6.03.2009

ஒரு கவிதை பல தலைப்புமு . கு- இதற்கு முந்திய இடுகையை பார்க்காதவர்களுக்கு எதுவுமே புரியாது
தயவு செய்து அதை பார்த்துவிட்டு இந்த இடுகையை வாசியுங்கள்


எதிர் பார்ப்புக்களுடன் இருந்தேன் கொஞ்சம் ஏமாற்றம்தான் வந்து சேர்ந்ததலைப்புக்கள் கொஞ்சமே ! ஆனாலும் அனுப்பிய நெஞ்சங்களுக்கு நன்றிகள்
எல்லா தலைப்புகளையும் கவிதைகளோடு பிரசுரிக்கிறேன் .
ஒரு கவிதை பல தலைப்பு
தலைப்பு எவ்வளவு முக்கியம் என்று இதை பார்க்கும்போதுதான் புரிகிறது
நீங்களும் அனுபவியுங்கள் அந்த அனுபவத்தை
தலைப்புக்கு பக்கத்தில் தலைப்பை தந்துதவியவர்களின் பெயர்கள்மனிதன் மேல் ஜாதி
- நட்புடன் ஜமால்
தனக்கு தானே கொள்ளி - பிரியமுடன்.........வசந்த்
மத்தளம் - S.A. நவாஸுதீன்
அழியும் ஜாதி - தமிழ்ப்பிரியா

------------------------------

மேல் ஜாதிக்கும்
கீழ் ஜாதிக்கும்
இடையில் நசுங்கிச்
சாகிறது ...
மனித ஜாதிமழையில் உப்பு- நட்புடன் ஜமால்
நப்பாசை - பிரியமுடன்.........வசந்த்
நப்பாசை - S.A. நவாஸுதீன்
ஆசை யாரை விட்டது? - தமிழ்ப்பிரியா

------------------------------


இறுதி மூச்சுக்குச்
சற்றுமுன் ...
தற்கொலை
செய்பவனின் கடைசி
ஆசை
இன்னும் கொஞ்சம்
வாழ வேண்டும்அமைதியா(ஆ)வி - நட்புடன் ஜமால்
பற்றாக்குறை - பிரியமுடன்.........வசந்த்
அமைதி இல்லா அமைதி -S.A. நவாஸுதீன்
அமைதி பற்றாக்குறை - தமிழ்ப்பிரியா

------------------------------

அலைந்து திரிகிறது
அமைதி தேடி
சமாதியானவரின்
ஆவி
எத்தனை பேருக்குத்தான்
இடம் கொடுக்கும்
அமைதி


ந(து)டி - நட்புடன் ஜமால்
ஆஸ்கரை நோக்க - பிரியமுடன்.........வசந்த்
புதிய தொழில் - தமிழ்ப்பிரியா

------------------------------

துடிப்பதைவிட
நடிப்பது
அதிகம்
இதயங்கள்...அறைகல்(ள்) - நட்புடன் ஜமால்
முடிவு - தமிழ்ப்பிரியா
------

காதலுக்கு தாஜ்மகால்
ஒன்றுதான்
கல்லறைகள் அதிகம்கோழை -நட்புடன் ஜமால்
தின ம் - பாலா
மீண்டவர் அதிகம் - தமிழ்ப்பிரியா
----------------

வாழ்வதைவிட
செத்துப்பிழைப்பது அதிகம்
மனிதர்கள்


கிணற்று தவளை அல்லது கிணற்று மனிதன் -நட்புடன் ஜமால்
வாழ்க்கைப்பாடம் -அபுஅஃப்ஸர்
காலம் மாறிப் போச்சு -தமிழ்ப்பிரியா
--------------------

கிணற்றுக்குள் இருந்து
உலகம் பார்க்க
பழகி விட்டன
தவளைகள்
நாம் இன்னும்
தவளையையே
பார்த்துக்கொண்டிருக்கிறோம்இயற்கை அல்லது உண்மை அல்லது உன் மெய் - நட்புடன் ஜமால்
அழகு - பாலா
செயற்கையை மிஞ்சும் இயற்கை - தமிழ்ப்பிரியா
------------------------------

முகப்பூச்சு
கண் மை
உதட்டுச்சாயம்
காசு கொடுத்து
வாங்கும் இவை
எல்லாவற்றையும்விட
அழகாய் இருக்கிறது
இயற்கையான
வெட்கம்புகழ்-ச்சீ - நட்புடன் ஜமால்
பொதுநலம் -தமிழ்ப்பிரியா
----------

இரவு முழுக்க
குரைத்து குரைத்து
எந்தக்கள்ளனையுமே
வர விடவில்லை
``டொம்மி ``
புதழ்ந்துகொண்டிருக்கும் போதும்
குறைத்தது ``டொம்மி ``
பார்த்தீங்களா
நான் சொன்னது
அதுக்கும் விளங்கிட்டது
இன்னும் கூடியது புகழ்ச்சி
பாவம் இரவில் இருந்து
பசியோடு குறைக்கிறது
``டொம்மி
8 comments:

Siruvan said...

இந்த கேள்வியை கொஞ்சம் முயற்ச்சித்து பாருங்களேன் தோழா?

sakthi said...

செம கலக்கல் போல

நான் தான் மிஸ் செய்துட்டேனா???

அருமை உங்கள் பணி

எல்லோரையும் யோசிக்க வைத்திருக்கின்றீர்கள்

வாழ்த்துக்கள்

தமிழிச்சி said...

புதுமையாய் பண்ணுறீங்க. உங்கள் கவிதைகள் அழகு. உங்கள் தலைப்புப் போட்டியை நான் மிஸ் பண்ணிட்டேன்.

நட்புடன் ஜமால் said...

நன்றி நண்பரே

நம்மளையும் சேர்த்து கொண்டதற்கு

உங்கள் கவிதைகள் மிக அழகு

மயாதி said...

sakthi said...


//செம கலக்கல் போல

நான் தான் மிஸ் செய்துட்டேனா???

அருமை உங்கள் பணி

எல்லோரையும் யோசிக்க வைத்திருக்கின்றீர்கள்

வாழ்த்துக்கள்//

நன்றி

உங்கள் வாழ்த்து
வரம்...
என் கவிதை
தவம்.

மயாதி said...

தமிழிச்சி said...

//புதுமையாய் பண்ணுறீங்க. உங்கள் கவிதைகள் அழகு. உங்கள் தலைப்புப் போட்டியை நான் மிஸ் பண்ணிட்டேன்.//

இல்லை நான்தான் உங்கள் தலைப்புக்களை மிஸ் பண்ணிட்டேன்..
சரி இன்னும் ஒரு சந்தர்ப்பம் வராமலா போகும்

நன்றி

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

//நன்றி நண்பரே

நம்மளையும் சேர்த்து கொண்டதற்கு

உங்கள் கவிதைகள் மிக அழகு//


நன்றியெல்லாம் நமக்குள் எதற்கு நண்பா!

என் கவித் தவத்திற்கு
உங்கள் வருகைகள்தான்
கடவுள்
தரிசம்....

தொடர்ந்து ச(சி)ந்திப்போம் ...

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

//நன்றி நண்பரே

நம்மளையும் சேர்த்து கொண்டதற்கு

உங்கள் கவிதைகள் மிக அழகு//


நன்றியெல்லாம் நமக்குள் எதற்கு நண்பா!

என் கவித் தவத்திற்கு
உங்கள் வருகைகள்தான்
கடவுள்
தரிசம்....

தொடர்ந்து ச(சி)ந்திப்போம் ...