7.04.2009

குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு

அநேகமானோர் வலிப்பு ஏற்பட்ட நபரை நேரிலே பார்த்த அனுபவம் பெற்றிருக்கலாம்,அல்லது சினிமாவிலாவது கட்டாயம் பார்த்திருக்கலாம். ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டாலே அவருக்கு காக்காய் வலிப்பு(எபிலெப்சி/epilepsy )நோய்தான் இருக்கிறது என்று நம்மவர்கள் முடிவு செய்து விடுகிறார்கள்.

காக்காய் வலிப்பு எனும் நோய் தவிர இன்னும் பல விதமான நோய்களிலேயும் வலிப்பு ஏற்படலாம். வலிப்பு ஏற்பட்டவர்களுக்கெல்லாம் காக்காய் வலிப்பு எனும் நோயில் வரும் என்ற தவறான கருத்தை நீங்கள் விட்டொழிக்க வேண்டும்.

இந்த இடுகையில் நான் சிறு பிள்ளைகளுக்கு காய்ச்சலோடு ஏற்படுகின்ற வலிப்பு(febrile fits ) பற்றி சில விடயங்களை சொல்கிறேன்.

ஒரு சிறு பிள்ளைக்கு காய்ச்சல் வந்திருக்கும் நேரத்தில் வலிப்பு வந்தால் ,

முதலாவதாக நீங்கள் சிந்திக்க வேண்டியது அது மூளைக்காய்ச்சலாகவும் இருக்கலாம் . ஏனென்றால் மூளைக்காய்ச்சளில் காய்ச்சலோடு வலிப்பு வரும்.

அடுத்ததாக அது காய்ச்சலோடு வரும் சாதரண வலிப்பாக இருக்கலாம். அநேகமான சந்தர்ப்பத்திலே சிறு பிள்ளைக்கு காய்ச்சல் வரும் போது அது febrile fits ஆகத்தான் இருந்தாலும், நாம் முதலில் மூளைக்காய்ச்சளைச் சிந்திப்பது , மூளைக்காய்ச்சல் மிகவும் ஆரம்பக்கட்டத்திலே இனங்காணப்பட்டு சுகமாக்கப் பட வேண்டியது என்பதாலே .

ஆகவே முதன் முறையாக உங்கள் பிள்ளைக்கு காய்ச்சலோடு வலிப்பு வந்தால் அது மூளைக்காய்ச்சல் அல்ல என்று நிரூபிக்கப்பட வேண்டும். அதற்காக அந்தக் குழந்தை வைத்தியரிடம் அழைத்துப் போகப்பட வேண்டும். வைத்தியர் அது மூளைக் காய்ச்சல் அல்ல வெறுமனே சாதரண காய்ச்சலோடு வருகின்ற வலிப்பே(febrile fits ) என்று சொல்வாரானால் நீங்கள் எந்த வகையிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

febrile fits எந்த வயதினருக்கு ஏற்படும்?

பிறந்து ஆறு மாதத்தில் இருந்து 5-6 வருடங்கள் வரையான குழந்தைகளுக்கே ஏற்படும் .
(இந்த வயதெல்லைகளுக்கு அப்பாற்பட்ட குழந்தைகளுக்கும் காய்ச்சலோடு வலிப்பு ஏற்படலாம் என்றாலும் , அவர்களுக்கு சற்று அதிகமான மருத்துவக் கண்காணிப்பு வழங்கப் பட வேண்டும்)

ஒருமுறை febrile fits வந்தால் மீண்டும் வருவதற்கான சந்தர்ப்பம் உள்ளதா?

30 வீதமான குழந்தைகளுக்கு மீண்டும் காய்ச்சல் வரும் சந்தர்ப்பத்திலே febrile fits வரலாம்.

febrile fitsயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காக்காய் வலிப்பு நோய் ஏற்படலாமா?

மிகவும் அரிதாகவே ஏற்படும்(2%) . அதாவது febrile fits ஏற்படும் பட்சத்தில் பெற்றோர் காக்காய் வலிப்பு நோய் ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவை இல்லை.

ஒருமுறை febrile fits ஏற்பட்ட குழந்தைக்கு மறு முறை காய்ச்சல் வரும் போது தாய் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்ன?

ஏற்கனவே சொன்னது போல மீண்டும் காய்ச்சல் ஏற்படும்போது மீண்டும் ஒருமுறை febrile fits வருவதற்கான சந்தர்ப்பம் உள்ளதால், தாய் சற்று கவனம் எடுப்பது நல்லது.

குறிப்பாக காய்ச்சல் அதிகமாகாத படி கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்காக பரசிட்டமோல் எனப்படும் மருந்து இலகுவாக கடையிலே பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு தாயும் தன் குழந்தையின் நிறைகேற்ப எவ்வளவு பரசிட்டமோல் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
( பரசிட்டமோல் மருந்தும் வைத்தியர் அறிவுறித்திய அளவுக்கே கொடுக்கப் பட வேண்டும். அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டால் அதுவும் நஞ்சாகி குழந்தையின் ஈரலை பாதிக்கலாம்)

அதேபோல் ,தாய் இயற்கையான சில வழிமுறைகளிலே குழந்தையின் காய்ச்சல் ( உடல் வெப்ப நிலை) அதிகரிக்காமல் கவனித்துக் கொள்ள முடியும்.

அவையாவன ,

  1. ஈரமானதுணியினால்குழந்தையைதுடைத்தல்
  2. மின்விசிறியின்கீழ்குழந்தையைபடுக்கவைத்தல்
  3. மெல்லியஆடைஅணிவித்தல்

febrile fits ஏற்பட்ட குழந்தைக்கு அதை தடுப்பதற்காக ஏதாவது மருந்துகள் கொடுக்கப் பட வேண்டுமா?

வலிப்பைத் தடுப்பதற்காக எந்த ஒரு மருந்தும் தொடர்ச்சியாக கொடுக்கப் படவேண்டிய அவசியம் இல்லை இருந்தாலும் , சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வருபோழுது febrile fits வராமல் தடுப்பதற்க்காக சில மருந்துகள் பயன்படுத்தப் படலாம். இவை ஒரு வைத்திய நிபுணரின் ஆலோசனையுடனேயே வழங்கப் படவேண்டும்.
( எல்லாக் குழந்தைகளுக்கும் வழங்கப் பட வேண்டியதில்லை)

febrile fits ஏற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப் படும் போது ஏதாவது முன் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமா?

febrile fits ஏற்பட்ட குழந்தைக்கு எலாவிதமான தடுப்போசிகளும் வழங்கப்பட வேண்டும். ஆனாலும் தடுப்போசி போடுவதற்கு முன் வைத்தியரின் ஆலோசனை பெறப்பட வேண்டும். சிறு மேலதிக கவனிப்பும் சில தடுப்போசிகளுக்குத் தேவைப்படலாம். சில தடுப்போசிகள் சற்று பிற் போட வேண்டி வரலாம். ஆகவே வைத்தியரின் ஆலோசனை பெறுவது முக்கியமானது.

ஒரு பிள்ளைக்கு வலிப்பு வரும் போது அருகில் இருப்பவர்கள் செய்யவேண்டிய முதல் உதவி பற்றி வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய நடைமுறைகள் என்ன ?

முதலில் பிள்ளையை ஒரு பாதுகாப்பான இடத்தில் படுக்க வைக்க வேண்டும் .

பிளையின் மூச்சுகுழாய் அடிபடாமல் இருக்க இடதுபுறம் சரிவாக படுக்க வைக்க வேண்டும் அதாவது பிள்ளையை இடதுபுறமாக பக்கவாட்டில் படுகவைகவேண்டும் (மல்லாக்க படுக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்)

நமது சினிமாப் படங்களில் காட்டுவதைப் போல கையிலேயோ அல்லது வாயிலோயோ இரும்பு துண்டை வைப்பதை தவிர்க்க வேண்டும்.(இரும்பை கையில் வைத்தவுடன் வலிப்பு சுகமாவது போல் படங்களில் காட்டப்படுவது வெறும் கற்பனையே, அதற்கும் மேல் இரும்பை கையில் வைக்கும் போது பாதிப்பு ஏற்படலாமே தவிர எந்தவகையிலும் நன்மை ஏற்படாது)

வலிப்பு 5நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் .( அப்போதும் முடிந்தளவு பிள்ளையை இடது புறமாக சரித்த நிலையிலேயே கொண்டு செல்ல வேண்டும்).

இது பற்றிய சரியான நடைமுறையை ஒவ்வொரு தாயும் வைத்தியரிடம் கேட்டு அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவர்களின் கடமை. இது ஒரு உயிர் காக்கும் செயமுறையாகும்.


பி.கு- இந்த இடுகை ஒரு பதிவரின் தேவை அறிந்து , அவருக்காக இடப்படுகிறது.
ஓரினச் சேர்க்கையும் நம் எழுத்தாளர்களும்

இப்போது தமிழ் மண முகப்பை திறந்தாலே பிரதான விடயமாக தெரிவது ஓரினச்சேர்க்கை சம்பந்தமான தலைப்புக்களே.

ஆச்சரியமாக இருக்கிறது!

சில வருடங்களுக்கு முன் இப்படி வெளிப்படையாக இத்தனை பேரால் இந்த விடயம் துணிந்து கதைக்கப்பட்டதா?

பல வருடங்களுக்கு முன் இவ்வளவு பெரியளவில் பேசாவிட்டாலும் ஆண்டவன் காலத்திலேயே ஓரினச் சேர்க்கை இருந்ததற்கான சான்றுகளை பட்டியலிட்டே பல இடுகைகள் இப்போது இடப்படுகின்றன.
இருந்திருக்கலாம்!
ஆனால் அவை ரகசியமாகவே இருந்திருக்கும். இப்போதும் அப்படி ரகசியமாகவே இருந்து விட்டுப் போகட்டுமே? என் இதை அம்பலமாக்கி அதற்கு ஒரு சமூக அந்தஸ்தை உருவாக்க முனைகிறீர்கள்.

உண்மையில் வெளிநாட்டவர்களிடம் இருக்கும் அத்தனை மாற்று பாலியல் வழிமுறைகளும் எம் சமூகத்திலும் இருக்கின்றன, ஆனால் அவற்றை வெளிநாட்டவர்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கி அங்கிகாரம் பெற்று நெடு நாட்களுக்குப் பிறகே நம்வர்கள் பேசத்தொடங்கி உள்ளார்கள். இவ்வாறு நம்வர்களையும் பேச வைத்த துணிச்சல் நம் எழுத்தாளர்களையும் , சினிமாவையுமே சாரும்.

ஒரு சினிமாவில் வடிவேல் `` நீ அவனா?`` என்று கேட்ட வசனம் எந்தளவிற்கு பிரபலமானது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் , அதே போல் மொழி திரைப்படத்தில் நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்ட ஓரினச்சேர்க்கை பற்றிய காட்சிகள் போன்ற காட்சிகளையும் நாம் ரசித்தோம். இப்படிப் பட்டகாட்சிகள் இப்போது சர்வசாதரணமாக படங்களிலே வரத்தொடங்கி விட்டன.

அதேபோல நம் எழுத்தாளர்களும் சர்வ சாதாரணமாக இதைப்பற்றி எழுதத் தொடங்கிவிட்டார்கள்.
உதாரணத்திற்காக ஒன்று ,

//ஒரு மாதுவின் துணை இல்லாமல் இரண்டு ஆண்கள் பல மணி நேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்றால், மதுவின் துணையாவது வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள், " வேறு மாதிரி' ஆட்களாக இருக்க வேண்டும் என்பது அடியேனின் கருத்து. ஆனால், எங்களுடைய சந்திப்புக்கான செலவு, மாதம் ஒன்றரை லட்சம்.//

இது ஒரு பிரபலத்தின் கதையின் சிறு பகுதி.

அதேபோல் பயர் என்றொரு படம் பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்தது, அப்போது அந்தப் படம் வெளிவந்த பொழுது இருந்த எதிர்ப்பு இப்போது வெளியடப்படும் அதே கருத்துள்ள ஒரு படத்திற்கு நிச்சயமாக இருக்காது.

அந்தளவிற்கு நாம் முன்னேறி விட்டோம் என்று நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாமா?

ஓரினச் செக்கை சம்பந்தமான எந்த ஒரு படைப்பையும்( பயர் உட்பட) பார்த்தபோது நான் உணர்ந்து கொண்டது, ஓரினச் சேர்க்கை பற்றிய அவர்களின் கருத்தை சிறப்பான படைப்பாக்கி இருக்கிறார்கள். ஆனால் ஓரினச் சேர்க்கை பற்றி அவர்கள் அறிந்திருப்பது ஒரு பக்கம்தான் , அதற்கு இன்னுமொரு கொடுமையான முகமும் இருக்கிறது என்பதை, நிச்சயமாக இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை அவர்களால் கூட மறுக்க முடியாது.

இவர்கள் எல்லோரும் கையில் எடுத்துக் கொள்வது ,மருத்துவ ஆதாராங்களை.
மருத்துவத்தின் படி ஓரினச்சேர்க்கை என்பது மன நோயோ அல்லது மருத்தவரிடம் காட்டப்பட வேண்டிய விடயமோ இல்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இதை மையமாக வைத்துதான இன்று ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக பேசும் அனைவரும் வாதிடுகிறார்கள்.

ஆனால் இவர்களுக்குத் தெரியுமா?

ஆண் பெண் புணர்தலின் போது எயிட்ஸ் தொற்றுவதை விட ஓரினச் சேர்க்கையின் போது தொற்றுவதற்கான சந்தர்ப்பம் எத்தனையோ மடங்கு அதிகம்.

மற்றது, ஆண் பெண் உறவின் போது எயிட்சை தடுப்பதற்காக இல்லாவிட்டாலும் கர்ப்பம் தரிப்பதை தடுப்பதற்காகவேனும் கொண்டம் பயன்படுத்துவார்கள். அது அவர்களை அறியாமலேயே எயிட்ஸ் பரவுதலை தடுக்கலாம். ஆனால் இந்த ஓரினச் சேர்க்கை மனிதர்களுக்கு கர்ப்பம் என்றொரு பயமே இல்லை, ஆக இவர்களுக்கு எயிட்ஸ் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி கொண்டம் பாயன்படுத்தும் போது இந்தியா வல்லரசாக ஆகும் முன் எயிட்ஸ் அரசாக மாறிவிடும்.

எயிட்ஸ் என்பதை தாண்டி மற்ற எல்லாவிதமான பாலியல் தொற்றும் ஓரினச் சேர்க்கையில் ஏற்படும்.

இவர்களுக்கு மலவாயில் புற்று நாய் இவர்களுக்கு வருவதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோல் gay bowel syndrom எனும் நாய் ஓரினச் சேர்க்கை ஆண்களுக்கு ஏற்படலாம்.

மற்றும் ஓரினச் சேர்க்கை செய்யும் நபர்களின் இடையே போதைப் பழக்கமும் சர்வ சாதரணமாக இருக்கின்றது.


இது எது பற்றியும் அறியாமலேயே அல்லது அறிந்திருந்தாலும் இவற்றை தவிர்த்து , ஓரினச் சேர்க்கை என்பதும் ஒரு உணர்வுதான் அவற்றை நாம் மதிக்க வேண்டும் என்பது போலவே இவர்களின் படைப்பும் இருக்கிறது.

அதற்கப்பால் இந்தப் படைப்பாளிகளின் சமூகப் பார்வையும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருக்கிறது. இவர்கள் அறிந்திருப்பது ஓரினச்சேர்க்கை என்பது ஒரே நிலையில் இருக்கும் ஆணுக்கும் ஆணுக்கும் அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவு என்றுதான் . இவ்வாறு மட்டும் இருந்தால் பரவாய் இல்லை , எல்லோரும் சகித்துக் கொள்ள பழகிவிடுவார்கள்.
இன்று கள்ளக் காதலர்கள் வெளிப்படையாக செய்கின்ற சில்மிசங்களைச் சகித்துக் கொள்வதைப்போல , ஒரு ஆணும் ஆணும் அல்லது ஒரு பெண்ணும் பெண்ணும் பீச்சிலும் , பஸ்சிலும் செய்கின்ற சில்மிசங்களையும் சகித்துக் கொள்வார்கள்.

ஆனால் இதற்கு அப்பாலும் இது மாபெரும் கலாச்சாரச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை ஒரு துளி கூட யோசிப்பதாக இவர்களின் படைப்புக்களில் காட்டவில்லை.

குறிப்பாக குழந்தைகளோடு உறவு கொள்ளவே விரும்பும் அநேகமான பெரிய மனிதர்கள் ஓரினச் சேர்க்கை வாதிகள். ஆக , நீங்கள் ஓரினச் சேர்க்கைக்கு அங்கிகாரம் வழங்குவதன் மூலம் ஓரினச் சேர்க்கை வாதிகளின் எண்ணிக்கையைக் அதிகரித்து விட்டால், சீரழியப் போவது நம் குழந்தைகளும்தான் .

மற்றும் ஒரு பெண் பிள்ளையை ஒரு ஆண் திருட்டுத் தனமாக கடத்திப் போய் துஷ்பிரயோகம் செய்வது என்பது , கடினமானது, மற்றவர்களால் இலகுவாக இன் காணப்பட்டு தடுக்கப் படக்கூடியது .
ஆனால் ஒரு ஆண் ஒரு ஆண் பிள்ளையை ஏமாற்றிக் கொண்டு போய் துஷ் பிரயோகம் செய்வதை இனங்கண்டு தடுப்பது என்பது சாத்தியம் குறைவானது.

ஓரினச் சேர்க்கை என்னும் செயற்பாடு அதிகமாக நடைபெறும் சந்தர்ப்பம் ராணுவத்தில் இருக்கும் படை வீரர்களுக்கிடையேயும் , விடுதிகளில் தங்கி உள்ள பெண்கள் / ஆண்களுக்கிடையேயும் (இது என் கணிப்பல்ல கருத்துக் கணிப்புக்களின் அடிப்படையில்).

ராணுவத்தில் இருக்கும் ஓரினச் சேர்க்கைவாதிகளுக்கிடையே நடத்தப் பட்ட ஒரு ஆய்வில் , அவர்கள் ராணுவ சேவைக்கு உரிய மன நிலைமை அற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஓரினச் சேர்க்கை செய்வோரின் மனநிலைமை, மற்றவர்களிடம் இருந்து ஏதோ ஒருவகையில் வேறுபடத்தான் செய்கிறது.

யார் சொன்னாலும் , சொல்லாவிட்டாலும் எமது சமூகத்திலும் ஒரினச்செர்ககி இருக்கத்தான் செய்தது. இவ்வளவு காலமும் ரகசியமாக இருந்த இந்த செயற்பாட்டுக்கு எமது சமூகத்திலேயே அங்கிகாரம் தாருங்கள் என்று போராடும் அளவிற்கு காரணம் நமது படைப்பாளிகளே.

ஒரு விடயம் தொடர்ச்சியாக எதிர்க்கப்படும் போதும் , திரும்ப திரும்ப எழுதப் பட்டால் அதுவே மக்கள் மனதில் பதிந்து போய் விடும். பிறகு மக்களும் அந்த விடயத்தை வெளிப்படையாக பேசத்தொடங்கி விடுவார்கள். அதுதான் இப்போது இந்த ஓரினச் சேர்க்கை விடயத்தில் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது.

ஆகவே ஓரினச் சேர்க்கை பற்றி எழுதும் நபர்களே, படம் பன்னுபவர்களே!

நீங்கள் வெறுமனே ஓரினச்சேர்க்கை செய்து சந்தோசமாக இருக்கும் நபர்களின் உணர்வுகளை மட்டும் அறிந்து வைத்துக்கொண்டு , இது பற்றி பேசுவதை விட்டு, ஓரினச் சேர்க்கை காரணமாக சீரழிந்து போன நபர்களின் அனுபவங்களையும் அறிந்து விட்டு பேசினீர்களே ஆனால் மட்டுமே உங்களால் அந்த விடயத்தை நேர்த்தியாக பேசமுடியும்.

அவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் சொல்லுவது நூறு வீதம் சரி என்றே வைத்துக் கொள்வோம்.அதற்காக அவர்களின் உணர்வை மதித்து சமூக அந்தஸ்தை வழங்கி அந்த மனநிலையை இருந்தாலும் அதைக் கட்டுப்படுத்தி சீராக வாழ்பவர்களையும் சீரழிக்க நினைப்பது எந்த வகையில் நியாயம்.


குறிப்பாக தாங்கள் பகுத்தறிவு வாதிகள் என்று முத்திரை குத்திக் கொண்டு கடவுளே ஓரினச் சேர்க்கை செய்யும் போது மக்கள் என் செய்ய முடியாது என்று வாதிடும் நபர்களே !
நீங்கள் கடவுளை எதிர்ப்பது உங்கள் உரிமைய ஆனால் ஓரினச்சேர்க்கைக்கு அங்கிகாரம் வழங்க நினைப்பது எந்த வகையில் நியாயம் .

இறுதியாக ஒரு கேள்வி!!!!!!!!!!!

ஓரினச் சேர்க்கை போல்தான் , இன்செஸ்ட்(incest) () எனப்படுவதும் ஒரு மாற்று பாலியல் செயற்பாடுதான். இதைப்பற்றியும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாட்டவர்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளார்கள். சில காலங்களில் அவர்கள் இதற்கும் அங்கிகாரம் தேவை என்று போராடலாம்.
(பிணங்களோடு உறவு கொள்ளும் மனிதர்கள் என்ற http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_9503.html இந்தப் பதிவையும் பாருங்கள்)

இப்போது ஓரினச் சேர்க்கைக்கு அங்கிகாரம் தேடும் பகுத்தறிவு வாதிகளே! ஓரினச்சேர்க்கை கருத்துக்களை சமூகத்திற்குள் விதிக்கும் எழுத்தாளர்களே!

இன்செஸ்ட் என்பதற்கு ஏதாவது ஒரு வெளிநாடு அங்கிகாரம் வழங்கினால் நீங்களும் அதற்கு அங்கிகாரம் வேண்டும் என்று போராடுவீர்களா?

இன்செஸ்ட் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத உறவுகளோடு உறவு வைத்தலைக் குறிப்பது. அதாவது தாய் மகன் உறவு, அப்பா மகள் உறவு, சகோதரன் சகோதரி உறவு கொள்ளுதல்.

இந்த விடயத்திகும் அங்கிகாரம் வேண்டும் என்று போராட்டம் நடத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இப்போதே நம்மவர்கள் வெளிப்படையாக , தந்தை மகள் உறவு பற்றி பேசுகிறோம்.

// மகளை வன்புணர்ச்சி செய்யப் போனதால்தான், அவரது முதல் மனைவி அவரை அடித்து விரட்டினார். //

இது இப்போது வெளிப்படையாக பேசப்படும் ஒரு விடயம். இது உண்மையா பொய்யா என்று ஒரு துளி கூட எனக்குத் தெரியாது. ஆனால் நான் சொல்வது, இப்படியே நாம் வெளிப்படையாகப் பேசத் தொடங்குவது, கொஞ்சம் கொஞ்சமாக பெருகி ஒருகாலத்தில் அதற்கும் அங்கிகாரம் வேண்டும் என்ற ஒரு நிலைக்கு நம் சமூகத்தை கொண்டு விடலாம்.

அப்போது பயர் என்ற ஓரினச் சேர்க்கை என்ற உணர்வை சிறப்பாக வெளிப்படுத்திய படம் போல் , தாய் மகன் உறவு கொள்வதை சிறப்பாக வெளியிடும் ஒரு படமோ, அல்லது வடிவேல் தன மகள் முறையான பெண்ணோடு உறவு கொள்வது போல் ஒரு நகைச்சுவைக் காட்சியோ எடுக்கப்பட்டால் ஆச்சரியம் இல்லை.

கொஞ்ச காலத்திற்கு முன் ஓரினச் சேர்க்கைய எதிர்த்தது போல இந்தப் படங்களையும் எதிர்ப்போம், பிறகு திடீரென ஒருநாள் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் இப்படி விருப்பப் பட்டு தகாத உறவு வைப்பதும் தவறு இல்லை என்று( இன்று ஓரினச் சேர்க்கைக்கு அங்கிகாரம் வழங்கி உள்ளத்தைப் போல) .

அப்போது நம் பகுத்தறிவு வாதிகள் என்று எழுதும் நண்பர்கள் பார்வதியும் முருகனும் உறவு வைத்து இருந்தார்கள் என்று சான்று பகிரத் தொடங்குவார்கள்.

ஓரினச் சேர்க்கை செய்பவர்களின் உணர்வை நாம் மதிக்க வேண்டு என்று கேட்பவர்களே!
அப்படியானால் இன்செஸ்ட் நடைமுறையில் உள்ளவர்களின் உணர்வையும் நாம் மதிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்பதில் நியாயம் இருக்கத்தானே செய்யும்.

இறுதியாக இரண்டு விஞ்ஞானக் கருத்துக்களும் என் கருத்தும்....

உடலுறவு (sex) சென்பது இனங்களின் நிலவுகைக்கு அத்தியாவசியமானது, தனி மனிதர்களின் நிலவுகைக்கு அல்ல.

தன் இனத்தைப் பேருக்கும் வல்லமை உள்ளதே தனியன் எனப்படும். அப்படியானால் இனம் பேருக்கும் வல்லமை இல்லாத ஓரினச் சேர்க்கை செய்யும் நண்பர்கள் சனியன் என்றா சொல்லப்படும் .

7.03.2009

நான் ரசித்த வேறு ஒருவரின் கவிதையும் , எனது கவிதை ஒன்றும்...அ(ணை)னைப்பு …


கற்புக்கு பெயர் போன
கண்ணகியின் சிலைக்குப் பின்
காதலர்களின் சில்மிஷம்
திருமணத்திற்கு முன்பே…

காதல் தீ
பற்றிக் கொள்ள
அணைக்கின்றது
காதலர் ஜோடி
கண்ணகியின்
கோபத்திற்கு ஆள்பட்டு
சென்னை எரிந்தால்
அணைப்பது யாரோ ?

அதனால் தான்…
மதுரையை எரித்த
கண்ணகியின் சிலை
கடற்கரைக்கு அருகில்
சென்னையில்…
அ(ணை)னைக்க
வசதியாக இருப்பதால்…

http://englishkaran.blogspot.com/ என்ற தளத்தில், இங்கிலீஷ்காரன் என்ற நண்பர் எழுதிய இந்தக் கவிதை எனக்குப் பிடித்துப் போய் விட்டது. அதைப் போல இல்லாவிட்டாலும் , ஏனோ தெரியாது , என்றோ நான் எழுதிய இந்தக் கிறுக்கலும் சும்மா ஞாபகம் வந்தது....

இன்று

பஸ்ஸின்
பின்னிருக்கை
தியேட்டரின்
ஒதுக்கிருக்கை
கடற்கரையோர
கல்லிருக்கை
எல்லாவற்றிலும்
அசிங்கப்பட்டுப்
போய்க்
கிடக்கிறது..
காதல்
வா
இருவரும்
சேர்ந்து...
புனிதமாக்குவோம்!


7.02.2009

காதலாகிப் பேசுகிறேன்..நீ

கவலைப்படுகிறாய்!
இப்போது பார்
கவலைகளுக்கும்
கவலை
பிடித்துவிட்டது...


சேமித்து
வைத்த
என் சின்ன
சின்ன
கவிதைகள் கூட
என்னைப்
பார்த்துச்
சிரிக்கின்றன...
உனக்குப்
பிடிக்காதவை
எல்லாம்
எப்படிக்
காவிதையாகும்
என்று...


உனக்கு
பிடிக்கும்
என்பதால்
எனக்குப்
பிடித்தது
ஏராளம்..
உனக்குப்
பிடிக்காது
என்பதால்
எனக்குப்
பிடிக்காததும்
ஏராளாம்
என்னையும்
சேர்த்து..


ஒற்றை
உரசலில்தான்
பற்றிக் கொள்கிறது
காதலும்
தீக்குச்சியும்
எல்லோரையும்
இறுதியில்
சாம்பலாக்கிவிட ...


காதல் பாதை

காதல்
ஒருவழிப்
பாதை...
போகமட்டுமே
முடியும்
திரும்ப முடியாது


காதல்
ஒற்றையடிப்
பாதை
ஒரு மனதில்
ஒருவர்
மட்டுமே
பயணிக்கலாம்...


தெருவில் கிடக்கும் தமிழன்

தமிழன் -நான்
அதனாலேயே
தலை குனிந்து
போகவேண்டியவன்
நான்...


குண்டுச் சத்தமே
தாலாட்டு
என்றெண்ணிய
எங்கள் குழந்தைகள்
தாயின் தாலாட்டை
நிராகரிக்கின்றன...


வீடு கட்டி
விளையாடச்
சொன்னால்
இல்லை இல்லை
அகதிமுகாம்
கட்டியே
விளையாடுவோம்
என்றே...
அடம் பிடிக்கின்றன
எங்கள்
குழந்தைகள்...
அகதி முகாமிலேயே
வாழப் பழகிய
எங்கள் குழந்தைகளுக்கு
அந்நியமாகிப்
போனது வீடு


சிரிப்பது என்றால்
என்ன அம்மா?
என்கிறது ....
மூன்று வயதாகியும்
இன்னும்
சிரிக்கச் சந்தர்ப்பம்
கிடைக்காத
ஒரு குழந்தை...


மூன்று வேளையும்
சாப்பாட்டுக்குப்
பிறகு..
என்று வைத்தியர்
கொடுத்த
மருந்தை
ஒருவேளை மட்டுமே
சாப்பிடும்
குழந்தைக்கு
எப்படிக்
கொடுப்பதாம் ...?


பாலே இல்லாமல்
செத்துப் போன
குழந்தைகளுக்கு
பால் ஊற்றுவது
எப்படி..


எட்டு வயதைக்கூட
எட்டிப் பிடிக்க
முடியாமல்
எங்கள்
குழந்தைகள்
செத்துப் போக
சிலபேர்..
வெட்கமில்லாமல்
எண்பத்தாறு
வயதையும்....
பார்ட்டி போட்டு
கொண்டாடுகிறார்கள்..


போட்ட
குண்டுச் சத்தம்
போதாதென்று...
சிலர்
வெற்றியை
பட்டாசு சத்தம்
கேட்டுக்
கொண்டாடுகிறார்கள்....

மரணத்தின்
அவசரம் புரியாமல்
தொலைபேசி இருக்க
கடிதமும்
தந்தியும்
அனுப்பிய...
முட்டாள்கள்
நாங்கள்...


மிருகக்காட்சி
சாலைக்குள்
இருக்கும்
மிருகங்கள் கூட
சிலவேளைகளில்
வெளியே வரும்....
முட்கம்பிக்குள்
இருக்கும்
எங்கள் மக்கள்
எப்போது
வெளியே
வருவார்கள்....?


7.01.2009

58 நாளில் வெறும் ஒன்றரைச் சதம்!
இத்தளம் பிறந்தது- 03.05.2009(58 நாட்களின் முன்)

இதுதான் முதல் இடுகை...

புத்தாடை

பிச்சைக்காரனுக்கு
சந்தோசம் ...
கிடைத்துவிட்டது
யாரோ
கழட்டிப்போட்ட
கிழிந்த சட்டை...

*************************************************************************

எனக்கு முதல் பின்னூட்டம் கிடைத்தது இந்த இடுகைக்குத்தான், (இதுதான் முதன் முதல் திரட்டியில் பிரசுரமானது)

தாய்மை


ஒவ்வொரு
குழந்தையின்
முதல்
அழுகையும்
உணர்த்துகிறது
பிரசவம்
அல்ல !
பிரசுகம்


1 கருத்துக்கள்:

திகழ்மிளிர் said...

உண்மை தான்

முதல் பின்னூட்டம் போட்ட நண்பர் திகழ் மிளிர் தான் என் தளத்தின் முதல் பின் தொடர்பவரும். முகம் தெரியாத அந்த நண்பருக்கு என் நன்றிகள் .

*************************************************************************************

Tuesday, June 2, 2009

கவிஞர்கள் வகைமயாதி - புதிய பதிவர்ஆனால் பிரபல பதிவர்களின் கவிதை தொகுப்பை படித்த நிறைவை தருகின்றது இவரின் கவிதைகள் இவரின் சந்தோசமான இரங்கற்பா
மாயை போன்றவை அருமை!!!!!நான் திரட்டிகளில் அறிமுகம் ஆகி ரெண்டு வாரம் கூட ஆகாதா போது, எனக்குக் கிடைத்த இந்த அறிமுகம் , ஒரு மாதத்திலேயே சராசரி ஹிட்ஸ் 300 எட்டிப் பிடிக்க உதவியது.

முகம் தெரியாத நண்பி ஷக்திக்கும் நன்றி...

இதே போல் என்னை எதோ ஒரு வகையில் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பட்டாம் பூச்சி பிடித்துத் தந்த நண்பி ஜெஸ்வந்திக்கும், முப்பத்திரெண்டு கேள்வித்தொடரில் மாட்டிவிட்ட நண்பி நாணலுக்கும் நன்றி.

( என்னடா எல்லாம் பொண்ணுங்களா இருக்கு என்று நீங்க பொறாமைப் பட்டால் நான் பொறுப்பல்ல)

***********************************************************************************
இதுவரை எனக்கு அதிக பின்னூட்டங்கள் வழங்கிஉள்ளவர்
S.A. நவாஸுதீன் அண்ணா , அடுத்ததாக ஜமால் அண்ணா.

இவர்களுக்கும் நன்றி.

( தயவுசெய்து தொடர்ந்து நிறைய பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களே மன்னித்துக் கொள்ளுங்கள் ! எல்லோரின் பெயரையும் போட்டால் அதற்கு தனி இடுகை வேண்டுமே!)

பெயர் குறிப்பிடாத , தொடர்ந்து பின்னூட்டம் போடுபவர்களுக்கும்,மற்றும் அனானி நண்பர்களுக்கும், நன்றிகள்.


***********************************************************************************
எனக்கு அதிகம் பின்னூட்டம் வாங்கித் தந்த இடுகை இதுதான்...

வாழ்க்கை நிறையக் கவிதை

பொய்யாகத்தான்
சிரிக்கிறார்கள்
என்று
தெரிந்தும்
பதிலுக்கு
சிரித்து விட்டுத்தான்
போக
வேண்டியிருக்கிறது!

மேலதிகமாக
வேலை
செய்து வரும்
மேலதிக
சம்பளத்திற்கு
மேலதிகமாக
ஏதாவது
செலவு...
வந்துவிடுகிறது
ஒவ்வொரு மாதமும்!

மதுப்போத்தல்
வாங்கும் போது
அழுத்துக்கொல்வதை
விட....
அதிகமாக
அழுத்துக்கொல்கிறது
மனசு
பிள்ளைக்கு
பால் போத்தல்
வாங்கும் போது!
விலைவாசி
ஏறிவிட்டதே
என்று....

வாங்கிய
கடனைத்
திருப்பிக்கொடுக்கும்
போது
சந்தோசப்படுகிறது
மனசு...
இன்னுமொருமுறை
நம்பிக் கடன்
தருவார்
என்று...

மரண வீட்டில்
அறிமுகமானவர்களை
பார்த்து
வழமைபோல்
சிரிக்கலாமா
இல்லையா
என்று
இத்தனை
வயசாகியும்
தெரியவில்லை
எனககு

சிக்கெரெட்
வாசத்தை விட
அதை
மறைப்பதற்காக
பூசும்
வாசத்தை
வைத்தே
கண்டுபிடித்து
விடுகிறாள்
மனைவி
நான்
சிக்கெரெட்
பிடித்திருப்பதை ....

சிதறிக்கிடந்த
என்
அறையின்
பொருட்களை
ஒழுங்காக்கியபின்
தேடித்தான்
எடுக்க
வேண்டியிருக்கிறது
எனககு
தேவையான
போருட்களை....

நான்
சின்ன வயசில்
செய்ததாக
சொல்லும்
சாகசங்களை
மனைவி
பொய்
என்று
அறிந்து விட்டதால்
பிள்ளைகளிடமே
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
இன்னும்
கொஞ்ச நாளில்
பேரப்பிள்ளைகளிடம் தான்
சொல்லவேண்டியிருக்கும் .......

எல்லோருக்கும்
தெரிந்த
என்
முதல் காதலை
விட...
எனக்கு மட்டும்
தெரிந்த
முதல் காதலே
அதிகம்
சுவாரசியமாக
இருக்கிறது...

கையில்
கொஞ்சம்
அதிகமாக
பணம்
இருந்தாலே !
பக்கத்தில்
வருபவர்கள்
எல்லோரையும்
திருடனாகத்தான்
பார்க்கிறது
மனசு...


பழைய
காதலை
மறைப்பதற்காக
மனைவியை
அதிகம்
காதல்
செய்யவேண்டியிருக்கிறது
இப்போது ...

விடுமுறை
என்றாலே
வெளியேதான்
செல்லத் துடிக்கிறது
மனசு.....
வீட்டிலே
காத்துக்கிடக்கின்றன
நிறைய
வேலைகள்....

மயானத்தை
கடக்கும் போது
மட்டும்
வாழ்க்கையில்
அமைதி இல்லை
என்று
நினைக்க
தோன்றுவதில்லை
மனசுக்கு ...

வாசலில்
கொண்டுவந்து
தரும்
மரக்கறி
வியாபாரியிடம்
சண்டைபோட்டு
மிச்சம்
பிடிப்பதை விட
அதிகமாக
உபரிப்பணம் (Tips)
கொடுக்கிறாள்
மனைவி !
மேசை அருகே
பீசா
கொண்டுவருபவனுக்கு ...

39 பின்னூட்டம் வாங்கித் தந்த இந்த இடுகையே குங்குமத்தில் பிரசுரமாகி , வாசகர்களை தெரிவு சரியானதே என்று நிரூபித்தது.
(இதுவரை அந்தப் புத்தகம் எனக்குக் கிடைக்கவில்லை !
பிரசவமான பிள்ளையை பார்க்காமல் எத்தனையோ அப்பாக்கள் இருக்கும் என் நாட்டில், பிரசுரமான கவிதையைப் பார்க்காமல் இருப்பது ஒன்றும் பெரிய வேலையில்லை )

**********************************************************************************

நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு இடுகையை பதிவிட்டு சற்று நேரத்திலேயே நீக்கினேன். அந்த இடுகையை மீண்டும் இங்கே இடுகிறேன்! இது எந்தளவிற்கு ஒரு எழுத்தை பின்னூட்டம் வலுப்படுத்தும் என்பதைக் காட்டுவதற்காக.

அந்த பின்னூட்டம் ...
தமிழரசி said...

சூப்பர்.... - செருப்பு

இதை நீக்கிடுங்கள்..இந்த எண்ணம் உங்களுக்கு மட்டுமே தோன்றியது தான்...ஆனால் கண்டிப்பா பதிவர்கள் மனம் வருந்தும் நீங்கள் வளர்ந்து வரும் ஒர் நல்ல பதிவர்..இதை உங்கள் பால் அக்கறையில் மட்டும் சொல்கிறேன்....

நண்பர் வசந்த் இதே கோரிக்கையை மெயிலில் கேட்டிருந்தார் ....
( இந்த இடத்தில் ஒரு உதாரணத்திற்காக இந்த இடுகையை போடுவது யாரையும் காயப்படுத்தாது என்று நம்புகிறேன்)


சில பின்னூட்டங்களுக்கான உண்மையான அர்த்தங்கள் (சில).

(நகைச் சுவைக்காக மட்டுமே!)
கலக்குறிங்க - வயித்த கலக்கிறீங்கப்ப

முடியல... - அழுகைய அடக்க

ரிப்பீட்டே... - சனத்தொகை கூடிட்டு உங்க புண்ணியத்துல கொஞ்சம்
குறையட்டும்

மீ ஃப்ர்ஸ்ட்.... - பெஸ்டா எஸ்கேப் ஆகிட்டமுல்ல

ரூம் போட்டு யோசிப்பீங்களோ..... - வெளியில இப்படி கேவலமா யோசிக்க
ஏலாது

பின்னிட்டீங்க...... - பன்னாட

ஹிஹிஹி..... - ஹிஹிஹி... இதெல்லாம் ஒரு ஆக்கம்

அவ்வ்வ்வ்வ் - வாந்தி வருது

போட்டு தாக்குறீங்க - போடாங்கோ

அசத்தல் - அலட்டல்

திரும்பவும் வருவமுல்ல - உன்னை கொலை செய்யஒரு பொறுப்புள்ள அக்காவாக நடந்து கொண்ட அக்காவுக்கும் , வசந்துக்கும் நன்றிகள்.
*************************************************************************************

இதெல்லாம் உனக்குத் தேவையா என்பது போல வந்த சில பின்னூட்டத்தால் , வெட்கப்பட்டு நானே நீக்கிக் கொண்ட இடுகை இது.

ஒரு வரிக் கதை..


தலைப்பு - கைபேசி
கதை- இருந்தும் என்ன பயன் அவள் பேசாமல் .

தலைப்பு - நிஜம்
கதை - யாவும் கற்பனை சில கதைகளின் முடிவில்

தலைப்பு- மூன்று பொய்
கதை- நான் சொல்லுவதெல்லாம் உண்மை நீதிமன்றத்தில்


தலைப்பு-இரு சொல் கதை
கதை- கற்பனை செய்துகொள்

தலைப்பு - ஜனநாயகம்
கதை- எல்லோரும் பேசலாம் எழுதிக்கொடுபபத்தை மட்டும்

தலைப்பு- கலர் டீ வி
கதை - ஓட்டுக்கு லஞ்சம்

தலைப்பு- ஒருசொல் கதை
கதை- முற்றும்


*******************************************************************************
இது நான் என் வாழ் நாளில் எழுதிய முதல் கதைக்கான லிங்க்,

http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_21.html

(ஏதோ போட்டி நடக்குதாமே , அதற்காக எழுதினதுதான் , ஆனால் பரிசு சொக்கனுக்கு இல்லை )
இதற்கு கிடைத்த பின்னூட்டம் குறைவு என்பதால் கொஞ்சம் கவலைதான். நீங்கள் இப்போது கூட அந்தக் கதையை வாசித்து , ஏதோ கதை போலதான் இருக்கு? என்று ஒரு வார்த்தை சொன்னால், இது போல இன்னும் நிறைய எழுதி உங்கள் கழுத்தை அறுப்பேன்.


*******************************************************************************


பெயர் குறிப்பிடாத நண்பர்களிடம் மீண்டும் ஒருமுறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வெகு விரைவில்( சில மணி நேரம்) மீண்டும் சந்திக்கும் வரை

அன்புடன் மயாதி


உறங்கு நிலை கழிந்த காதல்...

நீ சிந்தும்
காதல்
மழையில் ...
முளைக்கின்றன
நிறையக்
கவிதைக்
காளான்கள்...


உனக்காக
கவிதை எழுதத்
தொடங்கினாலே
வார்த்தைகள்
வந்து என்
வாசலில் தவம்
கிடக்கின்றன....
பாவிக்கச் சொல்லி


நீ வந்தபின்
கதைப்பதற்காக
கஷ்டப்பட்டு
பயிற்சி எடுக்கிறேன்...
நீ வந்தபின்
எல்லாம்
மறந்துவிடும்
என்று தெரிந்தும்...