11.30.2009

sms கவிதைகள்

வெட்கத்தில் தொலைந்தேன்
கொஞ்சம் கூட
வெட்கம் இல்லாமல்



நீ என்
ஞாபகமல்ல
மறந்துவிட...
ஞானம்



எனக்குள்
இருந்துகொண்டு
என்னைவிட்டுப்
போ என்கின்றாய்...



ஏதாவது பேசிவிடு
மௌனத்தின் பாரத்தை
தாங்காது
உன் மனசு...



முதன் முதலாய்
என் கை
பிடித்து நடக்கிறாய்
நடக்கப் பழகுகிறது
காதல்...



காதலாகிக் கசிந்து
கவிதையாகிப்
போனது மனசு...




11.28.2009

சுடுகாட்டில் இருந்து எழுதியவை !

சுடுகாட்டில்
பூக்கும்
பூக்களிலும்
வாசம் ....

****************

மயான
அமைதியில்
திடீரென
கேட்டன
ஒப்பாரிகள்...
ஒரு
பேய்
இறந்து போய்
இருந்தது...

*******************

ஒரு
உடல்
எரிந்துகொண்டிருந்தது
கொஞ்சம்
கொஞ்சமாய்
வெளியேறியது
ஒரு பேய்


**********************

பிறந்தநாள்
கொண்டாடியது
ஒரு பேய்...
அதன் கல்லறையில்
அன்றையதினம்
குறிக்கப்பட்டிருந்தது
`இறந்த திகதி`


*************************`
ஒவ்வொருவரினுள்ளும்
ஒரு பேய்
இருக்கிறது
உயிரைச்சுவாசித்துக்
கொண்டு...
உயிர்பிரியும்
போது
அதுவும்
பிரிந்து
போகிறது....

********************
சுடலை
வைரவரை
வணங்கிவிட்டு
ஊருக்குள்
நுழைந்தது
ஒரு பேய்...
வைரவருக்கு
சடங்கு வைத்துக்
கொண்டிருந்தார்கள்
மனிதர்கள்...

பேயை
விரட்டச்சொல்லி


************************

படுகொலை
செய்யப்பட்ட
நிறையத் தமிழர்கள்
புதைக்கப் பட்டார்கள்
ஒரு குழிக்குள்...

ஒரு சிறிய
அகதிமுகாமில்
நிறையப்பேரை
அடைத்துவைத்து
பயிற்சிதந்தது
இதற்குத்தானா ...


***********************

உடலே
கிடைக்காமல்
சிதறிச்
செத்துப்போன
ஒரு உயிர்
தேடி அழைகிறது
தன் கல்லறையை




*************************

உலகம்
நிரம்பி
விட்டதால்
அடுத்த
பிறவிக்கான
வெயிட்டிங் லிஸ்டில்
நிறையப்
பேய்கள்...


தொடரும்....


முந்திய பேய்க்கவிதைகள்!

http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_8587.html

http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_8604.html

http://konjumkavithai.blogspot.com/2009/10/blog-post_19.html

11.26.2009

ஒரு காதல் கவிதை

என்னையறியாமல்
உறங்கியபோது
நீ வந்தாய் !
இமைகளைத்தாண்டி
வெளியேறியது
கண்கள் ....

***********************
வருகின்ற
அலைகளுக்குத்
திரும்பிபோக
மனசில்லை
கடற்கரையில்
நீ ....


***********************
நீ
பூசிக்கொண்டாய்
புனிதமானது
திருநீறு


*********************
இதுவரை
முடிந்து போன
என்
ஒவ்வொரு
ஜென்மத்தின்
மரணத்தின்
போதும்...
அடுத்த
ஜென்மத்திலாவது
உன்னோடு
வாழ வேண்டும்
என்று
வேண்டிக்கொண்டுதான்
செத்தேன்..


இந்த
ஜென்மத்தில்
முடிவெடுத்து
விட்டேன்
இறப்பதேயில்லை
என்று



************************
உன்னோடு
வாழாத
நாட்களை
வரவுவைக்க
மறுக்கிறது
வாழ்க்கை

*************************


11.23.2009

தலைப்பை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்

தீ
சாப்பிட்டுக்
கொண்டிருந்தது
மெழுகுவர்த்தியை...

எவரின்
உதவியும்
இல்லாததால்
தன்னைத்தானே
அழித்து
திரியை
சின்னதாக்கி
தீயோடு
சண்டை
போட்டுக்கொண்டிருந்தது
மெழுகுவர்த்தி

கடைசியில்
மெழுகுவர்த்தி
வென்று விடும்
தீ
செத்துவிடும்

மெழுகுவர்த்தியின்
இறந்துபோன
எச்சங்களாவது
கிடக்கும்
சிதறல்களாக

எச்சமே
இல்லாமல்
இறந்து போயிருக்கும்
தீ.......

11.22.2009

பசியின் சிதறல்கள்

எனக்குப்
பசியில்லாததால்
பழுதாகிக்
கொண்டிருந்தது
பையிலிருந்த
சாப்பாடு...
பக்கத்திலிருப்பவனுக்கோ
பசி


*********************************

குழந்தையின்
பசியைப் போக்க
அம்மா பால்
கொடுத்தாள்
அம்மாவின்
பசியைப் போக்க
குழந்தை
சிரித்தது....

*************************
பசியை
வெளிப்படுத்தும்
குழந்தையின்
மொழி
அழுகை

மனிதனுக்கு
அழக் கற்றுக்
கற்றுக்
கொடுகிறது
பசி

அதுதான்
சிரிக்கும்
விலங்கு
மனிதன்
என்றாலும்
எல்லா
மனிதர்களாலும்
சிரிக்க
முடியாது
ஆனால்
அழ முடியும்..


*******************************

முகூர்த்த
நேரத்திற்காக
ஆவலோடு
காத்திருந்தார்கள்
தாலி
கட்டும்போது
வாழ்த்துவதற்காகல்ல
அதற்குப்பிறகுதான்
சாப்பாடு


***************************

11.19.2009

வாழ்க்கை நிறையக் கவிதை

பெண்களின்
கற்பை
அழித்தாலும்
ஆண்களின்
கற்பினைக்
காப்பாற்றி
விடுகின்றன
ஆணுறைகள்


*******************

நிலவைபார்த்துச்
சாப்பிடப்
பழகிய
குழந்தை...
நிலவைப்
பார்த்துச்
ஏமாறுகிறது
சாப்பாடு
எங்கே?

******************

கடவுளே
இல்லையென்று
வாதிட்டுவிட்டு
கோயிலுக்குப்
போனான்
மன்னிப்புக்
கேட்க...


*****************

பசியில்
அழுகின்ற
குழந்தைக்கு
பாசத்தை
ஊட்டிக்கொண்டிருந்து
வெற்றுச்
சூப்பி...

**************************

கொஞ்சமாய்
கிடைக்கும்
அரிசியில்
அதிகமாய்க்
கலந்து
சமைக்கும்
பாசமே
நிறையப்பேரின்
பசியை
ஆற்றுகிறது...
ஏழை
வீட்டில்

***************


சிக்னல்
நிறுத்தத்தில்
பிச்சை
கேட்கும்
சிறுவனின்
பசியின்
அவசரம்
புரியாமல்....
பேர்சை
எடுப்பதற்குள்
விழுந்துவிடுகிறது
பச்சை
விளக்கு


**********************

புது வருடத்தில்
புது மனிதனாய்
வாழ
சாபதமெடுததேன்..
கதவைத்
தட்டினான்
பழைய
கடன்காரன்


************************


11.18.2009

ஒரு காதல் கவிதை

உன் மௌனம்
என் மரணத்தின்
நிகழ்கால
ஒப்பாரி...


......................................

இத்தனை
வருடமாய்
கற்றுக் கொண்ட
என் வாழ்க்கை
ஒற்றை நொடியில்
முடியும் முன்...
நீ
காதலிக்கக்
கற்று கொள் !

**********************

வார்த்தைகளில்
அடக்க முடியாத
என் வாழ்க்கையினை
உன் மௌனத்தில்
அடக்கி விடுகிறாய் ......

***********************


நீ என்
கனவில் வந்தாய்
விடியம்
எழும்பிப் பார்த்தேன்
என் கட்டில்
நிரம்ப
கவிதை
நிரம்பிக்
கிடந்தது


***********************

இத்தனை
வருடமாய்
நான் பிறந்து
கொண்டிருந்தேன்
நீ பார்த்த
போதுதான்
என் பிறப்பு
முற்றுப் பெற்று
வாழத்
தொடங்கினேன்...


**********************



11.17.2009

விபரீதமான சில கவிதைகள்




வன்முறை


ரசிப்பதற்காய்
அடைத்து
வைத்த
குருவியின்
குஞ்சுகள்
அனாதைகள்....


விர()க்தி

குடம்
குடமாய்
பால்
ஊற்றினார்கள்
சாமி
அழுதுகொண்டிருந்தது
பசியோடு
கன்றுகள்


அபலைகள்

அனாதை
இல்லத்தில்
அம்மாக்களும்
அப்பாக்களும்
இல்லாத
குழந்தைகள்....

முதியோர்
இல்லத்தில்
பிள்ளைகள்'
இருக்கும்
அம்மாக்களும்
அப்பாக்களும்



விபச்சாரியின் வேண்டுகோள் !

கொடுக்கிற
காசிற்கு
என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்
மார்பினை மட்டும்
கசக்கி விடாதே
குழந்தைக்காக
சேர்த்து
வைத்திருக்கிற
சில துளி
பாலையும்
வீணாக்கி விடாதே!



அழுக்கு

உங்கள்
கண்களில்
இருக்கும்
அழுக்கினை
அகற்றி
விடுங்கள்
எல்லோரும்
அழகுதான்


மூட நம்பிக்கை

ஆத்திகத்திற்கும்
நாத்திகத்திற்கும்
இடையே
ஒரே ஒரு
வேறுபாடுதான்
கற்களை
கடவுளாக்கிப்
பார்ப்பது
ஆத்திகம்
கடவுளை
கற்களாக்கிப்
பார்ப்பது
நாத்திகம்...



கடவுளுக்கு
நான்
கொடுத்த
நேர்த்திக்
கடன்தான்
வாழ்க்கையில்
நான் கொடுத்த
முதல்
லஞ்சம்


ஆதிக்கம்

அப்பன்
பெயர் தெரியாத
குழந்தைகள்
என்று
குழந்தைகள்
தண்டிக்கப்பட
அப்பாக்கள்
தப்பித்து
விடுகிறார்கள்


சேமிப்பு

என்னை
அறியாமல்
தூங்கிப்
போனாலும்
விடியும் போது
நான்
இருக்கிறேன்
நானாக..


வாழ்க்கை

நான்
வாழ்ந்து
முடிக்கும்
முன்பே
என்
வாழ் நாளின்
ஒவ்வொரு
நாட்களும்
முடிந்து
போகிறது



முகவரி

அகதி முகாமில்
பிறக்கும்
குழந்தைக்கு
வீடு
அகதி முகாம்


பாசம்

பசியில்
அழுகின்ற
குழந்தையின்
வாயில்
வேறு
வழியில்லாமல்
வெற்றுச்
சூப்பியை
வைக்கும் போது
தூங்கிப் போன
குழந்தைகள்
சிலவேளை
நடிக்கலாம்
தூங்குவதைப் போல..
அம்மாக்கள்
கவலைப் படக்கூடாது
என்பதற்காக


11.08.2009

சின்னதா சில கவிதைகள்

ஒரு விபச்சாரியின் நியாயம்

கற்பின்
விலையைத்
தீர்மானிக்கும்
பசி


கற்பை
புனிதமாக்கி
பக்தனாக
இருந்தாலும்
பசிக்கு
அடிமையாகத்தான்
இருக்க
வேண்டும்

**********************


ஒரு காதல் கவிதை

கடவுள்
எத்தனை
அழகான
கவிதைகளை
படைத்திருந்தாலும்
எழுத்துப் பிழை
இல்லாமல்
எழுதிய
முதல் கவிதை
நீ.....

*************************


சின்னதா ஒரு கற்பனை

ஒரு துளியையேனும்
வீணாக்காமல்
குடித்துக் கொண்டிருந்தது
மண்
பெய்து கொண்டிருந்து
மழை ....


**************************

திருவிழா]

பண்டிகையில்
மிஞ்சியதை
அடுத்தநாள்
குப்பையில்
கொட்டினார்கள்...
பிறந்தது
தெருவோரக்
குழந்தைகளுக்குப்
பண்டிகை



********************




11.01.2009

சீரியஸா ஆனால் சின்னதா மூன்று கவிதை

அம்மா

முதல் முறை
குழந்தை அழுதது
அம்மா சிரித்தாள்
மீண்டும் மீண்டும்
அழுதது
அம்மா மரித்தாள்
**************************************

தடுக்கி விழுந்த
குழந்தைக்கு
வலிக்கவில்லை
ஆனாலும்
அழுதது...
ஆனால்
அம்மாவுக்கு
வலித்தது



செருப்பு

சுமையாகிப்போனது
அறுந்த
செருப்பு

*****************************************

புதிய செருப்பை
கழற்றிவிட்டு
கோயிலுக்குள்
போனேன்...
அடிக்கடி
வெளியே வந்து
போனது
மனசு


***************************************

காதல்

கோபத்தில்
என்
தொலைபேசி
அழைப்பை
மறுத்தாய்...
எனக்கும்
கோபித்துக்
கொள்ள
ஒரு
காரணம்
கிடைத்துவிட்டது

கோபங்கள்தானே
பிரிந்திருக்கிற
நம்மை
சிலவேளைகளில்
சேர்த்துவைக்கிறது...

கோபத்தை
தீர்த்துக்
கொள்வதற்காகவே
அடிக்கடி
சந்தித்துக்
கொள்கிறோம்