9.29.2012

பர்தா


அந்தச் செய்தி ராகவனுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் , அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அப்படியொரு செய்திக்காகத்தானே அவன் இவ்வளவு காலமாக காத்துக்கொண்டிருந்தான். இருந்தாலும் அதை 
மீண்டும் உறுதிப்படுத்தும் முகமாக தன்  உதவியாளரிடம் ` உண்மையத்தான் சொல்லுருகிறாயா` ? என்றான். 
`ஆமாம் சார் எனக்கு  தெரிந்த நல்ல நண்பன் ஒருவன் ஆகாஷ் இருக்கும் தெருவில்தான் இருக்கான்  அவன்தான் இந்த விடயத்தையே சொன்னான் ` என்ற தன உதவியாளரிடம் இதை  பற்றி உடனடியாக எழுதுங்கள் இதை நாளைக்கே நம் பத்திரிகையில் போட்டு ஆகாஷின் ஆட்டத்தையெல்லாம் அடக்கியாகனும் என்று கட்டளையிட்டான் ராகவன் .
ஆகாஷ் ஒரு முற்போக்குவாதி குறிப்பாக பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள் எங்கு நடந்தாலும் அதைப் பற்றி துணிந்து எழுதும் பத்திரிகையாளன். தனியே பத்திரிகையோடு மட்டும் இல்லாமல் தனது பேச்சாற்றல் கவியாற்றல் என்பவற்றின் மூலமும் பெண்களுக்கெதிரான போலியான சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிவதற்கு முழுமூச்சோடு ஈடுபட்டுக்கொண்டிருப்பவன். அவனுக்குக் கிடைத்திருக்கும் நவீன பாரதி என்ற பட்டமே போதும் அவன் திறமைகளை சொல்ல.

ராகவன் ஒரு பத்திரிக்கை ஆசிரியர் .ஒருநாள் முஸ்லிம் பெண் ஒருவர் பர்தா அணிந்துகொள்ளாமல் போனதற்கு ஊரே சேர்ந்து கல்லடி கொடுத்து தண்டித்ததை செய்தியாகப் போட்டது மட்டுமில்லாமல் ,கலாச்சாரத்தை மீறியது அந்தப் பெண்ணின் தப்பு என்று  இந்த காட்டுமிராண்டித் 
தனத்துக்கு வக்காலத்து வாங்கி ராகவன்  எழுத , அதைப் பார்த்துக் கொதித்தெழுந்த ஆகாஷின் பேச்சுக்களும் எழுதிய எழுத்துக்களும் ராகவனின் பத்திரிகைக்கு எதிராக ஒட்டுமொத்த வாசகர்களையும் திருப்பி விட 
கடைசியில் அனைத்து வாசகர்களிடம் தன் கருத்துக்கு பொது மன்னிப்புக் கேட்டு தலை குனிய வேண்டிய நிலை ராகவனுக்கு வந்தது. அன்றிலிருந்து ஆகாஷை எப்படியாவது பழி வாங்கியாகனும் என்ற முடிவோடு இருந்த ராகவனுக்கு ,
`சார் , ஆகாஷ் கலியாணம் கட்டியிருப்பது  ஒரு முஸ்லிம் பொண்ணாம்.அந்தப் பொண்ணை அவன் வீட்டை விட்டு 
வெளியே வருவதற்கும் விடுவதில்லையாம்.வீட்டுக்குள்ளேயும் அந்தப் பொண்ணு எப்பவும் பர்தா போட்டுக்கொண்டுதான் இருக்கணும் என்று வேற ஆர்டர் போட்டு அடக்கி வேற  வச்சிருக்கனாம் ` என்று சொன்னதை 
கேட்டு ராகவன் ஆச்சரியப்பட்டதில் ஆச்சரியமில்லை .இதற்காகத்தானே இத்தனைகாலமாக அவன் காத்துக்கொண்டிருந்தான். 
அடுத்தநாள் பத்திரிகையில் `ஆகாஷின் அண்டப் புளுகுகள் `என்ற கேவலமான ஆசிரியர்  தலையங்கத்தில்     ஆகாஷ் தன் மனைவியை வீட்டில் அடக்கி வைத்துக்கொண்டு வெளியிலே பெண்கள் காவலனாக  
 வேடம் போடுவதாக  ராகவன் எழுதி தன் பழியைத் த் தீர்த்துக்கொண்டான் 
இதற்கு ஆகாஷ் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்பதிலிருந்தே இது உண்மையாகத்தான் இருக்கவேண்டும் இந்த விடயம் ஒன்னு போதும் அவனை இந்த துறையில் இருந்தே விரட்டி விடலாம் என்று
நினைத்துகொண்டிருந்தபோது ராகவனின் வீட்டு அழைப்பு மணி அடித்தது.
ராகவன் போய்க் கதவைத் திறக்க  வெளியே ஒரு பொண்ணு பர்தாவுடன் 
`சார் உள்ளே வரலாமா `என்றாள்? 
வாங்க வந்து உட்காருங்க ,நீங்க யாரென்னு அறிந்துகொள்ளலமா? என்றான் ராகவன் .
உள்ளே வந்த பொண்ணு உடனேயே தன் பர்தாவை அகற்ற அவள் முகத்தைப் பார்த்த ராகவன் அதிர்ந்து போனான்.அவள் முகம் முழுக்க எறிந்த தழும்புகளோடு பார்க்க அருவருப்பாகவே இருந்தது. அவள் கண்களில் இருந்து 
சில துளி கண்ணீர் ததும்பிக்கொண்டிருந்தது. 
என்னம்மா என்னாச்சு என்ற ராகவனிடம் 
சார் உங்க பேப்பர்ல ஆகாஷ் பற்றி வந்த கட்டுரையைப்பார்த்தன் , அந்த ஆகாஷின் மனைவி நான்தான் சார் என்றாள்.
ஓ..... ஆச்சரியப்பட்ட ராகவன் என்னாச்சம்மா அந்தப் படுபாவிதான் சூடு வச்சானா என்றான்.

ஐயோ சார் அப்படி சொல்லாதீங்க,அவர் தெய்வம்  நீங்க எழுதியமாதிரி நான் ஒன்னும் முஸ்லிம் பொண்ணு அல்ல தமிழ்ப் பொண்ணுதான். எனக்கு நடந்த ஒரு அக்சிடண்டில முகம் இப்படி எரிஞ்சு போக தற்கொலைக்கு 
முயற்சி செய்து ஆசுபத்திரில இருந்த என்னை பார்க்கவந்த ஆகாஷ்தான் என்னை மனம் முடித்து எனக்கும் ஒரு வாழ்க்கை தந்த கடவுள். நான் தான் அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காம என் முகத்தை எனக்கே பார்க்கப் பிடிக்காததால் இப்படி பர்தா போட்டு வீட்டிலேயே அடங்கிக் கிடக்கிறேன். 
மற்றப்படி ஒரு கணவனாக அவர் எந்தக் குறையும் வைக்கவில்லை. அதுமட்டுமா இதைப் பற்றி வெளியே சொல்லி அவர் புகழ் பரப்பக்கூட இல்லை . அவரைப்பற்றி தயவு செய்து இனி தயவு செய்து பிழையாக எழுதாதீர்கள் என்று கூறிவிட்டு வெளியேறினாள்  .
இப்போது ராகவனின் கண்ணிலே சில துளி கண்ணீர் ததும்பியிருந்தது .

8.05.2012

வயசு

நான்
வயதுக்கு வர முன்
அம்மாவும் அப்பாவும்தான்
என்னைக் கவனித்துக்
கொள்வார்கள்

நான் வயதுக்கு
வந்ததை ஊருக்கே
சொல்லிக் கொண்டாடினார்கள்
சந்தோஷோசமாகவே
இருந்தது

என்னோடு சிறு
வயதிலிருந்தே
விளையாடும் பக்கத்து
வீட்டுப் பையனோடு
பேசிக்கொண்டே பள்ளிக்குப்
போகும்போது
எனக்கு யாரென்றே
தெரியாத ஒருவர்
`பாரு வயசுக்கு வந்த
பொண்ணு வெட்கமேயில்லாமல்
ஒரு பையனோடு
கதைத்துக் கொண்டு
போறதை `என்று
சொல்லிக்கொண்டு
போனார் ....

இப்போது
அம்மா அப்பாவோடு
ஊரும் என்னை
கவனித்துக்
கொள்ளுக்கிறது

இதற்குத்தான்
ஊருக்கே சொன்னார்களோ ?

விரசம்

எனக்கும் அப்படி
வளர வேணுமென்று
சின்னவயதில்
ஆசைப்படுவேன்

வளர வளரத்தான்
அதைப் பாதுகாப்பதின்
கடினம் புரிந்தது

தவறுதலாய்
சிறிதாய் வெளியே
தெரிந்தாலும் போதும்
அப்பாடா
ஆயிரம் விஷமங்கள்

ஆனாலும் இந்த
சமூகம்
`எப்படிக் காட்டித்துப்
போறாள் பாரு`
என்று என்னைத்தான்
திட்டும்
அதைகாகவே அதை
மூடிமறைக்க நிறையவே
கஷ்டப்பட
வேண்டியிருந்தது

அப்படிக் கஷ்டப்பட்டு
மூடி மறைத்ததை
எத்தனையோ பேர்
சுற்றி இருக்கும்
போதே -ஒரு நாள்
வெளியே எடுத்தேன்
பாலுக்காக என்
குழந்தை
அழுதபோது ....

அப்போதும் சில
கண்கள் என்னை
விரசமாகத்தான்
பார்த்தன

அப்போது யாரும்
என்னைத் தப்பாக
சொல்லவில்லை
மாறாக அப்படிப்
பார்த்தவர்களையே
சொன்னது

முதன் முறையாக
பெண்ணாக இருப்பதன்
பெருமையை
இந்தச் சமூகம்
தந்தது எனக்கு

மார்பு

சிறுவயதில்
மென்மையாகத்தான்
இருந்தது
வளர வளர
உங்கள் விஷமப்
பார்வைகளாலும்
உரசல்களாலும்
கனத்துப்போனது
என் மார்பும்
மனசும் ....

6.23.2012

உயில்க்கவிதை

வழியெல்லாம் வலி
பயணிக்கிறது
வாழ்க்கை

இன்னும்
முடிவாகவில்லை
ஆனாலும்
தொடங்கிவிட்டேன்
பயணத்தை

எதோ ஒரு
புள்ளியில்
திருப்பம் வரும்
அது மரணமாகக்கூட
இருக்கலாம்

மரணத்தைப்
பார்க்கும்போதுதான்
ஜெயிக்கிறது
வாழ்க்கை

வாழ்க்கைக்காக
காத்திருக்க முடியாது
இருப்பது இன்னும்
கொஞ்சநாட்கள்

6.16.2012

தடுக்கி விழுந்தேன்! காதலில் ....

உன்னை
முதன் முதலாகப்
பார்த்தபோது
என் கண்களுக்கு
மோட்சம் கிடைத்தது

உன்னோடு
முதன் முதலாக
பேசியபோது
என் வார்த்தைகளுக்கு
மோட்சம் கிடைத்தது

நீ
முதன் முதலாக
பேசியபோது
என் காதுகளுக்கு
மோட்சம் கிடைத்தது

உன்னை
முதன் முதலாக
காதலித்தபோது
என் உயிருக்கு
மோட்சம் கிடைத்தது

இறக்காமலேயே
மோட்சம் அடைவது
காதலில் மட்டும்தான்
சாத்தியம்

இத்தனை காலமும்
என்னோடு இருந்த
என் உயிர்
உன்னைப் பார்த்த
அந்த நொடியில்
உனக்குள் ஓடி
ஒளிந்துகொண்டது

என் கண்களைக்
குருடாக்கிவிட்டாலும்
உன்னை நான்
பார்ப்பேன்
உன்னை நான்
பார்ப்பது
கண்களால் அல்ல
மனதினால்

தெருப் பிள்ளையாரைப்
பார்த்தவுடன்
உன் தலையிலும்
மனதிலும்
குட்டிவிட்டுப்
போகின்றாய்

எனக்கு காதலில்
நம்பிக்கை இல்லை
என்று சொல்லிவிட்டுப்
போகின்றாய்
முட்டாள் பெண்ணே !
உலகத்தில்
உத்தரவாதம் இல்லாமல்
நம்பக்கூடிய
ஒரே விடயம்
காதல் மட்டும்தான்


என் அம்மா
என் மீது
வைத்திருக்கும்
அத்தனை
அன்பையும்
நான் உன்மீது
வைத்திருக்கிறேன்

எனக்கு
அன்னையைப்போல்
ஒரு தெய்வம் இல்லை
அதேபோல்தான்
காதலியைப்போல
ஒரு கடவுள் இல்லை


என்னைப்
பிடிக்கவில்லை என்று
சொல்லிவிட்டுப்
போய்விட்டால்
கடவுளே
நான் இறக்காமலேயே
அவளுக்குப்
பிடித்தவனாய்ப்
பிறக்கும் வரம்
தருவாயா?மன்னித்துக்கொள்
உனக்காக என்னால்
தாஜ்மகால்
கட்டமுடியாது
ஏனென்றால்
நீ இறந்தபின்பு
தாஜ்மகால்
கட்டவேண்டிய
காலமளவுக்கு
என்னால் உயிரோடு
இருக்க முடியாது

என் தலையெழுத்து
மிகச் சிறியது
உன் பெயர்
அதன்பின் ஒரு
முற்றுப்புள்ளி
அவ்வளவுதான்

இத்தனைகாலமும்
எனக்குள் சிறைப்பட்டுக்
கிடந்தேன்
நீ பார்த்தபின்புதான்
விமோசனம் பெற்று
வெளியே வந்தேன்

உன்னை
நினைத்துக்கொண்டே
வாழ்ந்துவிடுவேன்
ஆனால் உன்னை
நினைக்காமல்
சாகக்கூட முடியாது


கருவிலிருக்கும்
குழந்தை
உதைக்கும்போது
அம்மாவுக்கு கிடைக்கும்
சந்தோஷம்தான்
நீ முறைக்கும்போது
எனக்குக் கிடைக்கின்றது

காலில் தடுக்கி
விழுந்தால்
உடலில் காயம்
காதலில்
தடுக்கி விழுந்தால்
மனதில் காயம்
6.03.2012

எஸ் .பி.பி க்கு எனது பிறந்தநாள் பரிசு

தமிழுக்கு
சாமரம் வீசும்
உன் நாக்கு

குரல் வளைக்குப்
பதிலாக
உனக்கு மட்டும்
சுருதிப் பெட்டியை
வைத்துவிட்டான்
கடவுள்

ராகத்தில்
வேண்டுமானால் வெறும்
ஏழு ஸ்வரங்கள்
இருக்கலாம்
உன் குரலில்
எண்ணிக்கையில்லா
ஸ்வரங்கள்

உன் உச்சரிப்பில்
மீண்டும் ஒருமுறை
உயிர்த்தெழும்
தமிழ்

தமிழுக்குப்
பெருமை சேர்த்தவர்களில்
நீயும் ஒருவன்

உன் குரல்
இன்னும்
ஓங்கி ஒலிக்கட்டும்


5.14.2012

அம்மா -என் முதல் காதலி ....
இவை நேற்று நான் எனது முகப்புப் புத்தக பக்கத்தில் பிரசுரித்தவை .
எனது முகப்புப் புத்தக பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக்குங்கள் .

5.08.2012

காதல்வாசி

அழகுதேசத்தின்

மகுடம்

நீவசீகரமானது

புன்னகை

மட்டுமல்ல -உன்

முறைப்புக்க்களும்தான்நீ

முறைக்கும்போது

பயம் வரவில்லை

பாசம்தான்

வருகிறது ....எல்லோர்

கையிலும்

ரேகை இருக்கும்

உன் கையில்

மட்டும் தோகை

இருக்கிறது
உன்

ஒற்றைப்

பார்வையில்

உலகமெல்லாம்

பூ பூக்கும்உன் கண்களில்

மட்டும் கடவுள்

கண்ணீர்ச் சுரப்பிகளுக்குப்

பதிலாக

கவிதைச்சுரப்பிகளை

வைத்துவிட்டான்கடலில்

மட்டுமல்ல

உன் கண்ணிலும்

முத்து விளையும்உனக்காக

அழும்போதுமட்டும்

எனக்கு

கண்ணீருக்குப்

பதிலாக

பன்னீர் வருகிறதுஐயர் சொன்ன

பிழையான

மந்திரத்தால்

கும்பாபிஷேகத்தின்

போதுகுடியேறாத

சாமி

நீ கோயிலுக்குப்

போனபோது

குடி ஏறிவிட்டதுநீ பாடப்போகும்

தேவாரத்திகாக

காத்துக்கொண்டிருக்கிறது

சாமி

மௌனவிரதம்

இருந்து

ஏமாற்றி விடாதேஉனக்குக்

குத்திவிடுமே

என்பதற்காக

முட்களையெல்லாம்

உதிர்த்துவிட்டு

பூக்களோடு மட்டும்

காத்திருக்கின்றது

என் வீட்டில்

ரோஜாச் செடி
உன்னைப்பார்க்க

கண்கள்

தேவையில்லை

என் மனது

போதும் ...உலகத்தில் இருக்கும்

அத்தனை

மொழிகளும்

உன் வாயில்

வந்து தவமிருக்கின்றன

நீ பேசிவிடவேண்டும்

என்பதற்காகபேசப் பேச

தமிழ்

இனிக்கும்

நீ பேசாமல்

இருந்தாலும்

தமிழ் இனிக்கும்காதலுக்கும்

ஒரு சாமி

கண்டுபிடிக்கவேண்டும்பிள்ளையார்

சுழிபோல்

அந்தச்சாமியின்

சுழி போட்டு

என் கவிதைகளை

எழுதவேண்டும்எனக்குத்

தாய்மொழி

தமிழ்

காதலிமொழி

கவிதைஉன்னைப்

பார்க்கும்போது

பேசவரவில்லை

கவிதைதான்

வருகிறதுஉனக்கு

மேக்கப் போட

வந்தவள்

குழம்பிப் போனால்

ஒரு பெண்ணை

இதற்குமேல்

எப்படி

அழகாக்க முடியும்உன்னைப்

பார்த்த கணத்திலிருந்து

காதலின்

ஆஸ்த்தான

கவிஞனாகி விட்டேன்வெல்வதல்ல

தோற்பதுதான்

வீரம்

காதலில்உன் வீட்டு

விலாசத்தை மட்டும்

எல்லோரும்

இலகுவாகச்

சொல்லுவார்கள்

`காதல் நாயகி,

143 ,காதல் இல்லம் ,

காதல் வீதி,

காதலூர் ,

காதல் நாடு .`எவ்வளவுதான்

அழகான பெண்

என்றாலும்

சூப்பர் பிகருடா

என்று சொல்லும்

பையன்கள்

உன்னைப்பார்த்து

மட்டும்தான்

சூப்பர் அழகுடா

என்று சொல்லுகிறார்கள்நீ கவலைப்படாதே

உன் கவலைகளுக்கான

காரணத்தை என்னிடம்

சொல்லிவிடு

உனக்குப் பதிலாக

நான் கவலைப்பட்டுக்

கொள்கிறேன்கடவுள் இல்லாத

ஊரில் மட்டுமல்ல

காதல் இல்லா

ஊரிலும்

குடியிருக்க வேண்டாம்இறந்தபின்பு

சொர்க்கத்திற்குப்போக

வேண்டுமா

நரகத்திற்குப்

போகவேண்டுமா

என்றால்

உன் மனதிற்குள்

போகவேண்டும்

என்பேன் ...நீ என்னைப்

பார்த்துவிட்டுப்

போன அந்தக்

கணத்தில்

என் வாழ்க்கை

தொடங்கியதா

முடிந்துபோனதா

தெரியாமல் இன்னும்

குழம்பிப் போய்

இருக்கிறேன்மௌனமே

உன் வார்த்தையானால்

மரணமே

என் வாழ்க்கையாகும்எனது முகப்புப் புத்தக பக்கத்தையும் லைக் பண்ணுங்கள் நண்பர்களே

https://www.facebook.com/pages/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/214863035244094?bookmark_t=page