6.11.2009

உங்கள் காதலிக்கு சொல்ல சின்ன சின்ன புரூடாக்கள்

எனக்குத்தான் சொல்வதற்கு ஆள் இல்லை நீங்களாவது சொல்லி அடியோ ,முத்தமோ வாங்கிக் கொள்ளுங்கள் .


உனக்குத்
தருவதற்காய்
சேமித்து வைத்த
முத்தங்களையே
கடைசியில்
கவிதையாய்த்
தருகிறேன்...


குடை
பிடித்துக் கொண்டு
போகிறாய்
பாவம்
மழையும்
வெயிலும்...


நீ
வந்து விட்டால்
தரிசனம்
வரா விட்டால்
அசரீரி

நீ கட்டிவிட்ட
நூல்
வெறும் நூலல்ல
கவிதை நூல்


நானும்
வௌவால்....
அது மின்சாரக்
கம்பியில்
நான் காதலில்
தொங்குகிறோம்!


பொங்கல்
ரமழான்
கிறிஸ்மஸ்
எல்லா மதங்களும்
விடுமுறையில்தான்
கொண்டாடப்படுகின்றன
காதல் மட்டும்தான்
விடுமுறையே
இல்லாமல்
கொண்டாடப்படுகிறது


கடவுளும்
காதலும்
ஒன்றுதான்...
கடவுள்
தூணிலும்
துரும்பிலும்
ஒளிந்துகொண்டிருப்பார்
காதல்
உன்
ஒவ்வொன்றிலும்
ஒளிந்துகொண்டிருக்கிறது ...


எமன்
எல்லோரையும்
கொல்ல வருவான்
உன்னை மட்டும்
பார்க்க வருவான் ...சாத்தன்
இன்னும்
உன்னைப்
பார்க்கவில்லை
போலும்..
பார்த்திருந்தால்
இந்நேரம்
சாமி ஆகிருப்பான்
அல்லது
சாமியாராக
ஆகிருப்பான்...

உன்
வார்த்தைகளை
புத்தகமாக்கி
அடுக்கி
வைத்திருக்கிறாய்
உன் மௌனம்
நூலகம்...

19 comments:

gowripriya said...

:))

டக்ளஸ்....... said...

க்ரிக்கிட்டு..
அப்பிடியே நான் சொல்லிக்குடுத்த் மேரியே, பிக்கப் பண்ணி போ மாமேய்..!

மயாதி said...

நன்றி தோழி gowripriya .....

மயாதி said...

டக்ளஸ்....... said...

க்ரிக்கிட்டு..
அப்பிடியே நான் சொல்லிக்குடுத்த் மேரியே, பிக்கப் பண்ணி போ மாமேய்..!//

மன்னிக்கவும் !
விளங்கவில்லை நண்பா, கொஞ்சம் இந்த மர மண்டைக்கு விளங்குற மாதிரி சொல்ல முடியுமா?

பிரியமுடன்.........வசந்த் said...

//கடவுளும்
காதலும்
ஒன்றுதான்...
கடவுள்
தூணிலும்
துரும்பிலும்
ஒளிந்துகொண்டிருப்பார்
காதல்
உன்
ஒவ்வொன்றிலும்
ஒளிந்துகொண்டிருக்கிறது ...//

கடவுளும்
காதலியும் ஒன்றுதான்
வரங்கள் கொடுப்பதிலும்


சரிய்யா மயாதி

செம்ம கவிதை உங்களோடது

நட்புடன் ஜமால் said...

தொகுப்பு மிக அழகு.

மெளன நூல் மிக மிக அழகு.

நட்புடன் ஜமால் said...

காதல் மட்டும்தான்
விடுமுறையே
இல்லாமல்
கொண்டாடப்படுகிறது
\\

விடு(பட்டால்)முறையே
இல்லாமல்
திண்டாடப்படுகிறது.

Anonymous said...

கவிதை கருவூலம் நீ மாயத்” தீ”

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

காதல் மட்டும்தான்
விடுமுறையே
இல்லாமல்
கொண்டாடப்படுகிறது
\\

விடு(பட்டால்)முறையே
இல்லாமல்
திண்டாடப்படுகிறது.//

ஆகா இதுவும் நல்ல இருக்கே
நன்றி அண்ணா

மயாதி said...

தமிழரசி said...

//கவிதை கருவூலம் நீ மாயத்” தீ”//

சீ போங்கள் அக்கா என்னை ரொம்ப ஓவரா புகலூரிங்க எனக்கு வெட்கமா இருக்கு...
thanks

மயாதி said...

பிரியமுடன்.........வசந்த் said..

//கடவுளும்
காதலும்
ஒன்றுதான்...
கடவுள்
தூணிலும்
துரும்பிலும்
ஒளிந்துகொண்டிருப்பார்
காதல்
உன்
ஒவ்வொன்றிலும்
ஒளிந்துகொண்டிருக்கிறது ...//

கடவுளும்
காதலியும் ஒன்றுதான்
வரங்கள் கொடுப்பதிலும்
கடவுளும்
காதலியும் ஒன்றுதான்
வரங்கள் கொடுப்பதிலும்


சரிய்யா மயாதி

செம்ம கவிதை உங்களோடது//

நீங்கள் சொன்ன சரிதான் தலைவா

Thamizhmaangani said...

//எமன்
எல்லோரையும்
கொல்ல வருவான்
உன்னை மட்டும்
பார்க்க வருவான் ...//

இது நல்லா இருக்கு:)

kartin said...

//எமன்
எல்லோரையும்
கொல்ல வருவான்
உன்னை மட்டும்
பார்க்க வருவான் //

கொன்னுட்டீங்களே பாஸ் !!

sakthi said...

நீ கட்டிவிட்ட
நூல்
வெறும் நூலல்ல
கவிதை நூல்

ரொம்ப special நூல் போல

மயாதி said...

sakthi said...

நீ கட்டிவிட்ட
நூல்
வெறும் நூலல்ல
கவிதை நூல்

ரொம்ப special நூல்//

ஆமா...
வாங்க சக்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு....
நன்றி

மயாதி said...

kartin said...

//எமன்
எல்லோரையும்
கொல்ல வருவான்
உன்னை மட்டும்
பார்க்க வருவான் //

கொன்னுட்டீங்களே பாஸ் !!//

ஏதோ நம்மால முடிஞ்சது..நன்றி பாஸ்..

மயாதி said...

Thamizhmaangani said...

//எமன்
எல்லோரையும்
கொல்ல வருவான்
உன்னை மட்டும்
பார்க்க வருவான் ...//

இது நல்லா இருக்கு:)//

அப்ப மற்றதெல்லாம் கூடாமல் இருக்கா? ஹா ஹா ஹா..

S.A. நவாஸுதீன் said...

குடை
பிடித்துக் கொண்டு
போகிறாய்
பாவம்
மழையும்
வெயிலும்...

அழகு

S.A. நவாஸுதீன் said...

உன்
வார்த்தைகளை
புத்தகமாக்கி
அடுக்கி
வைத்திருக்கிறாய்
உன் மௌனம்
நூலகம்..

சூப்பர்