6.17.2009

நான் இழந்த கருப்பை உலகம்

என்னைப் பொறுத்தளவில் எனக்கு இரண்டு உலகங்கள். ஒன்று இப்போது என்னைத் தாங்கி கொண்டிருப்பது. மற்றது இந்த உலகத்துக்கு வரும் முன் என்னைத் தாங்கிய கருப்பை.
அளவில் வேறுபட்டாலும் தரத்தில் இரண்டும் ஒன்றுதான் எனக்கு.

என்னை பத்திரமாக வெளியேற்றி விட்டு , என் உலகத்தை பத்திரமாக வைத்திருந்தாள் அம்மா.எனக்கு என் பழைய கர்ப்பை உலகத்தை காண வேண்டும் என்று ஒரு விபரீத ஆசை வந்தது.என்னடா இவன் இப்படி கொடுரமானவனாக இருக்கிறானே என்று யோசிக்கின்றீர்களா?

நான் நீங்கள் நினைப்பது போல் கொடுரமானவன் இல்லீங்க....

அம்மா பத்திரமாகத்தான் அந்த உலகத்தை வைத்திருந்தாலும் நான் இருந்து வந்த இடம் என்ற படியாலோ என்னவோ தெரியாது , என்னைப் போலவே அடங்காப் பிடரியாக அந்த உலகும் குழப்படி செய்தது.

என்னைப் போலவே என் பழைய உலகும், எனை உள்ளே அடைத்து வைக்கவேண்டாம் என்றும், தான் யாருக்கும் அடிமை இல்லை என்று சொல்லி வெளியேற துடித்தது.
அதுதான் மருத்துவ உலகத்தில் கருப்பைக் கழுத்து இறக்கம் (uterine prolapse) என்று சொல்லப்படுகிறது.

இனி என்ன செய்ய விடுதலை கேட்ட உலகத்தை கொஞ்சநாள் மாற்று வழிகள் சொல்லி கட்டுபடுத்தி வைக்க முயன்றாலும், கடைசிக் கட்டத்தில் அதை வெளியே எடுக்க வேண்டிய நிலைக்கு அதன் பிடிவாதம் கூடிப்போனது.

இனியென்ன , அம்மாவுக்கு சத்திர சிகிச்சை மூலம் கருப்பை உலகத்தை விடுவிப்பது என்று முடிவாகியது. அப்போதுதான் வெளியே எடுக்கப் படும் என் உலகத்தை பார்க்கும் ஆசை எனக்கு வந்தது. ஆனாலும் நான் அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்த காரணத்தால் சொந்த ஊருக்கு வந்து என் பழைய உலகத்தை பார்ப்பதற்கு இரண்டு காரணங்கள் தடுத்தன,

ஒன்று விடுமுறை இல்லை , விடுமுறை எடுத்தாலும் ஒரு சில நாட்கள் எடுக்கலாம் ஆனால் கப்பல் மூலம் யாழ்ப்பாணத்தில் இருந்து என் வீட்டுக்கு வந்து போக பயணத்துக்காக மட்டுமே 4 நாட்கள் செலவாகும். வெறும்350km தூரத்தை 4 நாட்கள் செலவழித்து பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய சாலி.

சரி விமானத்தில் செல்வோம் என்று யோசித்தால் ,அதற்கும் 2 நாட்கள் பயணத்துக்காக மட்டும் செலவாகும்.அதுமட்டுமா வெறும் 300 ரூபாய் செலவழித்து பஸ் வண்டியில் பயணிக்கும் தூரத்தை 20,000 ரூபாய் செலவழித்து விமானத்தில் கடக்கும் அளவிற்கு என் பொருளாதாரம் இடம் அளிக்கவில்லை அப்போது , நான் படித்துக் கொண்டு இருந்த காரணத்தால்.

சரி பஸ்சில் போயிருக்கலாமே என்கிறீர்களா ?
பஸ் வண்டிப் பயணம் நடைபெறாத போது எப்படியாம் போவது.

இப்படி கர்ப்பை உலகத்தை காணும் என் கனவு கட்சி வரை கை கூடாமலேயே போனது.

நான் படிப்பை முடித்து வீடு வந்து சேர்ந்த பிறகு, அம்மாவின் கர்ப்பை இழையவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ரிப்போர்ட் மட்டுமே இருந்தது. சந்திர மண்டலத்தில் இருந்து சட்டலைட்டில் பூமியை எடுத்த புகைப்படத்தைப் பார்ப்பது போலவே அந்த ரிப்போட்டைப் பார்த்தேன். அது கருப்பை உலகத்தின் போட்டோவாகிப் போனது எனக்கு .

இழையவியல் சோதனை நடத்திய ஆய்வு கூடத்தில் சிலகாலத்துக்கு கருப்பை மாதிரியை சேர்த்து வைத்திருப்பார்கள் ஆனாலும், அங்கே கருப்பை சிதைக்கப்பட்டு கண்ணாடி சிலைட்டில் ஒரு துளி ஓட்டப்பட்டே வைத்திருப்பார்கள்.
எஞ்சியவை எரிக்கப்பட்டிருக்கும் .

சிதைந்து போன கருப்பையை பார்க்க தைரியம் இல்லாததால் அந்த எண்ணத்தையும் விட்டேன். இப்படியே என் பழைய உலகத்தைப் பார்ப்பதற்கான ஆசை கடைசி வரை நிறைவேறாமலேயே போனது.

ஒரு உலகத்தை இழந்த வலி தெரிந்தவன் நான் அதனால் இப்போது இந்த உலகத்தை அதிகம் நேசிக்கிறேன்.இந்த உலகத்தை காயப்படுத்துபவர்களைக் கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லை.

சரி , கருப்பைக் கழுத்து இறக்கம் பற்றி சில மருத்துவக் குறிப்புக்கள்.

கருப்பைக் கழுத்து இறக்கம்(utero vaginal prolapse) என்பது கர்ப்பப் பை பிறப்பு உறுப்பு வழியே கீழ் இறங்குதல் ஆகும். இது அதிகம் பிள்ளைகளைப் பெற்ற பெண்களுக்கே அவர்களின் சற்று முதிர்ந்த வயதில் ஏற்படும்.
இதனால் அந்த பெண்மணிக்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர பெரியளவில் வலி ஏற்படுவது குறைவு.
சிலவேளை கர்ப்பப் பையோடு சேர்த்து சிறுநீர்ப் பையும் கீழ் இறங்கினால் அந்த பெண்ணின், சிறுநீர் அவளுக்குத் தெரியாமலேயே வெளியேறும்(உணர்ந்து கொள்ள முடியாத நிலையில்). குறிப்பாக ஆழமாக மூச்செடுக்கும் வேலை செய்யும் போது, இருமும் போது சிறுநீர் அந்த பெண்ணின் கட்டுப்பாடு இல்லாமலேயே வெளியேறும்
கருப்பைக் கழுத்து இரக்கத்தோடு , சிறு நீர் பையும் கீழ் இரங்கி வந்ததால் மட்டுமே இவ்வாறு சிறுநீர் சம்பத்தப் பட்ட பிரச்சனை வரும்.

ஆரம்ப நிலையில் வளையங்கள் (pessary) இட்டு கருப்பப் பை இர்னகாமல் தடுக்கலாம். ஆனால் இறுதிக் கட்டத்தில் சத்திர சிகிச்சை செய்து கர்ப்பப் பையை நீக்க வேண்டிய தேவை வரலாம்.

சில படங்கள்...

வெட்டி எடுக்கப் பட்ட கர்ப்பை உலகம்
சத்திர சிகிச்சை செய்வதற்கு முன் தற்காலிகமாக கர்ப்பை இரக்கத்தை நிவர்த்தி செய்யப் பயன்படுத்தப் படும் வளையங்கள்(PESSARIES)

9 comments:

S.A. நவாஸுதீன் said...

அருமையான விளக்கத்துடனும், நெகிழ்ச்சியான நினைவுகளுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மயாதி.

அடுத்த பதிவு உங்களுடைய நூறாவது பதிவு. மிகச் சிறந்த பதிவை எதிபார்த்திருக்கிறோம்

தமிழரசி said...

கருவறையின் மேல் நீ வைத்திருக்கும் மதிப்பு உன் மேல் மதிப்பை மேலும் கூட்டுக்கிறது.....

sakthi said...

ஒரு அழகான மருத்துவ பதிவு

மிக அருமையாய்

உணர்வுபூர்வமாய்

இயம்பியமைக்கு நன்றி....

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

அருமையான விளக்கத்துடனும், நெகிழ்ச்சியான நினைவுகளுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மயாதி.

அடுத்த பதிவு உங்களுடைய நூறாவது பதிவு. மிகச் சிறந்த பதிவை எதிபார்த்திருக்கிறோம்//

ஆகா மாட்டி விட்டீங்களா!
எப்போவோ நூறு தாண்டியிருக்கும் அண்ணா, நல்ல பதிவு ஒன்று கிடைக்கும் வரை நூறைத் தள்ளிப்போட சில பதிவுகளை மறைத்து கொண்டேன்,,,
நீங்க கண்டு பிடிச்சீட்டிங்க இனி ஏமாற்ற ஏலாதே//////

முயற்சிக்கிறேன்..
நன்றி அண்ணா...

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

அருமையான விளக்கத்துடனும், நெகிழ்ச்சியான நினைவுகளுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மயாதி.

அடுத்த பதிவு உங்களுடைய நூறாவது பதிவு. மிகச் சிறந்த பதிவை எதிபார்த்திருக்கிறோம்//

ஆகா மாட்டி விட்டீங்களா!
எப்போவோ நூறு தாண்டியிருக்கும் அண்ணா, நல்ல பதிவு ஒன்று கிடைக்கும் வரை நூறைத் தள்ளிப்போட சில பதிவுகளை மறைத்து கொண்டேன்,,,
நீங்க கண்டு பிடிச்சீட்டிங்க இனி ஏமாற்ற ஏலாதே//////

முயற்சிக்கிறேன்..
நன்றி அண்ணா...

மயாதி said...

தமிழரசி said...

கருவறையின் மேல் நீ வைத்திருக்கும் மதிப்பு உன் மேல் மதிப்பை மேலும் கூட்டுக்கிறது.....//

சும்மா லொள்ளு தானே அக்கா..
நன்றி

மயாதி said...

sakthi said...

ஒரு அழகான மருத்துவ பதிவு

மிக அருமையாய்

உணர்வுபூர்வமாய்

இயம்பியமைக்கு நன்றி//

நன்றி

" உழவன் " " Uzhavan " said...

கருப்பையைக் காணும் பாக்கியம் பெற்றோம். கருப்பையைக் காணும்போது கண் முன்னால் அம்மா தெரிகிறார்.
மருத்துவத் தகவலும் அருமை.

Anonymous said...

Genial brief and this post helped me alot in my college assignement. Thanks you as your information.