அறை நடுவில்
கணவனின்
பிணம்...
குழந்தை
பெறுவதற்காகவே
மட்டும்
பயன்பட்டவன்
என்றாலும்
அவளின்
அழுகை
அவனையும்
நல்லவனாக
அங்கிகரித்துக்
கொண்டிருந்தது..
பாரம்பரியத்திற்கு
பக்கத்துவீட்டு
காரர்கள்
சமைத்து வந்தார்கள்
அப்பா இறந்ததின்
வலியை
உணர்ந்து கொல்ல
முடியாத
குழந்தைகள்
நீண்ட நாளுக்குப்
பிறகு
வயிறு நிறைய
சாப்பாடு
கிடைத்த
சந்தோசத்தில்
விளையாடிக்
கொண்டிருக்கின்றன...
அவளின்
அதிகபட்சமான
அலங்காரம்.....
குங்குமப் பொட்டும்
ஒரு பூவும்
அதைக் கூட
இந்த
சமூகம்
வன்முறைக் கரங்களால்
பறித்துவிட்டது
தாலியைப் பற்றி
மட்டும்
அவளுக்கு
கவலையே இல்லை
அது
கலியாணத்துக்கு
அடுத்தவாரமே
அடகுக்கடைக்கு
போய்
அறுதியாகிப் போனது...
எட்டாம் நாள்
சடங்கும்
முடித்தாகிவிட்டது...
உறவினர் செத்துப்போனால்
ஒரு வருடத்துக்கு
கோயிலுக்கு போக
முடியாதாமே!
இனியென்ன
அவள்
இவ்வளவு காலம்
செய்து வந்த
கோயில் துப்பரவு
வேலையை விட்டு
விட்டு
புது வேலை
தேடிக்கொள்ள
வேண்டியதுதான்...
17 comments:
//அவளின்
அழுகை
அவனையும்
நல்லவனாக
அங்கீகரித்துக்
கொண்டிருந்தது..//
//இனியென்ன
அவள்
இவ்வளவு காலம்
செய்து வந்த
கோயில் துப்பரவு
வேலையை விட்டு
விட்டு
புது வேலை
தேடிக்கொள்ள
வேண்டியதுதான்...//
அருமையான கவிதை..
வாழ்த்துகள்..
கோயில் துப்பரவு
வேலையை விட்டு
விட்டு
புது வேலை\\
இந்த இடம் கொஞ்சம் அல்ல நிறம்பவே யோசிக்க வைத்து விட்டது.
இருப்பினும் ஒன்றும் சொல்வதற்கோ செய்வதற்கோ இல்லை.
குழந்தைகள்
நீண்ட நாளுக்குப்
பிறகு
வயிறு நிறைய
சாப்பாடு
கிடைத்த
சந்தோசத்தில்
விளையாடிக்
கொண்டிருக்கின்றன...\\
எதார்த்தம்.
ஆமாம்பா இயல்பை தான் இயன்று இருக்கிறாய்.. நம்முள் இந்த கலாச்சார மாற்றம் இன்னும் இந்த வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களிடம் ஏற்படவேயில்லை... நாமெல்லாம் இதை மெதுவாச் சொல்லி அவர்களை வெளிக்கொனற முயற்சிக்கனும்....
செத்தவன் சும்மா போகலை இருக்கிற வேலைக்கும் வேட்டு வெச்சிட்டுப் போயிருக்கிறான்....
நல்ல உள்ளடக்கம், சொற்களை சிக்கனப்படுத்துங்கள்...
மயாதி. என்ன சொல்றதுன்னே தெரியலப்பா. வரிகளை வாசிக்கும்போது காட்சிகள் கண்முன்னே தெரிவதால் கலங்கடிக்கிறது.
பாரம்பரியத்திற்கு
பக்கத்துவீட்டு
காரர்கள்
சமைத்து வந்தார்கள்
அப்பா இறந்ததின்
வலியை
உணர்ந்து கொல்ல
முடியாத
குழந்தைகள்
நீண்ட நாளுக்குப்
பிறகு
வயிறு நிறைய
சாப்பாடு
கிடைத்த
சந்தோசத்தில்
விளையாடிக்
கொண்டிருக்கின்றன...
அவன் இருந்தபோது கிட்டாதது இறந்தபோது கிட்டியது. கடமை மறந்த தந்தையையும் அதனால் வறுமையையும் நல்லா சொல்லி இருக்கீங்க
இனியென்ன
அவள்
இவ்வளவு காலம்
செய்து வந்த
கோயில் துப்பரவு
வேலையை விட்டு
விட்டு
புது வேலை
தேடிக்கொள்ள
வேண்டியதுதான்...
ஆழமான பகுத்தறிவு சிந்தனை.
அருமையான அர்த்தமுள்ள ஒரு கவிதை. பாராட்டாமல் விட முடியாது.
எங்கள் சமுதாயம் திருந்த இன்னும் என்ன நடக்க வேண்டுமோ தெரியவில்லை.!
//குழந்தை
பெறுவதற்காகவே
மட்டும்
பயன்பட்டவன்
என்றாலும்
அவளின்
அழுகை
அவனையும்
நல்லவனாக
அங்கிகரித்துக்
கொண்டிருந்தது..///
பல கணவன்மார்கள் நல்லவராகிப் போவது இப்படித்தான்..........
அருமையான கருத்துக்கள்...
தீப்பெட்டி said...
//அவளின்
அழுகை
அவனையும்
நல்லவனாக
அங்கீகரித்துக்
கொண்டிருந்தது..//
அருமையான கவிதை..
வாழ்த்துகள்..//
நன்றிகள் நண்பரே..
நன்றி ஜமால் அண்ணா..
தமிழரசி said...
ஆமாம்பா இயல்பை தான் இயன்று இருக்கிறாய்.. நம்முள் இந்த கலாச்சார மாற்றம் இன்னும் இந்த வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களிடம் ஏற்படவேயில்லை... நாமெல்லாம் இதை மெதுவாச் சொல்லி அவர்களை வெளிக்கொனற முயற்சிக்கனும்....
செத்தவன் சும்மா போகலை இருக்கிற வேலைக்கும் வேட்டு வெச்சிட்டுப் போயிருக்கிறான்//
உங்கட தம்பியா இருந்துட்டு இப்படியெல்லாம் யோசிக்காட்டி...
S.A. நவாஸுதீன் said...
மயாதி. என்ன சொல்றதுன்னே தெரியலப்பா. வரிகளை வாசிக்கும்போது காட்சிகள் கண்முன்னே தெரிவதால் கலங்கடிக்கிறது.//
என்ன செய்வது நவாஸ் அண்ணா , இந்த நிஜங்கள் எப்பவும் இப்படி கசப்பாகத்தான் இருக்குமோ!
ஜெஸ்வந்தி said...
அருமையான அர்த்தமுள்ள ஒரு கவிதை. பாராட்டாமல் விட முடியாது.
எங்கள் சமுதாயம் திருந்த இன்னும் என்ன நடக்க வேண்டுமோ தெரியவில்லை.!//
நன்றி ஜெஸ்வந்தி...
nila said...
//குழந்தை
பெறுவதற்காகவே
மட்டும்
பயன்பட்டவன்
என்றாலும்
அவளின்
அழுகை
அவனையும்
நல்லவனாக
அங்கிகரித்துக்
கொண்டிருந்தது..///
பல கணவன்மார்கள் நல்லவராகிப் போவது இப்படித்தான்..........
அருமையான கருத்துக்கள்...//
நன்றி நிலா..
Post a Comment