2.25.2010

இரண்டுவரிக் கதை ( அல்லது எதோ என்று? )

தந்திரம்

பயந்தோடுவதாய் ஆவியைப் பார்த்துச் சிரித்தது
நெருப்பு- ஆவி ஒடுங்கி நீராகும்வரை...ஆண்டு 2025

குடித்துக் குடித்தே வாழ்ந்தவன்
செத்துப்போனான் குடிக்க நீரில்லாமல்.


திருமணம்

?
முதிர்கன்னிதண்டனை

கண்ணாடி பார்க்கும்போதெல்லாம் ஞாபகப்படுத்துகிறது
நெற்றி ! இறந்து போனவனை.
பசி

அம்மா தாயென்று எல்லோரையும் அழைக்கும்
உரிமை அனாதைக்கும் கிடைத்தது பிச்சையேடுக்கும்போதுபூச்சாண்டி

சொல்வதெல்லாம் உண்மை உண்மை உண்மை
அதற்குப்பின்னும் சாட்சி கேட்டார் நீதிபதிபசி

வெறுமையான வயிறு நிரம்ப
பசி


இப்படியானதொரு முன்னைய எனது பதிவு..


வரிக்கதை

தலைப்பு - கைபேசி
கதை- இருந்தும் என்ன பயன் நீ பேசாமல் .

தலைப்பு - நிஜம்
கதை - யாவும் கற்பனை சில கதைகளின் முடிவில்

தலைப்பு- மூன்று பொய்
கதை- நான் சொல்லுவதெல்லாம் உண்மை நீதிமன்றத்தில்

தலைப்பு-இரு சொல் கதை
கதை- கற்பனை செய்துகொள்

தலைப்பு - ஜனநாயகம்
கதை- எல்லோரும் பேசலாம் எழுதிக்கொடுபபத்தை மட்டும்

தலைப்பு- கலர் டீ வி
கதை - ஓட்டுக்கு லஞ்சம்

தலைப்பு- ஒருசொல் கதை
கதை- முற்றும்

2.23.2010

வாழ்க்கை நிறையக் கவிதை 6

ஆயிரமோ
ரெண்டாயிரோமோதான்
கொடுத்துவிட்டுப்
போனான்...
எல்லோரும்
சொன்னார்கள்
கற்பிழந்தவள்
என்று

சீ
கற்பின் மதிப்பு
இவ்வளவுதானா?..........................................

வேலைக்களைப்பைப்
போக்க குடித்தவன்
இழந்தான்
மனைவி தரும்
தேனீரில்
இருக்கும்
போதையை...

...........................................

குழந்தையின்
முதல் அழுகை
உணர்த்தியது
பிர சவம்
அல்ல
பிற சுகம்

............................................


எனக்கு
மட்டுமே
தெரிந்த ஒரு
ரகசியத்தை
சொல்ல நினைத்த
போதுதான்
அறிந்து கொண்டேன்
ஏற்கனவே
என்னை
அது
கொன்று விட்டிருந்தது........................................................


தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
கடவுள் சொன்னதை
கடைமுன்னே
எழுதிவைத்தான்
வட்டிக்கடைக்காரன்...


.....................................................

2.13.2010

காதலர் தின சிறப்புக்கவிதை... ரெண்டு

பீச்
பூங்கா என்று
அலையாமல்
காதலர்
தினத்தைக்
கொண்டாட
கோயிலுக்குப்
போனோம்

விலையுயர்ந்த
ஐஸ் கிரீமோ
சிக்கன் 65 வோ
இல்லை ..

எனக்கு நீயும்
உனக்கு நானும்
இட்டுக்கொண்ட
திருநீறும்
சந்தனப்பொட்டும்
காதலை
பரிமாற வைத்தன

மற்ற
திருவிழாக்களைப்
போலல்ல
கோயிலில்
கூட்டம்
குறைவாகத்தான்
இருந்தது
காதலர்
தினத்தன்று***********************
கூடப்படிக்கும்
பொண்ணு போடும்
வளையல்

பக்கத்துவீட்டுப்
பொண்ணு
கட்டும் சேலை

இப்படி இன்னும்
பல ..
என்று உன்
விருப்பப் பட்டியல்
தெரிந்திருந்தும்..

வாங்கித்தர
வசதியில்லாமல்....

நிலவைப்
பிடித்துத்
தருவேன்...
நட்ஷத்திரத்தை
பரிசளிப்பேன்
என்று
கவிதை எழுதி
சமாளிக்கும்
போது...

நீ சந்தோசப்
படுகிறாயா
அல்லது
நான்
கவலைப்படக்
கூடாது
என்பதற்காக
சந்தோசப்படுவதாய்
நடிக்கிறாயா?


2.08.2010

அறிவு

மனிதனுக்கு
எத்தனை
அறிவு?
பதில்
சொல்லவாவது
பயன்படுகிறது
ஆறாவது
அறிவு