6.09.2009

ஒரு கொக்குகதை.( அறிவு உள்ளவர்கள் மட்டும் வாசியுங்கள்)

மு.கு - அறிவு இல்லாதவர்களுக்கு விளங்காவிட்டால் நான் பொறுப்பல்ல . விளங்கும் நபர்கள் அப்படியே etதாவது சொல்லுங்கோ.

கொக்குக்கதை.

சில மண்புழுக்கள், நிறைய கொக்குகள்.
கொஞ்ச மண்புழுதானே என்று நினைத்த கொக்குகள் கொத்தத் தொடங்கின.
மண்புழுக்கள் மாண்பு மிக்கவை, வீரம் நிறைந்தவை.
ஒரு மண்புழு மன்னுளியாக மாற எல்லா மண்புழுக்களும் மாட்சி பெற்றன.
கொக்குகள் குதறப்பட்டன குதறப்பட்டன.....
கோழைக்கொக்குகள் திருப்பித் தாக்க துணிச்சல் இல்லாமல், துணைக்கழைத்தன சில பிணம் தின்னிக் கழுகுகளை..
பிணம் தின்னிக்கு தேவை பிணம் தான்!
அது மன்னுளியாக இருந்தாலும் சரி மண்புழுவாக இருத்தாலும் சரி.
வயிறு நிரம்ப சாப்பிட்ட கழுகள் போய்விட்டன. அது சாப்பிட்டது வெறும் மண்புழுதான்...
இருந்தாலும் கொக்குகள் இப்போ கொக்கரிக்கின்றன மண்ணுளியை தின்று விட்டதாக..
மண்புழுக்களை கொல்லுதல் பிழை என்று சில நல்ல மனதுகள் சொன்னாலும், பிணம் தின்னிக்கு தேவை மனதுகள் அல்ல மனித பிரேதங்கள் தானே!

பாவம் மண்புழுக்கள் கொக்குகள் என்றால் தாக்கு பிடிக்கும் .
பிணம் தின்னிகளை எப்படி தாக்கு பிடிக்கும்.

இன்னும்கொஞ்ச நாளில் உலகத்தில் அழிந்து வரும் அரிதான இனங்களில் ஒன்றாக மண்புழு மாறலாம்?
அப்போது மிச்சமிருக்கும் மண்புழுக்களை பாதுகாக்க என்று சொல்லி மிருக காட்சி சாலையில் போட்டு பூட்டி விடுவார்கள்...

19 comments:

madhiyarasu said...

ஈழத்தமிழர்கள், தமிழினம் = மண்புழு
சோனியா = இந்தியா = வல்லரசுகள் = கொக்கு

தமிழினி said...

நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க
http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html

சென்ஷி said...

//இன்னும்கொஞ்ச நாளில் உலகத்தில் அழிந்து வரும் அரிதான இனங்களில் ஒன்றாக மண்புழு மாறலாம்?
அப்போது மிச்சமிருக்கும் மண்புழுக்களை பாதுகாக்க என்று சொல்லி மிருக காட்சி சாலையில் போட்டு பூட்டி விடுவார்கள்... //

:(

டக்ளஸ்....... said...

பூரியுதுண்ணே....
மண்புழு மண் இருக்கும் எல்லா இடத்திலும் இருக்கும். மண் அழிந்தாலதான் மண்புழுவுக்கு அழிவு.
அதுவரை வந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், கழுகுகளோ கொக்குகளோ அப்படியில்லை.

தீப்பெட்டி said...

//பிணம் தின்னிக்கு தேவை மனதுகள் அல்ல மனித பிரேதங்கள் தானே!//

:(

//மண் அழிந்தாலதான் மண்புழுவுக்கு அழிவு//

வழிமொழிகிறேன்..

S.A. நவாஸுதீன் said...

அடி மனதில் இருக்கும் வேதனை விரக்தியாக வெளிவந்திருப்பது தெரிகிறது மயாதி.

நட்புடன் ஜமால் said...

அதற்காக தலைப்பு இப்படியா வைப்பது நண்பரே!

ஜெஸ்வந்தி said...

அறிவு உள்ளவருக்கு மட்டும் என்று தலைப்பைப் பார்த்து இந்தப் பதிவை தள்ளி விடப் பார்த்தேன். அந்த மண்புழு எல்லாத்துக்கும் இந்தப் பதிவு விளஙகிடிசசாம்.
அப்போ தலைப்பு தப்புத் தானே?

சேரல் said...

அறிவு என்பதை விட, உணர்வு உள்ளவர்கள் மட்டும் வாசியுங்கள் என்று எழுதி இருக்கலாம்.

நீங்கள் எழுதி இருப்பது சத்தியம்.

Anonymous said...

superb i understand.. but puriyavendiyavangaluku idhu puriyanume..

செந்தேள் said...

நம்ம மனசுளா நொந்து கொடிருக்கிற விஷத்தை புதிரா சொல்லியுருக்கிங்க ... நன்றி

kartin said...

எழுதியிருக்கிறீர்கள் என்பதை விட எழுப்பியிருக்கிறீர்கள்..
இறுதி வரிகள் வருகின்றன கூடவே..
என் சின்ன விழைவு ... கவிதையோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாதீர்கள் என்பதே..

பதிவன் said...

ஒரு கொக்கு அல்ல, லட்சக்கணக்கான கொக்குகளும், கழுகுகளும் என்பது பொருத்தமாக இருந்திருக்கும். அறிவு உள்ளவுங்கன்னு சொல்லப்படுகிறவர்களுக்கு ஒன்னும் இல்லையேன்னு இப்படி தலைப்பு வச்சீங்களோ?

கே.ரவிஷங்கர் said...

அண்ணே நல்லார்க்கு.

ஆ.முத்துராமலிங்கம் said...

புரியுது!!

Kakkoo Manickam said...

வேதனையும் விரக்க்தியும் மட்டுமே எஞ்சி நிற்கும் அவலம். கையறு நிலை ய்ர்ந்பது இதுதானோ!

கலையரசன் said...

நல்ல பதிவு,
அது சரி ஏன் இந்த தலைப்பு?
எம்மாம் பேரு வாசிக்காம போயிட்டாங்க தெரியுமா?

கலையரசன் said...

நல்ல பதிவு,
அது சரி ஏன் இந்த தலைப்பு?
எம்மாம் பேரு வாசிக்காம போயிட்டாங்க தெரியுமா?

மயாதி said...

கருத்துச்சொன்ன அறிவாளிகள் எலோருக்கும் நன்றிகள்...