6.07.2009

இப்படிக்கு காதல் பேசும்...

சில நாட்களுக்கு முன்பு என் கவிதைகளுக்கு பொருத்தமான தலைப்பு தந்து உதவும் படி கேட்டிருந்தேன்.
அதற்கு நட்புடன் ஜமால், S.A. நவாஸுதீன் , பிரியமுடன்.........வசந்த் , தமிழ்பபிரியா, பாலா , அபுஅஃப்ஸர். ..
ஆகிய நண்பர்கள் அழகான தலைப்பு கொடுத்து கவிதைகளை மெருகேற்றி இருந்தார்கள். உதவும் நண்பர்களுக்கு கவிதை ஒன்றை பரிசளிப்பேன் என்று கூறியிருந்தேன் .கொஞ்சம் தாமதமானாலும் சொன்னபடி அவர்களுக்கு இந்த கவிதைகளை பரிசளிக்கிறேன்...

பிடிக்கவிட்டால் பரவாயில்லை குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு சொல்லுங்கள் , உங்களுக்கு பிடிக்கு வரை தந்து கொண்டே இருப்பேன்...


இனி காதல் பேசட்டுமே ..,,,

நீ சூடிக்கொண்ட
வெள்ளை ரோஜா
வெட்கப்பட்டு
சிவப்பு ரோஜா
ஆகிப்போனது

நதிக்கரைப்
பக்கம் போகாதே
பயிர்கள்
வாடிப்போகின்றன...
ஓட மறுக்கிறது
உன்னைப்பார்த்த
நதி



குரைக்கிற நாய்
கடிக்காது!
உன்னைப் பார்த்தால்
கவிதை எழுதும்


செத்தால் அழுவார்கள்
நீ அழுவதால்
நான் சாகிறேன்...


உன்னைப் பார்க்க
வரும் நாட்களில்
மாமிசம்
சாப்பிடுவதேயில்லை!
கோயிலுக்குப்
போகும்போது
புனிதமாகத்தானே
போகவேண்டும்


உன் பெயரைச்
சொல்லி
அர்ச்சனை செய்தேன்
அர்ச்சிக்கப்படது
சாமி


எதற்காக நீ
அவசரப்படுகிறாய்
வேலைகள் எல்லாம்
உன்னை
பார்பாதற்காகவேனும்
காத்திருக்கும்..


காதலிக்கவே
மாட்டேன் என்று
அடம் பிடிக்கிறாய்
நியாயம்தான்
சாமியும்
மனிதர்களும்தான்
காதலித்தாய்
வரலாறு உண்டு
தேவதைகளுக்கு
இல்லை...

18 comments:

நட்புடன் ஜமால் said...

நன்றிங்கோ

நட்புடன் ஜமால் said...

ஓட மறுக்கிறது
உன்னைப்பார்த்த
நதி
\\

ஓட மறுக்கிறது
ஓடை

நட்புடன் ஜமால் said...

செத்தால் அழுவார்கள்
நீ அழுவதால்
நான் சாகிறேன்...\\

என் இறப்பு
உன்னை அழச்செய்யுமே
என்று அழுகிறேன்

மயாதி said...

Blogger நட்புடன் ஜமால் said...

செத்தால் அழுவார்கள்
நீ அழுவதால்
நான் சாகிறேன்...\\

என் இறப்பு
உன்னை அழச்செய்யுமே
என்று அழுகிறேன்


ஓட மறுக்கிறது
உன்னைப்பார்த்த
நதி
\\

ஓட மறுக்கிறது
ஓடை//




நன்றி அண்ணா ! உங்கள் மாற்றம் இன்னும் அழகாக இருக்கிறது

நட்புடன் ஜமால் said...

மாற்றமெல்லாம் இல்லைப்பா

அம்பூட்டு தெரியாதுப்பா ...


அதை படிக்கையில் தோன்றியது

அதைத்தான் சொன்னேன் ...

மயாதி said...

//
என் இறப்பு
உன்னை அழச்செய்யுமே
என்று அழுகிறேன்//


இந்த வரிகள் போதும் உங்கள் திறமையை சொல்ல...

எண்டாலும் உங்களுக்கு அவையடக்கம் ரொம்ப ஓவர் போங்கோ.

S.A. நவாஸுதீன் said...

அற்புதமான பரிசு தந்திருக்கீங்க. ரொம்ப நன்றி மயாதி

S.A. நவாஸுதீன் said...

நதிக்கரைப்
பக்கம் போகாதே
பயிர்கள்
வாடிப்போகின்றன...
ஓட மறுக்கிறது
உன்னைப்பார்த்த
நதி

நங்கையின் மதி முகம் கண்டு
நதியும் மதி மயங்கி
தன் ஜதியை மறந்து
அவளே கதியென்று கிடந்தால்
பயிர்களின் விதி மாறி விடும்.
அதானே. அதேதான் (சும்மா தமாஷு)

S.A. நவாஸுதீன் said...

செத்தால் அழுவார்கள்
நீ அழுவதால்
நான் சாகிறேன்...

சூப்பர்

அப்துல்மாலிக் said...

நல்ல திறனான பரிசுதான்

அனைத்து வரிகளையும் ரசித்தேன்

S.A. நவாஸுதீன் said...

உன்னைப் பார்க்க
வரும் நாட்களில்
மாமிசம்
சாப்பிடுவதேயில்லை!
கோயிலுக்குப்
போகும்போது
புனிதமாகத்தானே
போகவேண்டும்.

மயாதி! மாமிசம் சாப்பிடுவதால் புனிதத்தன்மை இழந்து விடுவோமா? எப்படி? புரியவில்லை.

எது எப்படியோ "கவிதைக்கு பொய் அழகு" வரையில் சரிதான்.

S.A. நவாஸுதீன் said...

எதற்காக நீ
அவசரப்படுகிறாய்
வேலைகள் எல்லாம்
உன்னை
பார்பாதற்காகவேனும்
காத்திருக்கும்..

இது தூள்

FunScribbler said...

யாருப்பா அங்க! கவிஞருக்கு ஒரு தங்க சங்கிலிய போடுங்க!
கவிதைக்கு பரிசு கொடுத்தாகனும்ல!!

வாழ்த்துகள். ஒவ்வொன்றும் அருமை!

//நீ சூடிக்கொண்ட
வெள்ளை ரோஜா
வெட்கப்பட்டு
சிவப்பு ரோஜா
ஆகிப்போனது//

சூப்பர் சூப்பர்!

//செத்தால் அழுவார்கள்
நீ அழுவதால்
நான் சாகிறேன்...//

அட்ராசக்கை அட்ராசக்கை!!:)

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...
//நங்கையின் மதி முகம் கண்டு
நதியும் மதி மயங்கி
தன் ஜதியை மறந்து
அவளே கதியென்று கிடந்தால்
பயிர்களின் விதி மாறி விடும்.
அதானே. அதேதான் (சும்மா தமாஷு)//

என் கவிதையை விட இது மிதவும் அழகாக இருக்கிறது..
உங்களுடைய கவிதையா நண்பரே?
நன்றிகள்

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

//உன்னைப் பார்க்க
வரும் நாட்களில்
மாமிசம்
சாப்பிடுவதேயில்லை!
கோயிலுக்குப்
போகும்போது
புனிதமாகத்தானே
போகவேண்டும்.

மயாதி! மாமிசம் சாப்பிடுவதால் புனிதத்தன்மை இழந்து விடுவோமா? எப்படி? புரியவில்லை.

எது எப்படியோ "கவிதைக்கு பொய் அழகு" வரையில் சரிதான்.//


இந்துக்கள் கோயிலுக்கு போகும் போது மாமிசம் சாப்பிடாமல் போவதுதான் வழக்கம் , நானும் ஒரு இந்து என்பதால் இப்படி எழுதித் தொலைத்து விட்டேன்..!
மாமிசம் சாப்பிடுவதால் புனிதம் கெடுமா என்று கேட்டு இருந்தீர்கள். இந்தக் கேள்விக்கு நான் தனிப்பட்ட முறையில் கருத்து சொல்லி யாருடைய ( எந்த மதத்தவரின்) கொள்கையையும் நோகடிக்க விரும்பவில்லை நண்பரே...
ஆனால் இந்துக்கள் மாமிசம் சாப்பிட்டாலும் , அது சாப்பிடுவதால் புனிதம் கெடும் என்று நம்புகிறவர்கள்...அது அந்த மதத்திற்குரிய தனிப்பட்ட கொள்கை , நானும் அந்த மதத்தவன் என்பதால் அந்தக் கொள்கையின் அடிப்படையில் எழுதிவிட்டேன் , மற்ற மதம் சார்ந்தவர்களும் வாசிப்பர்கள் என்பதை யோசிக்காமல்..
மன்னித்துவிடுங்கள் நண்பரே!

மயாதி said...

Thamizhmaangani said...

யாருப்பா அங்க! கவிஞருக்கு ஒரு தங்க சங்கிலிய போடுங்க!
கவிதைக்கு பரிசு கொடுத்தாகனும்ல!!

வாழ்த்துகள். ஒவ்வொன்றும் அருமை!

//நீ சூடிக்கொண்ட
வெள்ளை ரோஜா
வெட்கப்பட்டு
சிவப்பு ரோஜா
ஆகிப்போனது//

சூப்பர் சூப்பர்!

//செத்தால் அழுவார்கள்
நீ அழுவதால்
நான் சாகிறேன்...//

அட்ராசக்கை அட்ராசக்கை!!:)//


கொஞ்சம் பெரிய சங்கிலியா போடுங்கப்பா !!!!!!!!!!!
நன்றி அன்பரே, நண்பரே, பன்பரே

மயாதி said...

நன்றி..

அபுஅஃப்ஸர்
பிரியமுடன்.........வசந்த்