6.06.2009

உயிர்த்தலும் மரித்தலும்

ரத்தம்
அலறல்
கத்தி
காயம்....
வன்முறைகளில்
பிறக்கிறது
ஒரே ஒரு உயிர்

அதே கத்தி
ரத்தம்
அலறல்
மீண்டும் வன்முறை

மரணிக்கின்றன
நிறைய உயிர்கள்...

10 comments:

நட்புடன் ஜமால் said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை மயாதி.

சிறு வரிகளில் இங்கு நடக்கும் அக்கிரமங்களை சொல்லி விட்டீர்.

S.A. நவாஸுதீன் said...

அசத்திட்டீங்க மயாதி

ஆயில்யன் said...

முன் வன்முறை

இரு மனங்களின்

இணைவு!

பின் வன்முறை

பல மனங்களின்

பிறழ்வு :(

மயாதி said...

நட்புடன் ஜமால் said...


//என்ன சொல்வதென்றே தெரியவில்லை மயாதி.

சிறு வரிகளில் இங்கு நடக்கும் அக்கிரமங்களை சொல்லி விட்டீர்.//

நீங்க சொல்ல வேண்டியதே இல்லை அண்ணா !
வந்தாலே வசந்தம் தான்...

நன்றி அண்ணா

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

//அசத்திட்டீங்க மயாதி//

நன்றி

மயாதி said...

ஆயில்யன் முன் வன்முறை

இரு மனங்களின்

இணைவு!

பின் வன்முறை

பல மனங்களின்

பிறழ்வு //

வாங்க ஆயில்யன் ,

முதல் வருகையிலேயே கவிதையோடு வந்துட்டீங்க...
நன்றாக இருக்கு உங்கட கவிதையும்
நன்றி

Kanna said...

//மரணிக்கின்றன
நிறைய உயிர்கள்...//

வன்முறையின் விளைவுகளை அழகான வரியில் சொல்லியிருக்கிறீர்கள்.

அருமை

kartin said...

தூண்டும் வரிகள்!!
படித்து விட்டு வேறொன்றை
எழுதியிருந்தேன் நானும்.. நன்றி :)

மயாதி said...

Kanna said...
//மரணிக்கின்றன
நிறைய உயிர்கள்...//

வன்முறையின் விளைவுகளை அழகான வரியில் சொல்லியிருக்கிறீர்கள்.

அருமை//

நன்றி நண்பா
முதல் வருகை போலும்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்....
நன்றி

மயாதி said...

kartin said...

தூண்டும் வரிகள்!!
படித்து விட்டு வேறொன்றை
எழுதியிருந்தேன் நானும்.. நன்றி :)//

அப்படியா நீங்கள் எழுதியதையும் வாசிக்க ஆசைப் படுகிறோம்
கொஞ்சம் அனுப்புங்களேன்..