6.15.2009

பின்னூட்டங்களில் உயிர் வாழ்பவர்கள்

ஒவ்வொரு
புத்தகத்துக்குமே
ஒரு முன்னுரைதான்...
ஆனால்
எங்கள் ஒவ்வொரு
ஆக்கத்துக்குமே
பல முன்னுரைகள்....
பின்னூட்டங்களாக

ஓவ்வொரு
ஆணின் வெற்றிக்கு
பின்னாளும்
ஒரு பெண்..
ஓவ்வொரு
பதிவரின் வெற்றிக்கு
பின்னாளும்
பல பின்னூட்டம்..

*******************

பின்னூட்டம்
ஒவ்வொன்றும்
அடுத்த இடுகைக்கான
முன்னூட்டம்..

*******************

பின்னூட்டம்
ஓவ்வொரு
ஆக்கத்துக்குமான
ஊக்க சக்திகள்...

******************


பின்னூட்டங்கள்
எங்களுக்கான
விற்றமின்
மாத்திரைகள்...

*****************

பின்னூட்டத்தை
(சு)வாசித்துக்
கொண்டுதான்
பிளாக்கர்
உயிர் வாழ்கிறது...

********************


பின்னூட்டம்
ஒவ்வொன்றையும்
வாசிக்கும் போது
வருகின்ற மகிழ்ச்சி
ஆகா .....
ஈன்ற மகனை
நல்லவனென்று
கேட்கும் போது
அம்மா பெரும்
மகிழ்ச்சி
அல்லாவா...

******************

ஆக்கங்கள்
என்னை
அறிமுகப்படுத்தியது
உங்களுக்கு.....
உங்கள்
பின்னூட்டங்கள்
என்னை
அறிமுகப்படுத்தியது
எனக்கு

********************

தவறைச்
சுட்டிக்காட்டும்
பின்னூட்டங்கள்....
ஒரு எழுத்தாளனை
செதுக்கும்
சிற்பிகள்

*****************


தவறு என்று
திட்டுவதையும்
பின்னூட்டமாக
தட்டிவிட்டு
செல்லுங்கள்...
திருந்தட்டும்
எங்கள்
எழுத்துக்கள்...

*****************


இனி
பின்னூட்டங்கள்
தமிழை
வளர்த்தெடுக்கும்
அன்னையாகட்டும்....

**********************

நாம்
ஒவ்வொருவரும்
அன்னையை
மதிக்கும்
பிள்ளைகளாவோம்!

29 comments:

நட்புடன் ஜமால் said...

பின்னூட்டம்
ஒவ்வொன்றையும்
வாசிக்கும் போது
வருகின்ற மகிழ்ச்சி
ஆகா .....
ஈன்ற மகனை
நல்லவனென்று
கேட்கும் போது
அம்மா பெரும்
மகிழ்ச்சி
அல்லாவா...\\

ஆம்!

நட்புடன் ஜமால் said...

தவறைச்
சுட்டிக்காட்டும்
பின்னூட்டங்கள்....
ஒரு எழுத்தாளனை
செதுக்கும்
சிற்பிகள்\\

சரிதான்!

(இடம் பொருள் ஏவல் - இதனையும் கவணிக்கனும்)

எல்லா மாற்று கருத்துகளையும் பின்னூட்ட வேண்டுமென்பது இல்லை, முடிந்தவரை தனி மடலிடலாம் - இது எனது கருத்து.

Anonymous said...

நட்புடன் ஜமால் said...
தவறைச்
சுட்டிக்காட்டும்
பின்னூட்டங்கள்....
ஒரு எழுத்தாளனை
செதுக்கும்
சிற்பிகள்\\

சரிதான்!

(இடம் பொருள் ஏவல் - இதனையும் கவணிக்கனும்)

எல்லா மாற்று கருத்துகளையும் பின்னூட்ட வேண்டுமென்பது இல்லை, முடிந்தவரை தனி மடலிடலாம் - இது எனது கருத்து.

ஆம் இதை நான் வழி மொழிகிறேன்..ஏன்னென்றால் அந்த பதிவரின் மனப்பக்குவம் எப்படியோ நாம் அறியோம் ஆதலால்....

Anonymous said...

பின்னுட்டம் தான் நாம் மேலும் சிறப்பாக எழுத தூண்டும் அதோ நேரம் குறைகளையும் சுட்டிக்காட்டினால் தான் முழுமையா நம்மை நாம் திருத்திக்கனும்....

சரி தம்பி கவலை படாதே அக்கா இனி தவறாமல் பின்னுட்டமிடுகிறேன் சரியா?

தேவன் மாயம் said...

பின்னூட்டத்தை
வைத்தே
ஒரு
கவிதையா!!
சொல்ல வந்தது...
நல்லா வந்திருக்கு!!

தேவன் மாயம் said...

சரி தம்பி கவலை படாதே அக்கா இனி தவறாமல் பின்னுட்டமிடுகிறேன் சரியா?//

அக்காக்களின் ஆதரவே கெடைச்சாச்சா?
இனியென்ன!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மிகவும் நல்லவர் நீங்கள்

சென்ஷி said...

:-))

நடத்துங்க நடத்துங்க...

பின்னூட்ட வாழ்த்துக்களுக்கு நன்றி!!

S.A. நவாஸுதீன் said...

பின்னூட்டம் பற்றிய கவிதை. நல்ல யோசனை தான் மயாதி. படித்துவிட்டு வருகிறேன்

S.A. நவாஸுதீன் said...

ஓவ்வொரு
பதிவரின் வெற்றிக்கு
பின்னாளும்
பல பின்னூட்டம்..

பின்னூட்டம்
ஒவ்வொன்றும்
அடுத்த இடுகைக்கான
முன்னூட்டம்..

உண்மை. முந்தைய பதிவிற்கு கிடைத்த பின்னூட்டங்கள் தான் அடுத்த (அதைவிட சிறப்பாக) பதிவிட ஆர்வத்தை தருகிறது

S.A. நவாஸுதீன் said...

பின்னூட்டத்தை
(சு)வாசித்துக்
கொண்டுதான்
பிளாக்கர்
உயிர் வாழ்கிறது...

உண்மைதான்.

S.A. நவாஸுதீன் said...

ஆக்கங்கள்
என்னை
அறிமுகப்படுத்தியது
உங்களுக்கு.....
உங்கள்
பின்னூட்டங்கள்
என்னை
அறிமுகப்படுத்தியது
எனக்கு

நல்லவிஷயத்தை பாராட்டுவதில் கூட மனநிறைவு ஏற்படுகிறது. (படிக்கும்போது பதிவருக்கு ஏற்படும் அதே மனநிறைவு)

S.A. நவாஸுதீன் said...

தவறைச்
சுட்டிக்காட்டும்
பின்னூட்டங்கள்....
ஒரு எழுத்தாளனை
செதுக்கும்
சிற்பிகள்

சரியாகச் சொன்னீர்கள். தவறுகளை சுட்டிக் காட்டுவதென்பது சிலை வடிப்பது போலத்தான் இருக்க வேண்டும். அல்லாது உளியை கத்திபோல் பாவித்து குத்திப் பார்க்கக் கூடாது. அது நல்ல சிலையாக வராது. அதோடு பதிவர்களும் பதிவு (எழுதப்படாத) மரபு பேணுவதும் நல்லது. (நான் ரெண்டுலயுமே ரொம்ப வீக்.)

S.A. நவாஸுதீன் said...

தமிழரசி said...

பின்னுட்டம் தான் நாம் மேலும் சிறப்பாக எழுத தூண்டும். அதே நேரம் குறைகளையும் சுட்டிக்காட்டினால் முழுமையா நம்மை நாம் திருத்திக்கனும்....

தமிழ் சொன்னா மறுக்கமுடியுமா. நானும் வழிமொழிகிறேன்.

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

தவறைச்
சுட்டிக்காட்டும்
பின்னூட்டங்கள்....
ஒரு எழுத்தாளனை
செதுக்கும்
சிற்பிகள்\\

சரிதான்!

(இடம் பொருள் ஏவல் - இதனையும் கவணிக்கனும்)

எல்லா மாற்று கருத்துகளையும் பின்னூட்ட வேண்டுமென்பது இல்லை, முடிந்தவரை தனி மடலிடலாம் - இது எனது கருத்து.//


உண்மைதான் அண்ணா ! இடம் பொருள் பார்த்து நடக்கும் பக்குவம் இல்லைதான் எனக்கும்.
என்ன செய்ய முயற்சி செய்கிறேன்! இன்னும் நிறைய நாள் வேண்டும் என நினைக்கிறேன்

நன்றி அண்ணா !
உங்களைப் போன்றோரின் துணை இருந்தால் எதுவும் சாத்தியம்தான்.

மயாதி said...

சரிதான்!

(இடம் பொருள் ஏவல் - இதனையும் கவணிக்கனும்)
தமிழரசி said...

எல்லா மாற்று கருத்துகளையும் பின்னூட்ட வேண்டுமென்பது இல்லை, முடிந்தவரை தனி மடலிடலாம் - இது எனது கருத்து.

ஆம் இதை நான் வழி மொழிகிறேன்..ஏன்னென்றால் அந்த பதிவரின் மனப்பக்குவம் எப்படியோ //

நன்றி அக்கா! உங்களின் கருத்துக்கு பதிலை ஜமால் அண்ணாவின் பதிலோடு கொடுத்து விட்டேன் !

மயாதி said...

தமிழரசி said...

சரி தம்பி கவலை படாதே அக்கா இனி தவறாமல் பின்னுட்டமிடுகிறேன் சரியா?//

பின்னூட்டம் போடாவிட்டால் , கொலை விழும்.

மயாதி said...

thevanmayam said...

சரி தம்பி கவலை படாதே அக்கா இனி தவறாமல் பின்னுட்டமிடுகிறேன் சரியா?//

அக்காக்களின் ஆதரவே கெடைச்சாச்சா?
இனியென்ன!//

நன்றி அண்ணா!
என்ன வயிறு எரியுதா? ஹா ஹா ஹா

மயாதி said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

மிகவும் நல்லவர் நீங்கள்//

ஹா ஹா ஹா...
நல்ல பகிடி !

நன்றி அண்ணா !

மயாதி said...

திகழ்மிளிர் said...
அருமை//

நன்றி நண்பரே

மயாதி said...

நன்றி ச.A. நவாஸுதீன் அண்ணா !

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

தமிழரசி said...

பின்னுட்டம் தான் நாம் மேலும் சிறப்பாக எழுத தூண்டும். அதே நேரம் குறைகளையும் சுட்டிக்காட்டினால் முழுமையா நம்மை நாம் திருத்திக்கனும்....

தமிழ் சொன்னா மறுக்கமுடியுமா. நானும் வழிமொழிகிறேன்.//

ம்ம் .. அக்காதானே இப்ப கருத்துக் கன்னி.
ஒத்துக் கொள்ளத்தான் வேணும்.

மயாதி said...

நன்றி சென்ஷி

sakthi said...

ஓவ்வொரு
ஆணின் வெற்றிக்கு
பின்னாளும்
ஒரு பெண்..
ஓவ்வொரு
பதிவரின் வெற்றிக்கு
பின்னாளும்
பல பின்னூட்டம்..


அய்யோ புல்லரிக்குதே..

sakthi said...

பின்னூட்டம்
ஓவ்வொரு
ஆக்கத்துக்குமான
ஊக்க சக்திகள்...

நன்றி இப்படி எங்களை போன்ற பின்னூட்டவாதிகளுக்காய் ஒரு கவிதை எழுதியமைக்கு மயாதி...

Muruganandan M.K. said...

தவறு என்று
திட்டுவதையும்
பின்னூட்டமாக
தட்டிவிட்டு
செல்லுங்கள்...
திருந்தட்டும்
எங்கள்
எழுத்துக்கள்...
உண்மையான விமர்சனம்தான் வழிகாட்டும்

நசரேயன் said...

நான் உங்களை வாழ்த்தி பின்னூட்டம் போடுகிறேன்

அ.மு.செய்யது said...

இந்த அற்புத கவிதைக்கு பின்னூட்டமிடவில்லையென்றால்

நான் மனிதனே இல்லை.

ஷாகுல் said...

//பின்னூட்டம் போடாவிட்டால் , கொலை விழும்//

அப்போ தினமும் ஒன்னு போடுரேங்க.நான் இன்னும் புள்ள 'குட்டி' எதையும் பாக்கலங்க