6.26.2009

அதற்கு முன் காதலித்துவிடு..தோற்றுப் போகிறது
உன் வீட்டு
கண்ணாடி...

எத்தனை முறை
முயன்றாலும்
சேமிக்க
முடியவில்லையாம்
உன் விம்பத்தை...
தோற்றுப்
போகின்றன
என் கவிதைகள்...

எத்தனை முறை
முயன்றாலும்
உன்னைவிட அழகாக
முடியவில்லையாம்...காதல் தோல்வியில்
மனிதர்கள்
தற்கொலை செய்து
கொள்வார்கள்
முதன் முதலாக
காதல்
தற்கொலை
செய்யப்போகிறது
அதற்கு முன்
காதலித்து விடு...

18 comments:

ஜெஸ்வந்தி said...

காதல் தூக்கில் தொங்கி முடிஞ்சு இப்போ ''காதல் தற்கொலை
செய்யப்போகிறது '' என்கிறது. வேண்டாம் நண்பா , காதல் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர். நெடுகப் பயமுறுத்துது.

பிரியமுடன்.........வசந்த் said...

//எத்தனை முறை
முயன்றாலும்
சேமிக்க
முடியவில்லையாம்
உன் விம்பத்தை...//

மெமரி சிப் வாங்கி குடுத்துடுங்க மயாதி

ஆ.முத்துராமலிங்கம் said...

உங்கள் கவிதை ஒரு மார்க்கமாத்தாயா இருக்கு.
கற்பனையூற்று!!!

மயாதி said...

ஜெஸ்வந்தி said...

காதல் தூக்கில் தொங்கி முடிஞ்சு இப்போ ''காதல் தற்கொலை
செய்யப்போகிறது '' என்கிறது. வேண்டாம் நண்பா , காதல் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர். நெடுகப் பயமுறுத்துது.//

இது நல்லா இருக்கு ...
ஏதோ காதல் உங்களுக்கு மட்டும் சொந்தமானது மாதிரி அல்லவோ சொல்கிறீங்க?

மயாதி said...

பிரியமுடன்.........வசந்த் said...

//எத்தனை முறை
முயன்றாலும்
சேமிக்க
முடியவில்லையாம்
உன் விம்பத்தை...//

மெமரி சிப் வாங்கி குடுத்துடுங்க மயாதி//

இதென்னையா வம்பா போச்சு?

நன்றி வசந்த்

மயாதி said...

ஆ.முத்துராமலிங்கம் said...

உங்கள் கவிதை ஒரு மார்க்கமாத்தாயா இருக்கு.
கற்பனையூற்று!!!//

நன்றி முத்து

வேத்தியன் said...

ஐயோ ப்ளீஸ்...

காதலித்துவிடு...
:-)

ஜெஸ்வந்தி said...

மயாதி said...

// இது நல்லா இருக்கு ...
ஏதோ காதல் உங்களுக்கு மட்டும் சொந்தமானது மாதிரி அல்லவோ சொல்கிறீங்க?//

சரியாப் போச்சு. நல்லதுக்குக் காலமில்லை என்று தெரியாமலா சொன்னார்கள்.
பட்டுத் தெளிந்தால்தான் புரியும் போல.

சென்ஷி said...

கலக்கல்!

மயாதி said...

ஜெஸ்வந்தி said...

மயாதி said...

// இது நல்லா இருக்கு ...
ஏதோ காதல் உங்களுக்கு மட்டும் சொந்தமானது மாதிரி அல்லவோ சொல்கிறீங்க?//

சரியாப் போச்சு. நல்லதுக்குக் காலமில்லை என்று தெரியாமலா சொன்னார்கள்.
பட்டுத் தெளிந்தால்தான் புரியும் போல.

June 26, 2009 2:03 பம்//

முடியல ?

மயாதி said...

சென்ஷி said...

கலக்கல்!//

நன்றி தலைவா...

தமிழ்ப்பறவை said...

அழகு கவிதை மற்றும் படங்கள்

நாணல் said...

//காதல் தோல்வியில்
மனிதர்கள்
தற்கொலை செய்து
கொள்வார்கள்
முதன் முதலாக
காதல்
தற்கொலை
செய்யப்போகிறது
அதற்கு முன்
காதலித்து விடு...//

ஹ்ம்ம்ம் ஹ்ம்ம் நல்லா இருக்கே..

tamilraja said...

அருமையான கவிதை
சமீபத்தில் ரொம்ப அழகான பெண் யாரையாவது மிக அருகில் பார்த்தீரா?
பின்னிட்டீங்க

மயாதி said...

நாணல் said...

//காதல் தோல்வியில்
மனிதர்கள்
தற்கொலை செய்து
கொள்வார்கள்
முதன் முதலாக
காதல்
தற்கொலை
செய்யப்போகிறது
அதற்கு முன்
காதலித்து விடு...//

ஹ்ம்ம்ம் ஹ்ம்ம் நல்லா இருக்கே..

June 27, 2009 3:28 அம//

நன்றி நாணல்

மயாதி said...

tamilraja said...

அருமையான கவிதை
சமீபத்தில் ரொம்ப அழகான பெண் யாரையாவது மிக அருகில் பார்த்தீரா?
பின்னிட்டீங்க//

நன்றி நண்பரே!
இப்படி மாட்டி விட்டீங்களே!

மயாதி said...

தமிழ்ப்பறவை said...

அழகு கவிதை மற்றும் படங்கள்//

நன்றி நண்பரே

senkumars said...

very nice poems and wording...