இந்த தலைப்பைப் பார்த்து ஆத்திரத்துடனா உள்ளே வந்தீர்கள், அப்படியே வாசித்த பிறகும் இதே ஆத்திரம் இருந்தால் திட்டி விட்டுப் போங்கள்.
நான் சொன்னது அவர் வாழ்க்கையில் விட்ட தவறுகளையோ எழுத்துக்களில் விட்ட தவறுகளையோ பற்றியல்ல. அதை சொல்லும் அளவுக்கு எனக்கு தகுதியும் அறிவும் இல்லை. ஆனால் அவர் செய்த தவறுகளை பட்டியல் போட்டு இந்த உலகத்துக்கு சொல்லிவிட்டு போனதையே தவறு என்கிறேன்.
நீ விளக்கம் இல்லாதவன் அவர் சொன்னதை சரியாக புரிந்து கொள்ளாததால் இப்படிச் சொல்கிறாய் என்கிறீர்களா?
இல்லை, நான் சரியாகத்தான் புரிந்து கொண்டேன் . உண்மையில் அவர் தவறுகளை பட்டியல் இடவில்லை, தன் தவறுகள் தன்னை எப்படி பாதித்தன, அவற்றை மீறி அவர் எப்படி வெற்றி பெற்றார் என்பதே அவர் சொல்ல எண்ணியது.
இதை நானும் நீங்களும் சரியாக புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் எல்லோரும் அப்படியா புரிந்து கொண்டிருக்கிறார்கள்?
நான் ஒரு நோயாளியைப் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது, அவர் குடித்தே தன் ஈரலை கருக்கிக் கொண்டவர். சாராயம் மனித உடலின் ஏராளமான பாகங்களை பாதித்தாலும், அது பிரதானமாக பாதிப்பது ஈரலை.
ஈரல் பதிப்பு மூன்று கட்டங்களின் ஊடாக நடைபெறுகிறது.
ஆரம்பத்தில் கொழுப்புப் படித்தல் (fatty change) என்ற பாதிப்பும் பிறகு ஈரல் அழர்ச்சி (hepatitis)என்ற பாதிப்பும் இறுதியாக சிரோசிஸ்என்ற வகையிலும் பாதிப்பு ஏற்படுகிறது
இங்கே முதல் இரண்டும் அதாவது கொழுப்புப் படித்தல் மற்றும் ஈரல் அழர்ச்சி என்பவை இருக்கும் நிலையில் ஒருவர் குடிப்பழக்கத்தை விட்டு விட்டால் அவரின் ஈரல் பழைய நிலையை அடைந்து சுகமாகலாம். ஆனால் அது சிரோசிஸ் என்ற நிலையை அடைந்தால் ஈரல் பழைய நிலைக்குத் திரும்புவது சாத்தியமற்றது.
சிரோசிஸ் இருப்பவருக்கு வாழ் நாள் என்னத்தொடங்கி விட்டது என்றே அர்த்தம் , ஆனாலும் அவர் எத்தனை காலங்கள் அந்த நோயிடுன் உயிர் வாழ்வது என்பது அவர் குடியை விட்டாரா என்பதிலேயே தங்கி உள்ளது.
அதாவது சிரோசிஸ் ஏற்பட்ட ஈரல் மேலும் பாதிக்கப்பட்டு முழுவதுமாக செயற்படாமல் போய் மரணம் ஏற்படுவதை பிற்போட மருந்துகளை விட , அந்த நபர் குடிப்பழக்கத்தை விடுவதே முக்கியமானது.
நான் சந்தித்த அந்த நபர் சிரோசிஸ் என்ற நிலையிலேயே இருந்தார். அதனால் நான் அவருக்கு குடியை நிற்பாட்ட வேண்டிய அவசியத்தைச் எடுத்துச் சொன்னேன். அவரோ மிகச் சாதாரணமாக ` என்ன தம்பி கண்ணதாசன் குடிக்காத குடியா , கட்டாத கலியாணத்தை நான் செய்து போட்டன்? சாராயத்துக்குள்ள கொஞ்சம் இஞ்சி போட்டுக் குடிச்ச எல்லாம் சரியாகப் போகும்` என்றார்.
பாருங்கள் கண்ணதாசன் சமூகத்தை திருத்த எண்ணி சொல்லியவை எப்படி பாழலடிக்கப் படுகின்றன.இறுதி வரை அவர் குடியை நிறுத்தவே இல்லை, இந்நேரம் அனேகமாக அவர் இறந்திருக்கக் கூடும்.
கண்ணதாசன் இறந்த வருடம்தான் என் பிறப்பும். எனவே எனக்கு அவர் காலத்துக்கு முன்பு இவ்வாறன சோசியல் (social drinking) குடிப்பழக்கம் இந்தளவுக்கு எம் சமூகத்தில் இருந்ததா என்று தெரியாது. இருந்து இருந்தாலும் அப்போது குடிக்கும் எவரும் நான் குடிகாரன் என்று வெளியில் தம்பட்டம் அடிக்கும் போது, உண்மையைச் சொல்லும் உத்தமராகவும் போற்றப் பட்டு இருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
ஆனால் கண்ணதாசன் தன் வெட்கத்தை மறைத்து சமூகத்தைத் திருத்த வேண்டும் என்று வெளிக்காட்டிய கருத்துக்கள், சமூகத்தை திருத்தியதோடு மட்டும் நிற்கவில்லை, நிறையப் பேரை அந்த தப்புக்களையும் செய்யும் நிலைக்கு கொண்டு விட்டும் இருக்கின்றன. இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை.
கண்ணதாசனே எவ்வளவு பெரிய குடிகாரன் , அவர் சாதிக்காததா என்று குடிக்கத்தொடங்கிய எவரும் கடைசியில் கண்ணதாசனைப் போல் ஆகவே இல்லை.
ஒருவர் எவ்வளவு குடிக்கலாம் , என்பதும் குடிக்கத்தொடங்கிய ஒருவர் அதற்கு அடிமை ஆகுவிடுவாரா அல்லது இடையில் குடியை விட்டு விடுவாரா என்பது அவரின் உடலில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று .
அல்ககோல் தீகைட்ரநேஸ் (alcohol dehyrdranase ) என்கிற நோதியம்தான் ௯0 சாராயாத்தை சமிபாடு அடையச் செய்து உடலில் இருந்து வெளியேற்றுவது, இந்த நொதியம் அதிகம் உள்ளவர்கள் அதிகம் குடிக்கும் போதே அவர்கள் எதிர்பார்க்கும் போதை அடைவார்கள் ,நொதியம் குறைவாக இருப்பவர்கள் குறைவாகத்தான் குடிக்க முடியும் .
மற்றும் தொடர்ச்சியாக குடிக்கும் ஒருவரில் இந்த நொதியம் பழக்கப் பட்டு போவதால் நாளுக்கு நாள் அவர் குடிக்கும் அளவும் அதிகரித்துக் கொண்டே போகும்.
அதைப் போல் ஒருவர் மதுவுக்கு அடிமை ஆவதும் , அதை இடையில் விட்டு விடுவதும் நம் மனத்துக்கு அப்பால் பரம்பரை(gene) அலகுகளாலும் தீர்மானிக்கப் படுகிறது. ஆகவே கண்ணதாசன் குடிக்காத குடியா என்று சொல்லி அவரை உதாரணமாக சொல்லி குடிக்கத் தொடங்க்குபவர்களே!
கவனம் உங்கள் பரம்பரை (gene) அழகின் படி நீங்கள் குடிப் பழக்கத்துக்கு அடிமை ஆகும் தன்மை கொண்ட பரம்பரை அழகைக் கொண்டவர் எனில் உங்கலாளால் கடைசி வரை கண்ணதாசன் போல் மீண்டு வர முடியாமலேயே போய் விடலாம்.
அதை போல் சும்மா ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து பார் , எதையும் அனுபவித்து வைக்க வேண்டும் என்று யாரையும் குடிக்கத் தூண்டாதீர்கள். பிறகு உங்களால் கூட நிறுத்த முடியாத குடி காரர்கள் ஆகிப் போகலாம் அவர்கள்.
சரி நாம் தலைப்புக்கு வருவோம் , பாரதி என்ற மகா கவி பாடப் புத்தகங்கள் மூலமாவது தலைமுறை தாண்டி ஞாபகப் படுத்தப்படுவான். ஆனால் கண்ணதாசனைப் பற்றி நம் இந்த தலை முறையிடமே கேட்டுப் பாருங்கள் , அர்த்தமுள்ள இந்து மதத்தில் உள்ள ஒரு கருத்துக் கூட அவர்களுக்கு தெரிந்து இருக்காது ஆனால் கண்ணதாசன் என்ற புகழ் பெற்றவர் என்னென்ன தவறுகள் செய்து இருக்கிறார் என்று நிச்சயமாய் சொல்வார்கள்.
இதற்கு காரணம் யார் ?
கண்ணதாசனின் கருத்துக்களை தான் தப்பு செய்வதற்காக உபயோகப்படுத்தும் அறை குறை அறிவு வாதிகள்.
சமூகம் பிழையான வழியில் அவர் கருத்துக்களை பயன் படுத்த காரணம் யார்.
முதல் காரணம் எழுத்தாளர்கள். முக்கியமாக இவர்கள் எழுதும் எழுத்தே இன்று நான் குடிகாரன் என்று சொல்பவனையும், மற்றும் பல கெட்ட வேலை செய்கிறேன் என்று சொல்வதையும் பெரிய உத்தம குணமாக ஏற்றுக் கொள்ளும் கீழ்த் தரமான நிலைக்கு நம் சமூகத்தை கொண்டு விட்டு இருக்கிறது.
கண்ணதாசனின் துறை சார்ந்த சினிமாப் பாடலாசிரியர்கள் கூட அவரை அதிகம் பயன் படுத்துவது சாராயக் கடையில் பாடப் படும் பாடல்களில் தானே !
கண்ணதாசன் அவரின் திறமை மூலம் தன் அனுபவங்களோடு கலக்காமல் வேறு விதமாகவும் சொல்லி இருக்கலாம் ஆனாலும் , அனுபவம் கலந்து சொல்லும் போது சமூகத்தை அதிகம் திருத்தும் என்று அவர் நம்பியது இன்று அவரையே சாராயம் கதியிலும் , பாலான விடயங்கள் நடக்கும் இடங்களிலும் உதாரண புருஷராக காட்டி பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளது.
இந்த கட்டுரையை வாசிப்பவர்களே நீங்களும் முடிந்தவரை சமூகத்துக்கு உணர்த்துங்கள், கண்ணதாசன் தான் விட்ட தவறுகளை பகிர்ந்து கொண்டது நீங்களும் அதே தவறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல என்று.
சாராயக் கடை பாடல்களுக்கும், விபச்சார விடுதிப் பாடல்களிலும் கண்ணதாசன் பெயர் பயன் படுத்துவதை இனியாவது இந்த திரை உலகம் விடுமா????????????
4 comments:
குடிப்பவருக்கு சிகிச்சை செய்யப்போய் அவரும் உங்களுக்கு இவரை ஞாபகம் செய்து விட்டார் ...
நட்புடன் ஜமால் said...
குடிப்பவருக்கு சிகிச்சை செய்யப்போய் அவரும் உங்களுக்கு இவரை ஞாபகம் செய்து விட்டார் ...//
விளங்க வில்லை அண்ணா ? திட்டுறீங்களா ?
நல்ல தகவல்
விளங்க வில்லை அண்ணா ? திட்டுறீங்களா ?\\
ச்சே ச்சே
திட்டுறதா
என்ன தம்பி நீங்க ...
Post a Comment