6.29.2009

வந்து பாருங்கள் மலர்ந்திருக்கிறது காதல்


நீ வருவாய்
என்ற
எதிர்பார்ப்பிலேயே
தூங்க மறுக்கின்றன
என் கனவுகள்


என்
உயிருக்குப்
பதிலாய்
உன்னை வைத்தேன்...
நீ பத்திரமாய்
இருக்கிறாய்
என் உயிர்
அலைந்து
திரிகிறது ....
உன்
பின்னால்


என் மனதை
உடைத்து
தப்பிப் போகலாம்
என்று நினைக்காதே
மனதில் அல்ல
ரத்தத்தில்
கலந்து
உடம்பு முழுக்க
ஓட
வைத்திருக்கிறேன்
காதலை....






26 comments:

சென்ஷி said...

கண்டுபிடிச்சுட்டேன். நீங்க இளைய தளபதி “டாக்டர் விஜய்” தானே..

//தோற்பதற்கும்
வெல்வதற்கும்
காதலொன்றும்
போட்டியில்லை...
//

பூவே உனக்காக படத்துல டாக்டர் விஜய் இந்த வசனம் பேசினதை கேட்டிருக்கேனே :)))

சென்ஷி said...

:-(((

முதல் கவிதை பிடிச்சுருந்தது.

”கனவுகள் தூங்க மறுக்கின்றன” அந்த வரிகள் கலக்கல்!

ரெண்டாவது கமெண்டுல பாராட்டலாமுன்னு பார்த்தா அதை மாத்திரம் தூக்கிட்டீங்க.. அடுத்த பதிவுக்காக ரிசர்வேசன்ல இருக்குதா??

மயாதி said...

சென்ஷி said...

கண்டுபிடிச்சுட்டேன். நீங்க இளைய தளபதி “டாக்டர் விஜய்” தானே..

//தோற்பதற்கும்
வெல்வதற்கும்
காதலொன்றும்
போட்டியில்லை...
//

பூவே உனக்காக படத்துல டாக்டர் விஜய் இந்த வசனம் பேசினதை கேட்டிருக்கேனே :)))//

சும்மா இரு தல தளபதி ரசிகர்கள் எதிர்ப்ப்க் கொடி தூக்கப் போறாங்க...
என்றாலும் விஜய்க்கு அவசரம் பாருங்க, எனக்கு முன்னமே பேசிட்டாரா?
அப்பா அளிச்சிடுவம்.

நன்றி

மயாதி said...

சென்ஷி said...

:-(((

முதல் கவிதை பிடிச்சுருந்தது.

”கனவுகள் தூங்க மறுக்கின்றன” அந்த வரிகள் கலக்கல்!

ரெண்டாவது கமெண்டுல பாராட்டலாமுன்னு பார்த்தா அதை மாத்திரம் தூக்கிட்டீங்க.. அடுத்த பதிவுக்காக ரிசர்வேசன்ல இருக்குதா??//

இப்ப ஒகேவா !

சென்ஷி said...

//நீ வருவாய்
என்ற
எதிர்பார்ப்பிலேயே
தூங்க மறுக்கின்றன
என் கனவுகள்//

:))))

அது..............

அசத்தல்!!!!

இளைய கவி said...

//என்
உயிருக்குப்
பதிலாய்
உன்னை வைத்தேன்...
நீ பத்திரமாய்
இருக்கிறாய்
என் உயிர்
அலைந்து
திரிகிறது ....
உன்
பின்னால்//

சூப்பரா இருக்கு தல... கலக்குறீங்க நான் கழண்டுகிறேன் பாஸ்

நாணல் said...

moonru kavithaiyum asaththal... irandaavadhu romba pidichirukku... malarndha kaadhalukku vaazthukkal ;)

மயாதி said...

இளைய கவி said...

//என்
உயிருக்குப்
பதிலாய்
உன்னை வைத்தேன்...
நீ பத்திரமாய்
இருக்கிறாய்
என் உயிர்
அலைந்து
திரிகிறது ....
உன்
பின்னால்//

சூப்பரா இருக்கு தல... கலக்குறீங்க நான் கழண்டுகிறேன் பாஸ்//

வாங்க கவி! கழண்டத கவனமா ஒட்டிக் கொள்ளுங்க..
ஹா ஹா...

நன்றி

மயாதி said...

நாணல் said...

moonru kavithaiyum asaththal... irandaavadhu romba pidichirukku... malarndha kaadhalukku vaazthukkal ;)

June 29, 2009 9:15 பம்//

சும்மா விளையாட்டா ஒரு தலைப்பு வைத்தால் , முடிவே பண்ணீட்டிங்களா ?
நன்றி நாணல்..

மயாதி said...

நாணல் said...

moonru kavithaiyum asaththal... irandaavadhu romba pidichirukku... malarndha kaadhalukku vaazthukkal ;)

June 29, 2009 9:15 பம்//

சும்மா விளையாட்டா ஒரு தலைப்பு வைத்தால் , முடிவே பண்ணீட்டிங்களா ?
நன்றி நாணல்..

நட்புடன் ஜமால் said...

ரத்தத்தில்
கலந்து
உடம்பு முழுக்க
ஓட
வைத்திருக்கிறேன்
காதலை....\\

இது மிக அருமை ...

Anonymous said...

உயிரில் கலந்த உறவு உதிரத்தில் கலந்தது வியப்பில்லை... நல்லாயிருக்கு தம்பி....

S.A. நவாஸுதீன் said...

நீ வருவாய்
என்ற
எதிர்பார்ப்பிலேயே
தூங்க மறுக்கின்றன
என் கனவுகள்

மனதில் அல்ல
ரத்தத்தில்
கலந்து
உடம்பு முழுக்க
ஓட
வைத்திருக்கிறேன்
காதலை....

இது ரெண்டும் ரொம்ப பிடிச்சிருக்கு

ஷாகுல் said...

//ரத்தத்தில்
கலந்து
உடம்பு முழுக்க
ஓட
வைத்திருக்கிறேன்
காதலை....\\

கிட்னி பிரிச்சி வெளிய அனுப்பிருசினா என்ன பன்னுவீங்க?

மற்றபடி வழக்கம் போல் கவிதை ஜுப்பர்.

யாழினி said...

வரிகள் யாவும் அற்புதம் மயாதி! யார் அந்த அதிஷ்ட தேவதையோ...?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கேட்டபடி வந்து பார்த்தேன். காதல் அந்த மாதிரி மலர்ந்துதான் இருக்கிறது.
உயிரை அலைய விட்டிட்டு, காதலியை அந்த இடத்தில் வைச்சிட்டு, ஓட நினைக்காதே, முடியாது என்று சவால் விட்டிட்டு..... ....அமர்க்களம் தான் ...

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

ரத்தத்தில்
கலந்து
உடம்பு முழுக்க
ஓட
வைத்திருக்கிறேன்
காதலை....\\

இது மிக அருமை ...//

நன்றிங்கோ அண்ணா !

மயாதி said...

தமிழரசி said...

உயிரில் கலந்த உறவு உதிரத்தில் கலந்தது வியப்பில்லை... நல்லாயிருக்கு தம்பி....//

நன்றி அக்கா!

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

நீ வருவாய்
என்ற
எதிர்பார்ப்பிலேயே
தூங்க மறுக்கின்றன
என் கனவுகள்

மனதில் அல்ல
ரத்தத்தில்
கலந்து
உடம்பு முழுக்க
ஓட
வைத்திருக்கிறேன்
காதலை....

இது ரெண்டும் ரொம்ப பிடிச்சிருக்கு//

நன்றி அண்ணா

மயாதி said...

ஷாகுல் said...

//ரத்தத்தில்
கலந்து
உடம்பு முழுக்க
ஓட
வைத்திருக்கிறேன்
காதலை....\\

கிட்னி பிரிச்சி வெளிய அனுப்பிருசினா என்ன பன்னுவீங்க?

மற்றபடி வழக்கம் போல் கவிதை ஜுப்பர்.

June 29, 2009 11:31 பம்//

இப்படி அறிவுத்தனமா கேள்வி கேட்டு மாட்டி விட்டீங்களே நண்பரே?
நன்றி

மயாதி said...

யாழினி said...

வரிகள் யாவும் அற்புதம் மயாதி! யார் அந்த அதிஷ்ட தேவதையோ...?//

நன்றி யாழினி
அப்படியொரு தேவதை இருந்தால் நான் கவிதைகளை என் இங்கே சொல்லப்போறன், அங்கேயல்லவா சொல்வேன் !

மயாதி said...

ஜெஸ்வந்தி said...

கேட்டபடி வந்து பார்த்தேன். காதல் அந்த மாதிரி மலர்ந்துதான் இருக்கிறது.
உயிரை அலைய விட்டிட்டு, காதலியை அந்த இடத்தில் வைச்சிட்டு, ஓட நினைக்காதே, முடியாது என்று சவால் விட்டிட்டு..... ....அமர்க்களம் தான் ...

June 30, 2009 2:54 அம//

காலையில் மலர்ந்தது மாலையில் வாடிப் போச்சு ...
ஹா ஹா ஹ...
நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

அழகா காதல் கொண்டிருக்கிறீர்கள்

வாழ்த்துக்கள்

Sinthu said...

நன்றாக இருக்கிறதே,,., கற்பனையா, இல்ல.?

மயாதி said...

பிரியமுடன்.........வசந்த் said...

அழகா காதல் கொண்டிருக்கிறீர்கள்

வாழ்த்துக்கள்//

நன்றி வசந்த்

மயாதி said...

Sinthu said...

நன்றாக இருக்கிறதே,,., கற்பனையா, இல்ல.?//

நன்றி சிந்து.

யாவும் கற்பனை...