மு.கு- பயந்தவர்கள் இப்போதே வெளியேறி விடுங்கள்.
சில வருடங்களுக்கு முன் இறந்து போன என் நண்பர் ஒருவர் நேற்று ஒரு மெயில் அனுப்பி இருந்தார் அதிலே அவரின் சில படங்களோடு , அவர் எழுதிய கவிதைகளையும் அனுப்பி இருந்தார். மனிதக் காதலைப் பார்த்து பார்த்து அழுத்து போனவர்களே வித்தியாசமாக பேய்களின் காதலைப் பாருங்கள்.
என் கவிதைகளைச்
சேர்த்து
ஒரு கல்லறை
கட்டி வைத்திருக்கிறேன்
உனக்காக...
ஏற்கனவே
செத்து
போனவன்தானே
ஏன்
மீண்டும்
கொல்கிறாய் ..
இப்போதெல்லாம்
பகலில் கூட
என் கல்லறையை
விட்டு
வெளியே வருகிறேன்...
உன்னைப்
பார்ப்பதற்காக..
இந்த பேயை
மட்டும்
பேசவைத்து விட்டு
நீ மௌனமாகவே
இருக்கிறாயே ...
என்னை
ஆட்கொள்ளச் சொன்னால்
நீயோ போய்
ஆட்களைக் கொல்கிறாய்...
பைத்தியக்கார
மனிதர்களே
காதலுக்காக
தற்கொலை
செய்துகொள்ளாதீர்கள்....
இங்கேயும்
அதே தொல்லை...
உன் பிணத்தின்
மேலே கிடந்த
பூக்களை சேர்த்து
வைத்திருக்கிறேன்
இன்னும்
வாடிப் போகவே
இல்லை...
நீ போகும்
போது வீசும்
வாசத்தை
வைத்துக்கொண்டு...
எல்லாப் பேய்கள்
வரும்போது
மல்லிகை வாசமே
வரும் என்று
நம்பிக்
கொண்டிருக்கிறார்கள்
முட்டாள்
மனிதர்கள்...
எத்தனை
இதயங்கள்
வேண்டுமானாலும்
பிய்த்துக் கொண்டு
தருகிறேன்
உன் இதயத்தில்
ஒரு சின்ன
இடமாவது
கொடுத்து விடு...
சாமத்தில் ஊளையிட
மட்டுமே தெரிந்த
என்னை...
கவிதை எழுதவும்
வைத்துவிட்டது
காதல்
எண்ணம்- இரண்டு வருடத்துக்கு முன் செத்தவன்
எழுத்து- மயாதி
9 comments:
I love you
ஆவி அம்மணி said...
I love யு//
ஐயோ சாமி , ஆளை விட்ட போதும்..நன்றி ஆவி தாயே!
நீ போகும்
போது வீசும்
வாசத்தை
வைத்துக்கொண்டு...
எல்லாப் பேய்கள்
வரும்போது
மல்லிகை வாசமே
வரும் என்று
நம்பிக்
கொண்டிருக்கிறார்கள்
முட்டாள்
மனிதர்கள்...
\\
அருமை இது ...
கவிதையை விட போட்டோஸ் தான் பயமுறுத்துது..
//என் கவிதைகளைச்
சேர்த்து
ஒரு கல்லறை
கட்டி வைத்திருக்கிறேன்
உனக்காக...//
கவிதையை படிச்சு செத்துப்போனவங்களை பத்தி எழுதியிருக்கீங்களா?! :-))
ஏற்கனவே
செத்து
போனவன்தானே
ஏன்
மீண்டும்
கொல்கிறாய் ..
பேய்காக இவ்வளவு அழகாய் கவிதை
எழுதிய முதல் கவிஞரே...
வாழ்க உம் கவிப்பணி...
அணைத்து கவிதைகளும் அருமை. அக்காவும் தம்பியும் கவிதையைத் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை போல
பைத்தியக்கார
மனிதர்களே
காதலுக்காக
தற்கொலை
செய்துகொள்ளாதீர்கள்....
இங்கேயும்
அதே தொல்லை...
நீ போகும்
போது வீசும்
வாசத்தை
வைத்துக்கொண்டு...
எல்லாப் பேய்கள்
வரும்போது
மல்லிகை வாசமே
வரும் என்று
நம்பிக்
கொண்டிருக்கிறார்கள்
முட்டாள்
மனிதர்கள்..
ஏற்கனவே
செத்து
போனவன்தானே
ஏன்
மீண்டும்
கொல்கிறாய் ..
ரசித்தேன்
தம்பி நாம் பிறகு ஆவி உலகத்தில் சந்தித்து கவிதை உலகத்தை பற்றி அலசுவோம்....
//ஏற்கனவே
செத்து
போனவன்தானே
ஏன்
மீண்டும்
கொல்கிறாய் ..
இப்போதெல்லாம்
பகலில் கூட
என் கல்லறையை
விட்டு
வெளியே வருகிறேன்...
உன்னைப்
பார்ப்பதற்காக..
இந்த பேயை
மட்டும்
பேசவைத்து விட்டு
நீ மௌனமாகவே
இருக்கிறாயே ...//
ஐயோ கொல்றீங்க சார்.
மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனித காதல் அல்ல.
அதையும் தாண்டி பயங்கரமானது.
ஊரில நல்ல பேய் ஓட்டுபவர் ஒருவரை விரைவில் போய் பார்பீர்களா? இந்தப் பேய் உங்களிடம் இருந்து பாவம் வருத்தக் காரர்களைப் பிடிக்கப் போகிறது.!
Post a Comment