6.19.2009

நாள் முழுக்கக் காதல்..

(மன்னிச்சு கொள்ளுங்கோ மீள் இடுகை )

திங்கள் கிழமை
நீ வந்தால்
அந்த வாரமே
வரமாகும்...

******************
செவ்வ்வாய்க்கு
ஒருதரம்
சென்று வா
அங்கேயும்
ஜீவராசிகள்
வாழத்தொடங்கும்...

*******************

புதனென்றால்
வாசிகசாலைகளை
மூடி விடுகிறார்கள்
இருந்தாலென்ன
உன் கண்கள்
திறந்துதானே
இருக்கின்றன
நான் வாசிப்பதற்கு...

******************


நீ
கள்ள வியாழனையும்
நல்ல
வியாழ்னாக்கிப்
போகிறாய்...

*******************
வானத்துக்கு வெள்ளி
வாழக்கைக்கு நீ!
வழிகாட்டி....

*******************

உனக்கு
சனி தோஷமாம்
என் வாரத்தில்
சனியையே
அழித்துவிட்டேன்

******************

ஞாயிற்று
விடுமுறையிலும்
நிறைய
வேலை செய்ய
வேண்டியிருக்கிறது
உன்னைப் பார்க்க

6 comments:

Anonymous said...

காதல் வாரம் ...

சென்ஷி said...

நீங்க எழுதியிருக்குறதுல தட்டுப்படுறது எழுத்துப்பிழைகளா இல்லை உங்கள் தமிழான்னு தெரியலை :(

எழுத்துப்பிழையாயிருந்தா கொஞ்சம் கவனிங்க.. எழுதுற ரெண்டு வரியில ரெண்டு எழுத்தும் தப்பாயிருந்தா கஷ்டமாயிருக்குது..

தொந்தரவுக்கு மன்னிக்க..

மயாதி said...

சென்ஷி said...

நீங்க எழுதியிருக்குறதுல தட்டுப்படுறது எழுத்துப்பிழைகளா இல்லை உங்கள் தமிழான்னு தெரியலை :(

எழுத்துப்பிழையாயிருந்தா கொஞ்சம் கவனிங்க.. எழுதுற ரெண்டு வரியில ரெண்டு எழுத்தும் தப்பாயிருந்தா கஷ்டமாயிருக்குது..

தொந்தரவுக்கு மன்னிக்க..

June 19, 2009 8:07 பம்//

என்னங்க இது தமிழ் எப்பவுமே நம்ம தமிழரசி அக்கா மாதிரி... தட்டுப் படவே மாட்டாது..

அது எழுத்துப் பிழைதான்

இனி கவனம் எடுக்கிறேன்
நன்றி

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

காதல் வாரம் ...//

காதல் வரம்

ஆ.முத்துராமலிங்கம் said...

வாரக்காதல்....!!!

தமிழ்ப்பறவை said...

இது கொஞ்சம் அமெச்சூர்தனமா இருக்கு...