பல்கலைக்கழக் இதழுக்கு எழுதியதை விட நான் வேறு எந்த இதழுக்கும் அனுப்பியதே இல்லை. இருந்தாலும் , நான் அனுப்பாமலேயே என் கவிதையை இனங் கண்டு வெளியிட்ட குங்குமத்துக்கு நன்றி .
கீழே இருக்கும் கவிதைக்கு வயசு ஐந்து வருடங்கள். அச்சில் வந்த எனது முதல் கவிதை. பல்கலை கழக வருடாந்த சஞ்சிகையில் வெளிவந்தது. பல அடிகளில் வேறு கவிதைகளின் தாக்கம் இருக்கலாம். இருந்தாலும் அச்சில் வந்த என் முதல் கவிதையை காயப் படுத்த முடியாமல் அப்படியே பதிவிடுகிறேன்.
உனக்கான என் சுவடுகள்
நீ
முறைத்தாலும்
சிரித்துக்
கொள்(ல்)லும்
எனக்குள்
காதல்....
****************
உன்னைத்
தொடர்கிறேன்
தெரிகிறது
சொர்க்கத்தின்
வழி....
*****************
என்
விதி எழுதும்
உன்
விழிகள்...
*****************
விழிமூடியே
நீ
நடக்கலாம்
உன்
வழியெல்லாம்
என்
விழி...
********************
இந்தப்
பெரிய
உலகிலேயே
வாழப்பழகிய
நான்
எப்படி?
உன் சின்ன
இதயத்தில்
மட்டும்
சிக்கிக்கொண்டேன்..
********************
என்
வாழ்க்கை
தவம்
நீதான்
வரம்
*******************
நீயில்லாத
என்
பௌர்ணமிகளில்
கூட...
தொலைந்துவிடும்
நிலவு
******************
நானோ
நடைப்பிணம்
உயிரோ!
உன்னிடம் ...
*****************
உன்
எச்சங்களிலும்
என்
அதிருஷ்ட
மச்சங்கள்
***********************
உன்னைப்போலவே
உன்
மௌனத்திற்கும்
மவுசு
அதிகம்தான்
மறைத்தே
வைத்திருப்பதால்
**********************
என்
தேவை
சிறியது
அது
நீ....
*************************
நிலச் சோறூட்ட
அம்மா
காட்டிய
நிலவாய்
நீயும்
கடைசிவரை
கைக்குகெட்டாமலேயே !
***********************
நான்
இருளில்
நீ
வெளிப்படும்
வரை...
ஒன்றின்
இழப்பில்தான்
இன்னொன்றாம்
அதுதான்
என்னை
இழந்தேன்
உன்னைப்பெற..
*********************
நீ
வந்துவிட்டால்
தரிசனம்
வராவிட்டால்
அசரீரி..
*******************
என் முகவரி
தாங்கிய
கடிதம்
நீ
எப்போது
எனைச்
சேர்வாய்..?
15 comments:
:)
எளிமையான வார்த்தைகள்தான் உங்க சிறப்பு.. ரொம்ப எளிதா வசப்படுற சூழல், கொடுத்த வாக்கியங்கள் எல்லாமே ஈர்க்க வைக்குது.
//நீ
வந்துவிட்டால்
தரிசனம்
வராவிட்டால்
அசரீரி../
கிர்ர்ர்ரடிக்குது :)
எளிமையான வார்த்தைகள்தான் உங்க சிறப்பு.. ரொம்ப எளிதா வசப்படுற சூழல், கொடுத்த வாக்கியங்கள் எல்லாமே ஈர்க்க வைக்குது.//
வாக்கியமா ? ஐயோ நான் கவிதை என்றல்லவா நினைச்சேன் !
ஹா ஹா ஹா .....
நன்றி தல
வாழ்த்துகள் மயாதி.
இந்தப்
பெரிய
உலகிலேயே
வாழப்பழகிய
நான்
எப்படி?
உன் சின்ன
இதயத்தில்
மட்டும்
சிக்கிக்கொண்டேன்..\\
உன் இதயத்தில்
கிடைத்த அளவுக்கு
விசாலமாக
இந்த உலகில்
எனக்கு இடமில்லையே ...
வாழ்த்துக்கள் மயாதி....
கவிதைகள் எல்லாம் சுகமான தாலாட்டாய் தட்டிக் கொடுக்கிறது....
தமிழரசி said...
வாழ்த்துக்கள் மயாதி....
கவிதைகள் எல்லாம் சுகமான தாலாட்டாய் தட்டிக் கொடுக்கிறது....//
அன்போட வாழ்த்துக்கள் தம்பி என்று சொன்னா குறைஞ்சா போகும்..
அச்சச்சோ ! பல்கலைக் கழகக் காலத்திலிருந்து இப்படிக் காதலுக்கு அலைகிறீங்களா? ரொம்பப் பாவம்.
ஜெஸ்வந்தி said...
அச்சச்சோ ! பல்கலைக் கழகக் காலத்திலிருந்து இப்படிக் காதலுக்கு அலைகிறீங்களா? ரொம்பப் பாவம்.//
எப்படித்தான் கண்டு புடிக்குராங்க்களோ !
வாழ்த்துகள்
good
அமிர்தவர்ஷினி அம்மா said...
வாழ்த்துகள்//
நன்றி
தாமதமான வாழ்த்துக்கள் மயாதி...
//
//நீ
வந்துவிட்டால்
தரிசனம்
வராவிட்டால்
அசரீரி..///
நச்...
தமிழ்ப்பறவை said...
தாமதமான வாழ்த்துக்கள் மயாதி...
//
//நீ
வந்துவிட்டால்
தரிசனம்
வராவிட்டால்
அசரீரி..///
நச்...//
நன்றி நண்பா !
//நானோ
நடைப்பிணம்
உயிரோ!
உன்னிடம் ...//
வாரே வா........சூப்பர்.......
ஷோபிகண்ணு said...
//நானோ
நடைப்பிணம்
உயிரோ!
உன்னிடம் ...//
வாரே வா........சூப்பர்.......
//
நன்றி நண்பரே!
Post a Comment