6.16.2009

உங்கள் நெற்றிக்கண் திறக்கட்டும் - ஒரு வாக்கெடுப்பு


நெற்றிக்கண் திறக்கட்டும்


மனம்
வரைவிலக்கணத்திற்கு
அப்பாற்பட்டது...

***************
முட்டாள்
மனிதர்கள்
மனதை
உடலில்
தேடுகிறார்கள்...

***************
மனம்
உணர்வில்
கலந்தது
கடவுளைப்போல...

இதை
வெற்றுக் கண்ணால்
அல்ல
நெற்றிக் கண்ணாலே
பார்க்கலாம்

******************
உங்களுக்குள்ளும்
ஒரு
நெற்றிக்கண்
உங்கள்
பகுத்தறிவு...

******************
உங்கள்
நெற்றிக்கண்
நக்கீரன் போல
நிறைய
நல்லவர்களை
வெளிக்கொண்டு
வரட்டும்...
தவறுகளை
சுட்டெரிக்கட்டும்...

******************
பகுத்தறிவு
நம்மளை
மிருகங்களிடம்
இருந்து
வேறுபடுத்துவதல்ல
நாம்
மீண்டும்
மிருகமாகி
விடாமல்
தடுப்பது...

*****************
கடவுள் இல்லை
என்பதைவிட
மனிதர்கள்
தேடும் இடத்தில்
கடவுள்
இல்லை என்று
சொல்லட்டும்
உங்கள்
பகுத்தறிவு...

*****************




கடவுளை
நம்பித்தான்
உயிர் வாழ்கிறன
நிறைய
உயிர்கள்...
பகுத்தறிவால்
அவற்றை
கொன்று விடாதீர்கள்...

அவர்களுக்கு
கடவுளை
கொஞ்சம்
காட்டுங்கள்
உங்கள்
கருணை
வடிவில்...


பி.கு- இது எனது தனிப்பட்ட கொள்கை.இதை எத்தனை பேர் எதிர்க்கிறார்கள் என்று பார்க்க ஆவலாக உள்ளேன், தயவு செய்து வெறுப்பவர்கள் எதிராகவும், ஒத்துக் கொள்பவர்கள் சார்பாகவும் கொஞ்சம் தலைப்புக்கு மேலே சென்று வாக்களித்துச் செல்லுங்கள். பார்ப்போம் எத்தனை பேர் கடவுளை கல்லில் மட்டும் பார்க்கிறார்கள், எத்தனை பேர் கருணையிலும் பார்க்கிறார்கள் என்று...

8 comments:

பூங்குழலி said...

கடவுள் இல்லை
என்பதைவிட
மனிதர்கள்
தேடும் இடத்தில்
கடவுள்
இல்லை என்று
சொல்லட்டும்
உங்கள்
பகுத்தறிவு

சரியாக சொன்னீர்கள்

தமிழ் said...

/கடவுளை
கொஞ்சம்
காட்டுங்கள்
உங்கள்
கருணை
வடிவில்...//

அருமை

சென்ஷி said...

//அவர்களுக்கு
கடவுளை
கொஞ்சம்
காட்டுங்கள்
உங்கள்
கருணை
வடிவில்...//

:))

நல்லாயிருக்குங்க!

மயாதி said...

பூங்குழலி said...

கடவுள் இல்லை
என்பதைவிட
மனிதர்கள்
தேடும் இடத்தில்
கடவுள்
இல்லை என்று
சொல்லட்டும்
உங்கள்
பகுத்தறிவு

சரியாக சொன்னீர்கள்//

நன்றி..

மயாதி said...

திகழ்மிளிர் said...

/கடவுளை
கொஞ்சம்
காட்டுங்கள்
உங்கள்
கருணை
வடிவில்...//

அருமை//

நன்றி நண்பா

மயாதி said...

சென்ஷி said...

//அவர்களுக்கு
கடவுளை
கொஞ்சம்
காட்டுங்கள்
உங்கள்
கருணை
வடிவில்...//

:))

நல்லாயிருக்குங்க!//

நன்றி தல

தமிழிச்சி said...

உண்மையான வார்த்தைகள். கடவுள் கோவிலிலோ சிலையிலோ இல்லை . நம்மிடையே உலாவுகிறார் என்று சொல்லுங்கோ. அற்புதம்!

தீப்பெட்டி said...

//தயவு செய்து வெறுப்பவர்கள் எதிராகவும், ஒத்துக் கொள்பவர்கள் சார்பாகவும் கொஞ்சம் தலைப்புக்கு மேலே சென்று வாக்களித்துச் செல்லுங்கள். பார்ப்போம் எத்தனை பேர் கடவுளை கல்லில் மட்டும் பார்க்கிறார்கள், எத்தனை பேர் கருணையிலும் பார்க்கிறார்கள் என்று...//

ஓட்டு வாங்குறதுக்கு இப்படியும் ஒரு வழியிருக்கா!

நானும் மேல்நோக்கிய ஓட்டு போட்டுட்டேன்.. (ஏன்னா கடவுள் மேலதான இருக்கார்)
;)