6.07.2009

குழந்தைகள் பற்றி

குழந்தைகளை
செல்வம் என்கிறார்கள்
பொய்
செல்வம்
அழிந்து போவது
குழந்தைகள்
அப்படியல்ல...

மற்ற நேரங்களில்
எப்படியோ
கவிதை எழுதும்
நேரங்களில்
குழந்தையாகிப்
போகிறது மனசு
பொய்
சொல்வதேயில்லை...

குழந்தைகளை
நேசியுங்கள்
இழந்து போன
குழந்தை மனசு
மீண்டும்
கிடைத்து விடும்

குழந்தைகளை
நேசியுங்கள்
எறும்புகளை
நசுக்கக் கூட
மனசு
இடம் கொடுக்காது...

குழந்தைகளுக்கு
மட்டுமே
பொய்யாக சிரிக்க
தெரியாது
அதனால்தான்
குழந்தைகளை
பார்க்கும்போது
மட்டும்
மனிதர்களால்
பொய்யாக சிரிக்க
முடிவதில்லை...

குழந்தைகள்தான்
வாழக்கற்று கொள்கின்றன
மனிதர்கள்
வாழ்க்கையை
தொலைக்கிறார்கள்


குழந்தையின்
முதல் அழுகை
பிரசவ வலியை
நீக்கி விடுகிறது
அதற்குப் பின்
ஒவ்வொரு
அழுகையும்
பிரசவ வலியையே
உருவாக்கி விடுகிறது
அம்மாவுக்கு..குழந்தைகள்
எல்லாமே
அவதாரம்
நாம்தான்
அவர்களை
மனிதராக்கிறோம்..

கூலிக்கு கல்
தூக்குகின்றன
குழந்தைகள்
மனசு கல்லாகிப்
போகிறது

எங்கள்
அகதி முகாம்களில்
போசாக்கு குறைந்த
பிள்ளைகளுக்கு
மருந்தாகக்
கொடுக்கக் கூட
உணவில்லையாம்....

இதுக்கு மேலேயும்
இந்த கவிதையை
எழுத சக்தி
இல்லை எனக்கு
மன்னிக்கவும்..

10 comments:

S.A. நவாஸுதீன் said...

மற்ற நேரங்களில்
எப்படியோ
கவிதை எழுதும்
நேரங்களில்
குழந்தையாகிப்
போகிறது மனசு
பொய்
சொல்வதேயில்லை...

அப்புறம் எப்படி கவிதைக்கு பொய் அழகுன்னு சொன்னாங்க

S.A. நவாஸுதீன் said...

குழந்தைகளை
நேசியுங்கள்
இழந்து போன
குழந்தை மனசு
மீண்டும்
கிடைத்து விடும்

இது ஒரிஜினல் அக்மார்க் உண்மை

S.A. நவாஸுதீன் said...

குழந்தைகளுக்கு
மட்டுமே
பொய்யாக சிரிக்க
தெரியாது
அதனால்தான்
குழந்தைகளை
பார்க்கும்போது
மட்டும்
மனிதர்களால்
பொய்யாக சிரிக்க
முடிவதில்லை...

சூப்பரா சொன்னீங்க மயாதி

S.A. நவாஸுதீன் said...

குழந்தையின்
முதல் அழுகை
பிரசவ வலியை
நீக்கி விடுகிறது
அதற்குப் பின்
ஒவ்வொரு
அழுகையும்
பிரசவ வலியையே
உருவாக்கி விடுகிறது
அம்மாவுக்கு..

அருமை மயாதி. இவ்வரிகளை புகழ வார்த்தைகள் கிடைக்கவில்லை. தாய்மையை ரொம்ப அருமையாய் சொல்லி இருக்கின்றீர்கள்.

S.A. நவாஸுதீன் said...

குழந்தைகள்
எல்லாமே
அவதாரம்
நாம்தான்
அவர்களை
மனிதராக்கிறோம்..

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

S.A. நவாஸுதீன் said...

கூலிக்கு கல்
தூக்குகின்றன
குழந்தைகள்
மனசு கல்லாகிப்
போகிறது

வேதனைக்குரிய விசயம்தான்

S.A. நவாஸுதீன் said...

எங்கள்
அகதி முகாம்களில்
போசாக்கு குறைந்த
பிள்ளைகளுக்கு
மருந்தாகக்
கொடுக்கக் கூட
உணவில்லையாம்....

வலிகளின் வரிகள். வேறு என்ன சொல்ல

நாணல் said...

அருமையான கவிதை மயாதி,உண்மையான் வரிகள்...

கவிநயா said...

//குழந்தையின்
முதல் அழுகை
பிரசவ வலியை
நீக்கி விடுகிறது
அதற்குப் பின்
ஒவ்வொரு
அழுகையும்
பிரசவ வலியையே
உருவாக்கி விடுகிறது
அம்மாவுக்கு..//

இந்த வரிகள் அழகு.

//குழந்தைகள்
எல்லாமே
அவதாரம்
நாம்தான்
அவர்களை
மனிதராக்கிறோம்..//

இவை அற்புதம்!

அபுஅஃப்ஸர் said...

கடைசி வரியை படித்த பிறகு எனக்கு பின்னூட்டமிட திரானியில்லை

குழந்தையாய் மாறிப்படித்தேன் அருமை