வயது வந்தவர்களுக்கு மட்டும் ஆனால் கண்டிப்பாக அல்ல. சொர்க்கத்துக்கு போகமுன் இதை கொஞ்சம் படிச்சுட்டு போங்க.
இருட்டு உலகத்தில்
நிர்வாண வக்கிரம்
பூட்டிய கதவுக்கு
வெளியே
தெரியாமலேயே
போய்விடுகிறது
நிறைய வன்முறைகள்
காமம் இருக்கிற
இனபம் .....
கொடுத்துவாங்குவதல்ல
பகிர்ந்துகொள்வதே
இன்பம்.
காமம்
ஒரு துளிதான்
மூழ்கிப் போய்விடுவதைவிட
நீந்திபழகுவதே
இன்பம்.
உடல்களில்
உணர்வுகளை தேடி
பக்குவப்படுத்துவதே
காமம்
காயப்படுத்துவதல்ல
காமம் படிமுறை
படிப்படியாய்த்தான்
உயரம் போக வேண்டும்
ஒரேயடியாய்ப் போனால்
இடையிலேயே
வீழ்ந்துவிடுவாய்
ஆண்களுக்குத்தான் இங்கே
பொறுமை தேவை
பெண்களுக்கல்ல
காமம் இன்பத்தின்
அட்ஷய பாத்திரம்
ஆனால்
கொஞ்சம் கொஞ்சமாகத்தான்
கிடைக்கும்
அவசரப்பட்டு
பாத்திரத்தை
தொலைத்துவிடாதீர்கள்....
14 comments:
அழகு
கவிதைகள்
கவிதை அழகு. காமம் அக்ஷயப் பாத்திரம் அவசரப்பட்டுத் தொலைத்து விடாதீர்கள்.
You Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...
www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
புதிய வாத்ஸாயனமோ?? :-))
வாழ்த்துக்கள்
யாழினி அத்தன்
அழகா சொன்னீங்க - விரசமற்று ...
\\மூழ்கிப் போய்விடுவதைவிட
நீந்திபழகுவதே
இன்பம்.\\
அருமையான காம வரிகள்
ம்ம்ம்ம்ம்ம் நடத்துங்க.
காமம் இருக்கிற
இனபம் .....
கொடுத்துவாங்குவதல்ல
பகிர்ந்துகொள்வதே
இன்பம்.
உண்மைதான்.
காமம்
ஒரு துளிதான்
மூழ்கிப் போய்விடுவதைவிட
நீந்திபழகுவதே
இன்பம்.
இங்கு வன்முறையற்றவன் தான் நன்கு நீந்தப்பலகியவன்
ஐயோ நிறைய அனுபவசாலிகள் இருக்கும் பொது நான் அவசரப்பட்டு விட்டேனோ!!!
நன்றி,
நவாஸ்
கவிக்கிழவன்
ஷக்தி
ரவிஷங்கர்
ஜமால் அண்ணா
கவிதை அல்ல...போதனைகள் எனக் கொள்ளலாம்..அத்தனை உண்மை...அத்தனையும் மென்மை......மயாதி அல்ல நீங்கள் மாயத்”தீ”
தமிழரசி said...
// கவிதை அல்ல...போதனைகள் எனக் கொள்ளலாம்..அத்தனை உண்மை...அத்தனையும் மென்மை......மயாதி அல்ல நீங்கள் மாயத்”தீ”//
ஐயோ விட்டால் Dr.மாத்ரபூதம் ஆக்கிடுவீங்க போல ..
நன்றி நண்பி.
இருட்டு உலகத்தில்
நிர்வாண வக்கிரம்
பூட்டிய கதவுக்கு
வெளியே
தெரியாமலேயே
போய்விடுகிறது
நிறைய வன்முறைகள்///
வன்முறைகள் அத்தனையும் இருட்டின் ரகசிய முலையில் நிர்வாணமாய்.. அழகியல் நிரம்பிய வரிகள் மயாதி
"காமம் அக்ஷயப் பாத்திரம் அவசரப்பட்டுத் தொலைத்து விடாதீர்கள்"
இந்த ஒரு வரியில் கவிதை எங்கொ உயரத்துக்குச் சென்றுவிடுகிறது!
மீதமுள்ள வரிகளை நீக்கிவிட்டாலும் இக்கவிதை சொல்ல வந்ததை சொல்லும்.
அருமை அழகு அசத்தல் வரிகள்.
சீர்மை சிறப்பு சிந்திக்கவும் வைத்தது..
Post a Comment