6.21.2009

வாழ்க்கை நிறையக் கவிதை (குங்குமத்தில் இடம் பெற்றதன் தொடர்ச்சி)


குங்குமத்தில் இடம் பெற்ற என் வாழ்க்கை நிறைய கவிதை என்ற தலைப்பில் தொடர்ந்து நிறையக் கவிதைஎழுதலாம் என்று தோன்றிய எண்ணத்தின் முதல் படி இந்த வரிகள். முற்றுமுழுதாக நிஜங்களை மட்டுமே இந்த தொடர் பதிவில் இட நினைப்பதால்வரிகளில் குறையும் கவித்தன்மைக்கு மன்னித்தருள்க.


படி அளத்தல்

எல்லாருக்குமாய்
ஓடி ஆடி
வேலை செய்யும்
எடுபிடிக்கே
எல்லோரையும் விட
குறைவாய்ச் சம்பளம்


மனிதாபிமானம்

ஒருவனை பஸ்
அடித்து விட்டதாய்
சொல்லி
பஸ் மீது
கல்லெறியத்
தொடங்கினார்கள்...
அடிபட்டு விழுந்து
கிடந்தவன் மீதும்
விழுந்தன..
சில கற்கள்


அக்கறை

ஸ்கேன் செய்து
முடிந்தவுடன்
குழந்தை நலமா
என்று கேட்பவர்களை
விட...
ஆண் குழந்தையா
பெண் குழந்தையா
டாக்டர் என்று
கேட்பவர்களே
அதிகம்..

7 comments:

thamizhparavai said...

மனிதாபிமானம் நல்லா இருந்தது.

ப்ரியமுடன் வசந்த் said...

தொடரட்டும் குறிப்புகள்

அன்புடன் அருணா said...

முதல் படியே சூப்பர்...!!!

சென்ஷி said...

முதலிரண்டு கவிதைகள் அசத்தல்! மூன்றாவது பரவாயில்லைன்னு தான் சொல்ல தோணுது!

S.A. நவாஸுதீன் said...

நல்ல முயற்சி, தொடர்ந்து எழுதுங்கள்

Anonymous said...

பிறர் வலியையும் தேடி வரைந்திருக்கிறாய்...தன்னலமில்லாத பொது நலம்....

தமிழ் said...

அருமை