவையனவை
தேங்காய்ப்பால் 2 கோப்பை
பெரிய வெங்காயம் 1
மிளகாய்த்தூள் 2 கரண்டி
உப்பு தேவையான அளவு
கைப்பக்குவம்?????????????

நாம் கடவுள்

ஆக்கக் கடவுள்
கடவுள்
அழித்தல் கடவுள்
மனிதன்

சந்தோசமான இரங்கற்பா

குளிர்
காய்ந்துகொண்டிருந்தது
குழந்தை...
அம்மாவின்
மார்புச்சூட்டில்
அம்மாவோ
நனைந்துகொண்டிருந்தாள்
மழையில்....
ஒரு
மரம்
தன்னால்
முடிந்தவரை
காப்பாற்றிகொண்டிருந்தது
இருவரையும்...

எரிவாயுக்குண்டிலும்
எரிந்து
போகாத
வீர...
மரம்
அது!!

எங்கேயோ
ஒருவன்
தீக்குளித்துச்
செத்துப்போனான்!

இருவரையும்
காப்பாற்றச்சொல்லி
அவன் எழுதிய..
மனுவை
வாசித்து
முடித்த
அமைச்சர்
அவசர
அவசரமாய் ...
எழுதத்தொடங்கினார்
ஒரு
இரங்கற்பா???
அப்பாடா!
இதை
வைத்தே
அடுதத..
தேர்தலை
வென்றுவிடலாம்!

சந்தோஷமாய்
பிரசுரிக்கப்படடது
ஒரு
இரங்கற்பா!

புத்தாடை

பிச்சைக்காரனுக்கு
சந்தோசம் ...
கிடைத்துவிட்டது
யாரோ
கழட்டிப்போட்ட
கிழிந்தசட்டை ...