6.08.2009

பேய்க் கவிதைகள்

இவை கர்ண கொடுரமான கவிதைகள், துணிவு இருப்பவர்கள் மட்டும் வாசியுங்கள்.

ரத்தக்காட்டேரி

உன் ரத்தத்தை
குடித்த
ரத்தக் காட்டேரி
சொன்னது
சீ ஏமாந்துவிட்டேன்
இது வெறும்
தேன்...


பிரேதம்

இறந்து போன
என் உடலை
பிரேத பரிசோதனை
செய்யும்போது
உள்ளேயிருந்து
எழுந்து வருவாய்
நீ....


ராசி

மரண வீடுகளுக்கு
போகாதே
எழுந்து இருந்து
விடுகினறனவாம்
பிணங்களெல்லாம்...


மூட நம்பிக்கை

கல்லு
அதன் மேல்
என் கழுத்து
``சதக்``
துண்டாகிப்போனது
என்
தலையும் உடம்பும் ...

என்ன செய்ய
ஊர் எல்லையில்
உள்ள பெயர்
தெரியாத சாமிக்கு
மனிதப்பலி
கொடுத்தால்
காதல் நிறைவேருமாமே!


நீ சொர்க்கம்


மோட்சம் கிடைத்த
பின்னும்
நிறைய ஆவிகள்
இங்கேதான்
சுத்திகொண்டிருக்கின்றன...
நீ இருக்கிற
இடத்தைவிட
சொர்க்கமா ?

காதலின் வாசம்

எரிந்து போன
என் சாம்பலையும்
பூசிக்கொள்வார்கள்
அவ்வளவு வாசம்
நம் காதல்
கலந்ததள்ளவோ!


இறுதி ஆசை

தலை நொறுங்கி
மூளை நசுங்கி
குடல் தொங்கி
கைகள் எங்கே
என்று தெரியாமல்
நாடு வீதியில்
அடிபட்டுக் கிடக்கிறேன்...
ஐயோ பிணமென்று
விலகிப்போகிறார்கள்
எல்லோரும்...
என் மனது
சொன்னது
இதயமே இன்னும்
கொஞ்சம் தாக்குப்பிடி
அவள் இந்த
வீதியால்
போகும் நேரம்
நெருங்கி விட்டது...


நடைப்பிணம்

யாரிடமும்
சொல்லிவிடாதே
நான் இறந்து
நீண்ட நாட்கள்
உன்னைப்
பார்ப்பதற்காகத்தான்
சுத்திதிரிகிறேன்...

சுனாமி

நீ கடக்கரை பக்கம்
நிறைய நாளாய்
போகததால்தான்
கடல் உன்னைப்பார்க்க
உன் வீட்டிற்கே
வந்தது..
மனிதர்கள் பாவம்
இனி அடிக்கடி
கடற்கரை பக்கம்
போய் வா!






16 comments:

சென்ஷி said...

ஹைய்யோ! தலைவரே கலக்கிட்டீங்க..

அத்தனையும் முத்துக்கள் :))

எனக்கு இந்த கவுஜ ரொம்ப பிடிச்சு போச்சு..

//இறந்து போன
என் உடலை
பிரேத பரிசோதனை
செய்யும்போது
உள்ளேயிருந்து
எழுந்து வருவாய்
நீ....//

பார்த்து இது தெரியாம எரிச்சு இல்லை அப்படியே புதைச்சுடப்போறாங்க :-))

வாழ்த்துக்கள். இதைப்போல இன்னும் நிறைய்ய எழுதவும் :)))))

நட்புடன் ஜமால் said...

சீ ஏமாந்துவிட்டேன்
இது வெறும்
தேன்...\\

இரசித்-தேன்.



வித்தியாசமான வரிகளில்

காதல்.

anujanya said...

எனக்கு ரத்தக் காட்டேரியும், பிரேதமும் பிடிச்சிருக்கு. என்ன பாக்குறீங்க. அந்த இரண்டு கவிதைகளைச் சொன்னேன். ஸ்ஸப்ப்பா, குளித்து விட்டு தான் மற்ற பதிவுகளுக்குப் போக வேண்டும் :)

அனுஜன்யா

ஆயில்யன் said...

/எரிந்து போன
என் சாம்பலையும்
பூசிக்கொள்வார்கள்
அவ்வளவு வாசம்
நம் காதல்
கலந்ததள்ளவோ!
//

கலக்கல் :)

ஆயில்யன் said...

////இறந்து போன
என் உடலை
பிரேத பரிசோதனை
செய்யும்போது
உள்ளேயிருந்து
எழுந்து வருவாய்
நீ....//

பார்த்து இது தெரியாம எரிச்சு இல்லை அப்படியே புதைச்சுடப்போறாங்க :-))
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய் :))

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள்.

இதைப்போல இன்னும் நிறைய நிறைய்ய டெரரா எழுதவும் :)))))

S.A. நவாஸுதீன் said...

ரத்தக்காட்டேரி

உன் ரத்தத்தை
குடித்த
ரத்தக் காட்டேரி
சொன்னது
சீ ஏமாந்துவிட்டேன்
இது வெறும்
தேன்...

மயாதி, சாப்பாடு, தூக்கம் எல்லாமே கவிதைதானா உங்களுக்கு. கலக்குறீங்க போங்க

S.A. நவாஸுதீன் said...

பிரேதம்

இறந்து போன
என் உடலை
பிரேத பரிசோதனை
செய்யும்போது
உள்ளேயிருந்து
எழுந்து வருவாய்
நீ....


நிஜமாவே டெரர் தான்

S.A. நவாஸுதீன் said...

நீ சொர்க்கம்

மோட்சம் கிடைத்த
பின்னும்
நிறைய ஆவிகள்
இங்கேதான்
சுத்திகொண்டிருக்கின்றன...
நீ இருக்கிற
இடத்தைவிட
சொர்க்கமா ?

எல்லா கவிதையும் வீட்ல இருந்து எழுதுனீங்களா இல்லை இடுகாட்டிலிருந்தா? செம டெரரா இருக்கு

மயாதி said...

சென்ஷி said...
//ஹைய்யோ! தலைவரே கலக்கிட்டீங்க..

அத்தனையும் முத்துக்கள் :))

எனக்கு இந்த கவுஜ ரொம்ப பிடிச்சு போச்சு..

//இறந்து போன
என் உடலை
பிரேத பரிசோதனை
செய்யும்போது
உள்ளேயிருந்து
எழுந்து வருவாய்
நீ....//

பார்த்து இது தெரியாம எரிச்சு இல்லை அப்படியே புதைச்சுடப்போறாங்க :-))

வாழ்த்துக்கள். இதைப்போல இன்னும் நிறைய்ய எழுதவும்//

இன்னுமா ? கடும் டெரரார இருப்பீங்க போல!
நிச்சயமா எழுத முயற்சி செய்கிறேன் நண்பா!
நன்றி

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

சீ ஏமாந்துவிட்டேன்
இது வெறும்
தேன்...\\

இரசித்-தேன்.



வித்தியாசமான வரிகளில்

காதல்.//

இரசித்-தேன்..... என்னமா புடிக்கிறீங்க ?
நன்றி அண்ணா!

மயாதி said...

அனுஜன்யா said...
எனக்கு ரத்தக் காட்டேரியும், பிரேதமும் பிடிச்சிருக்கு. என்ன பாக்குறீங்க. அந்த இரண்டு கவிதைகளைச் சொன்னேன். ஸ்ஸப்ப்பா, குளித்து விட்டு தான் மற்ற பதிவுகளுக்குப் போக வேண்டும் :)

அனுஜன்யா//

நன்றிங்க .....
மீண்டும் (ச)சிந்திப்போம்.

மயாதி said...

ஆயில்யன் said...

//வாழ்த்துக்கள்.

இதைப்போல இன்னும் நிறைய நிறைய்ய டெரரா எழுதவும் :)))))//

நன்றிங்க நண்பரே மீண்டும் (ச)சிந்திப்போம்....

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

//மயாதி, சாப்பாடு, தூக்கம் எல்லாமே கவிதைதானா உங்களுக்கு. கலக்குறீங்க போங்க//

//எல்லா கவிதையும் வீட்ல இருந்து எழுதுனீங்களா இல்லை இடுகாட்டிலிருந்தா? செம டெரரா இருக்கு//


பயம் காட்டேதீங்கப்பா இரவு தனியாக தூங்க வேண்டும்...
நன்றி நண்பரே.

ஆ.சுதா said...

அய்யையோ... எனக்கு பேயின்னாலே பயங்க!!

ஆனாலும் இந்த பேய்ல நிரைய பிடித்திருக்கு

thamizhparavai said...

மயாதி... எல்லாமே கலக்கல்...