6.09.2009

பெண்ணே பேசிவிடாதே !கவிஞர்கள்
அதிகமாகத்தான்
இருக்கிறார்கள்
ஆனால்
கவிதைகள்
கொஞ்சமாகத்தான்
இருக்கிறது


காதலர்கள்
நிறையப் பேர்
இருக்கிறார்கள்
காதல்
கொஞ்சமாகத்தான்
இருக்கிறது

கடவுள்கள்
நிறையப் பேர்
இருக்கிறார்கள்
மனிதர்கள்
கொஞ்சமாகத்தான்
இருக்கிறார்கள்


வார்த்தைகள்
அதிகமாகத்தான்
இருக்கிறது
ஆனால்
காதல்
மௌனமாகத்தான்
இருக்கிறது
உன்னில்...


சில வார்த்தைகள்
பேசப்படும்போது
அழகாக
இருக்கின்றன

சில வார்த்தைகள்
கவிதையாகும்போது
அழகாக
இருக்கின்றன


சில வார்த்தைகள்
மௌனமாக
இருக்கும்போதுதான்
அழகாக
இருக்கின்றன

உன்
காதலைப்போல்!

10 comments:

புதியவன் said...

//சில வார்த்தைகள்
மௌனமாக
இருக்கும்போதுதான்
அழகாக
இருக்கின்றன

உன்
காதலைப்போல்!//

இந்த மௌனம் வெகு அழகு மயாதி...

நட்புடன் ஜமால் said...

மெளனமே காதலாக ...

நட்புடன் ஜமால் said...

கவிதைகள்
கொஞ்சமாகத்தான்
இருக்கிறது\\

பெண்கள் அதிகமாகத்தான் இருக்கிறாங்க மயாதி ...

மயாதி said...

புதியவன் said...

//சில வார்த்தைகள்
மௌனமாக
இருக்கும்போதுதான்
அழகாக
இருக்கின்றன

உன்
காதலைப்போல்!//

இந்த மௌனம் வெகு அழகு மயாதி...///

நன்றி நண்பா...

எப்படீங்க என்றும் புதியவனாக இருக்கிறீங்க? எப்ப பழையவனாக மாறுவீங்க?
heheheheheh........தமாசுங்கோ

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

//கவிதைகள்
கொஞ்சமாகத்தான்
இருக்கிறது\\

பெண்கள் அதிகமாகத்தான் இருக்கிறாங்க மயாதி ...//

ஐயோ நமக்கு அந்த அனுபவம் எல்லாம் இல்லேங்கோ அண்ணா ..

சென்ஷி said...

கலக்குறீங்க மயாதி! :)))

தலைப்பு மற்றும்

//சில வார்த்தைகள்
கவிதையாகும்போது
அழகாக
இருக்கின்றன


சில வார்த்தைகள்
மௌனமாக
இருக்கும்போதுதான்
அழகாக
இருக்கின்றன

உன்
காதலைப்போல்!//

இந்த வரிகள் ரொம்பப் பிடிச்சுருக்குது!

கவிக்கிழவன் said...

காதலைப்போல்
இந்த மௌனம் அழகு
மௌனம்போல் அழகு
மயாதி கவிதைகள்

நாணல் said...

//சில வார்த்தைகள்
மௌனமாக
இருக்கும்போதுதான்
அழகாக
இருக்கின்றன//

hmm mounam endrum azagu than...
kavidhai arumai...

S.A. நவாஸுதீன் said...

சில வார்த்தைகள்
மௌனமாக
இருக்கும்போதுதான்
அழகாக
இருக்கின்றன

உன்
காதலைப்போல்!

மிகவும் ரசித்த பகுதி

நசரேயன் said...

ம்ம்.. காதல் களைகட்டுது