ஒரு நுளம்பு
அவளின் மேலே ...
பார்த்துக்கொண்டிருந்த
எனக்கோ பயம்
ஐயோ
அவளை கடிக்கப்போகுதே!
அவளோ அதை
கண்டு கொள்ளவேயில்லை
செக்கன்கள்
நிமிடங்கள்
மணித்தியாலங்கள் கடந்து
போயின ..
நுளம்பு அப்படியே
இருந்தது....
புரிந்துவிட்டது
விஷமக்கார நுளம்பு!
நீண்ட நேரமாய்
பார்த்திருந்த
என்னைக் பார்த்துவிட்டது
களைத்துப்போன நுளம்பு
கடைசியாய் என்பக்கம்
வந்தது..
என்ன நுளம்பே
என்னைவிட
அதிகம் லொல்லு
விடுகிறாயே என்றேன்
சீ சீ
லொல்லா அதெல்லாம்
மனிதனுக்குத்தான்
தெரியும்
எங்களுக்கு இல்லை
என்றது நுளம்பு
பிறகு,
ஒரு கடிகூட கடிக்காமல்
இவ்வளவு நேரமும்
அவளுக்கு தெரியாமல்
அவளோடு இருந்தது
என்னவாக்கும்
என்றேன் ?
ஓ அதுவா!
ஒன்றுமில்லையப்பா
இன்றோடு என்
ஆயுசு முடிகிறது
எப்படியும்
ஒரு மனிதனோட
அடிவாங்கிச் சாகனும்
என்பதுதான் என்
தலை எழுத்து
அது அவளுடைய
கையா இருந்தா
நல்லைருக்குமே என்றுதான்
இவ்வளவு நேரமும்
காத்திருந்தேன் என்று
சொல்லி
விரக்தியோடு
பறந்து போனது...
பைத்தியக்கார
நுளம்பே !
உன் விதி
மனிதன் அடிச்சு
சாகனும் என்றுதானே..
அதுதான் அவள்
அடிக்கவில்லை
அவள்
தேவதை
மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்....
பி. கு -
- சத்தியமா இது கவிதையில்லை.
- இது எனது இன்றைய இரண்டாவது இடுகை மறக்காமல் முதல் இடுகையையும் பார்த்துவிட்டு போங்கள்.
11 comments:
பெரிய கவிஞர் போல
எத்தனை போஸ்ட் ஒரு நாளைக்கு
பிச்சு எடுக்கறீங்க
செக்கன்கள்
நிமிடங்கள்
மணித்தியாலங்கள்
இப்போ தான் இது போல வார்த்தைகள் கேள்விபடுகிறேன்....
அருமை
ஒரு நுளம்பு
அவளின் மேலே ...
பார்த்துக்கொண்டிருந்த
எனக்கோ பயம்
ஐயோ
அவளை கடிக்கப்போகுதே!
கொசுவா நுளம்பு அர்த்தம் தெரியலை சொல்லுங்க
நுளம்பு - appadinna kosu thaane...
sakthi said...
//ஒரு நுளம்பு
அவளின் மேலே ...
பார்த்துக்கொண்டிருந்த
எனக்கோ பயம்
ஐயோ
அவளை கடிக்கப்போகுதே!
கொசுவா நுளம்பு அர்த்தம் தெரியலை சொல்லுங்க//
இந்தியாவில் கொசு என்பதை இலங்கையில் நுளம்பு என்போம் !
அவ்வளவுதான்..
sakthi said...
பெரிய கவிஞர் போல
எத்தனை போஸ்ட் ஒரு நாளைக்கு
பிச்சு எடுக்கறீங்க
செக்கன்கள்
நிமிடங்கள்
மணித்தியாலங்கள்
இப்போ தான் இது போல வார்த்தைகள் கேள்விபடுகிறேன்....
அருமை//
ஐயோ நான் பெரிய ஆள் இல்ல ரொம்ப சின்ன பையன் ....
நாணல் said...
//நுளம்பு - appadinna kosu thaane...//
ஆமாங்க இந்தியாவில் கொசு என்பதை இலங்கையில் நுளம்பு என்றுதான் சொல்வது வழக்கம் .
கொசுவ வெச்சு காதலா? யப்பா! அசத்தல்.
// பைத்தியக்கார
நுளம்பே !
உன் விதி
மனிதன் அடிச்சு
சாகனும் என்றுதானே..
அதுதான் அவள்
அடிக்கவில்லை
அவள்
தேவதை
மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்...//
அற்புதம்...
\\அவள்
தேவதை\
இதற்காக ஒரு நுளம்புவை பறக்க விட்டீர்களோ.
அருமை நண்பரே
இது கவிதை இல்லை
பாலா... said...
//கொசுவ வெச்சு காதலா? யப்பா! அசத்தல்.//
இது என்னங்க பெரிய விடயம், காதல் எவ்வளவோ பண்ணும்......
thank you
விஷ்ணு. said.
// பைத்தியக்கார
நுளம்பே !
உன் விதி
மனிதன் அடிச்சு
சாகனும் என்றுதானே..
அதுதான் அவள்
அடிக்கவில்லை
அவள்
தேவதை
மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்...//
அற்புதம்...//
இந்த காதல் இப்படித்தான் பைத்தியக்கார தனமா உளறிக்கொண்டே இருக்கும் ..
நன்றி விஷ்ணு
Post a Comment