6.21.2009

துளிக் காதல்


அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சாம்
கவனம்
அழகு விஷமாகப்
போகிறது உனக்கு


..........................
கோயில்
அன்னதானத்தில்
பரிமாறத்
தொடங்கினாய்....
சாமி வந்து
உட்கார்ந்துகொண்டது
ஒரு பந்தியில்


...........................
நீ எத்தனை
முறை மறுத்தாலும்
உன்னை விட்டு
வெளியேற
விருப்பமில்லை
காதலுக்கு


...................................
மூச்சை
அடக்கும்
அளவுக்குக்
கூட
காதலை
அடக்க முடியாமல்
கஷ்டப்படுகிறது
மனசு...

4 comments:

காமராஜ் said...

/எத்தனை முறை மறுத்தாலும்/
நல்ல கவிதைத்துளி
வாழ்த்துக்கள்

சென்ஷி said...

//மூச்சை
அடக்கும்
அளவுக்குக்
கூட
காதலை
அடக்க முடியாமல்
கஷ்டப்படுகிறது
மனசு...
//

:)
நல்லாயிருக்குது!

அன்புடன் அருணா said...

நல்லாருக்கே!!!

S.A. நவாஸுதீன் said...

எல்லாமே நல்லா இருக்கு, வேறென்ன சொல்ல கவிதைப்பெட்டகமே!