6.09.2009

வந்து காதலித்துவிடுங்கள்

மார்புத்தீயில்
மதுரை எரிந்தது
அன்று....
இன்று
என்னை எரிக்கிறாய் !


காணாமல் போனோர்
பட்டியலில் நான் ...
உன்னுள்
தொலைந்து போனேன்


கவிஞனுக்கு
கவிதைகள்....
கடவுளுக்கு
பக்தர்கள்...
தாய்க்கு
பிள்ளைகள்...
போலல்ல
அதற்கு மேல்
எனக்கு
நீ...



உன்னைப்
பார்க்கும் வரை
கடவுள் என்
விதியை
எழுதினான்...
இப்போது
நீ எழுதுகிறாய்


மனிதன் வாழ
இன்னுமொரு
கிரகம் தேடி
அலைகிறான்
நான் வாழ
உன்னைத் தேடி
அலைகிறேன்

மூச்சு விட
முடியாமல்
சேத்துப்
போவதை விட
கடினமானது
காதலிக்க முடியாமல்
செத்துப்போவது

விழுந்தது
என் விழி
நீ
சறுக்கிய போது...


தூக்கு கயிற்றில்
தொங்குகிறது
காதல்...
நீ
காதலிக்கவில்லையாம் !

உன்னை என்னுள்
சேமித்து விடு
என்னை விட
உன்னைப்
பத்திரப்படுத்த
எவராலும்
முடியாது....



16 comments:

நட்புடன் ஜமால் said...

தலைப்பே மிரட்டலா இருக்கே

உள்ளே போய்ட்டு வாறேனுங்கோ

தமிழிச்சி said...

அது சரி ' வந்து காதலித்து விடுங்கள் என்று பன்மையில் சொன்னால் என்ன பொருள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//உன்னைப்
பார்க்கும் வரை
கடவுள் என்
விதியை
எழுதினான்...
இப்போது
நீ எழுதுகிறாய்//
Is it true???
ha ha ha

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

//தலைப்பே மிரட்டலா இருக்கே

உள்ளே போய்ட்டு வாறேனுங்கோ//

போங்கோ தலைவா ! ஆனா பத்திரமா திரும்பி வந்து விடுங்கள்..

மயாதி said...

தமிழிச்சி said...

//அது சரி ' வந்து காதலித்து விடுங்கள் என்று பன்மையில் சொன்னால் என்ன பொருள்.//

சிங்கிளா போட்டா சரிவர மாட்டேங்குதே
சரி பன்மையா இருந்துட்டு போகட்டுமே... என்ன பொறாமையா இருக்கா ?
( தமாசுங்கோ )

S.A. நவாஸுதீன் said...

காணாமல் போனோர்
பட்டியலில் நான் ...
உன்னுள்
தொலைந்து போனேன்

ஒரு முடிவோடதான் இருக்குற மாதிரி தெரியுது.

கவிதையும் தன்னைப்பற்றி வாசிக்க உங்களிடம்தான் வரவேண்டும் போல

மயாதி said...

ஜெஸ்வந்தி said...
//உன்னைப்
பார்க்கும் வரை
கடவுள் என்
விதியை
எழுதினான்...
இப்போது
நீ எழுதுகிறாய்//
Is it true???
ha ha ha


என்னங்க என்ன பார்க்க பாவமா இல்லையா ?
இப்படி கேலி பன்னுரின்களே.

சரி அதைவிடுங்கள் தோழி,உங்கள் விருதை பாவிப்பதற்கு , என் தளத்தில் இருந்து உங்கள் தளத்திற்கு இணைப்பு கொடுப்பது எப்படி? நம்மட கம்பியூட்டர் அறிவு இவ்வளவு தானுங்க..
கொஞ்சம் உதவி பன்னுரிங்களா ?

S.A. நவாஸுதீன் said...

விழுந்தது
என் விழி
நீ
சறுக்கிய போது...

இத படிச்சிட்டு நான் விழுந்துட்டேன். பயப்படாதீங்க. நல்லா இருக்குன்னு சொல்லவந்தேன்

S.A. நவாஸுதீன் said...

தூக்கு கயிற்றில்
தொங்குகிறது
காதல்...
நீ
காதலிக்கவில்லையாம்!

ஆயுள்தண்டனை வேண்டும், இல்லையேல் தற்கொலை?

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

//தூக்கு கயிற்றில்
தொங்குகிறது
காதல்...
நீ
காதலிக்கவில்லையாம்!

ஆயுள்தண்டனை வேண்டும், இல்லையேல் தற்கொலை?//

அண்ணா! இதுக்கு போய் இப்படியெல்லாம் முடிவு எடுத்துகிட்டு..
அண்ணி பாவமில்லையா?
ஹி ஹி ஹி ..

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

//காணாமல் போனோர்
பட்டியலில் நான் ...
உன்னுள்
தொலைந்து போனேன்

ஒரு முடிவோடதான் இருக்குற மாதிரி தெரியுது.

கவிதையும் தன்னைப்பற்றி வாசிக்க உங்களிடம்தான் வரவேண்டும் போல //

என்றாலும் ரொம்ப ஓவரா புகழுறீங்க போங்கோ அண்ணா எனக்கு வெட்கமா இருக்கு...

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

மயாதி,

கவிதைகளெல்லாம் கலக்கல். கடந்த காலங்கள் ஞாபகம் வருகின்றது.

ஆனாலும் கடவுளை இழுத்து எழுதும் கவிதைகளில் என் மனம் ஒட்டுவதே இல்லை. கவிதைகளில் பொய்யும் வடிக்கலாம் என்றாலும் கடவுள் வரும் கவிதைகளை ஏனோ ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. :D

கௌபாய்மது.

மயாதி said...

மயாதி,
மதுவதனன் மௌ. said...



//
கவிதைகளெல்லாம் கலக்கல். கடந்த காலங்கள் ஞாபகம் வருகின்றது.

ஆனாலும் கடவுளை இழுத்து எழுதும் கவிதைகளில் என் மனம் ஒட்டுவதே இல்லை. கவிதைகளில் பொய்யும் வடிக்கலாம் என்றாலும் கடவுள் வரும் கவிதைகளை ஏனோ ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. :D//

உங்கள் ஆதங்கம் புரிகிறது நண்பரே!
ஆனால் கடவுளை நான் எனது கவிதைக்குள் எடுப்பது , அவர்பால் உள்ள கோபமோ, நம்பிக்கைஈனத்தாலோ அல்ல...
கடவுளைத்தான் நாம் நம் கவிதைகளில் எப்படி வேணுமானாலும் பாவிக்கலாம் ஏனென்றால் மனிதர்களை பாவித்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்...

நீங்கள் கடவுளை கருவறைக்குள்ளே புனிதமாக வைத்து பார்க்கும் புனிதராக இருக்கிறீர்கள், நானோ கடவுளை கவிதையிலும் வைத்து அழகு பார்க்கும் மனிதராக இருக்கிறேன் ... அவ்வளவுதான்...

மன்னித்துக் கொள்ளுங்கள் என் கவிதை உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால்

நன்றி நண்பனே மீண்டும் பரிமாறிக் கொள்வோம் ..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//சரி அதைவிடுங்கள் தோழி,உங்கள் விருதை பாவிப்பதற்கு , என் தளத்தில் இருந்து உங்கள் தளத்திற்கு இணைப்பு கொடுப்பது எப்படி? நம்மட கம்பியூட்டர் அறிவு இவ்வளவு தானுங்க..
கொஞ்சம் உதவி பன்னுரிங்களா ?//
It is very easy.
1.Safe the butterfly award
2.Go to your Layout-select add a gadget
3.select add picture from computer
4.paste the award
5.In the URL colum -fill in the url for my article,which is
http://maunarakankal.blogspot.com/2009/06/blog-post.html
6.Caption-'Thank me'
* This is the important part and don't forget to do that.
If you do it this way,when you click on the butterfly you can connect to my artcle.

சென்ஷி said...

தூக்கு கயிற்றில்
தொங்குகிறது
காதல்...
நீ
காதலிக்கவில்லையாம் !////////

கலக்கல்!!!!!!

பூங்குழலி said...

உன்னைப்
பார்க்கும் வரை
கடவுள் என்
விதியை
எழுதினான்...
இப்போது
நீ எழுதுகிறாய்
அருமை இந்த வரிகள்