6.13.2009

உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காய்ச்சல் பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ?


பன்றிக் காய்ச்சல் H1N1 எனும் வைரசினால் ஏற்படுத்தப் படுகிறது. இந்த வைரஸ் பன்றியில் இருந்து மனிதனுக்குத் தொற்றினாலும் , பன்றியில் இருந்து மனிதனுக்கு தொற்று ஏற்படுகிற அளவு மிகவும் குறைவானதே. ஆனாலும் ஒரு மனிதனுக்கு தொற்று ஏற்பட்டால் அவரில் இருந்து மற்றவர்களுக்கு தொற்றக்கூடிய சந்தர்ப்பம் மிகவும் அதிகம்.

பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களுக்கு இந்த நோய் தொற்றி கொள்வதற்கான சந்தர்ப்பம் அதிகம், பிறகு அவர்களில் இருந்து மற்றவர்களுக்கு இலகுவாக தோற்றி பெரிய பிரச்சனையையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது உலகளவில்.

ஒழுங்காக சமைக்கப்பட்ட பன்றி இறைச்சியால் தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

பன்றிக் காய்ச்சல் என்ற நோய் நிறையப்பேருக்கு புதிய விடயமாக இருக்கலாம் ஆனாலும் இது இந்த உலகத்துக்கு புதியதல்ல . முதன் முதலாக பன்றிக் காய்ச்சல் இனங்காணப்பட்டது 1918 ம ஆண்டு.

இதுவரை இந்திய மற்றும் இலங்கையில் இது பெரிய அளவில் பிரச்சனை கொடுக்காவிட்டாலும், ஓரளவுக்கேனும் இது பற்றிய விடயங்களை தெரிந்து வைப்பது நல்லது என்ற நினைப்பில் சில அடிப்படை விடயங்களை பதிவிடுகிறேன்.




பன்றிக் காய்ச்சல் என்ன வழிகளில் உங்களுக்குத் தொற்றலாம்?


1.நோய் உள்ளவர் இருமும் போது அல்லது தும்மும் போது நீங்கள் அருகில் இருந்தால் காற்றின் மூலம் உங்களுக்கு தொற்று ஏற்படலாம்.

2.நோய் உள்ளவர் உங்களை முத்தமிட்டால்.( உங்கள் அன்பிற்குரியவருக்கு காய்ச்சல் இருந்தால் எதற்கும் முத்தங்களை பிற்போடுங்கள்?)

3.நோய் உள்ளவர் பாவித்த பொருட்கள் அல்லது அவர் தும்மும் போது அவரின் மூச்சுக்காற்று பட்ட பொருட்களை நீங்கள் உங்கள் கையால் தொட்ட பின் உங்கள் கைகளை ங்கள் வாய், கண் , மூக்கு என்பவற்றில் வைக்கும் போது அந்த கிருமி உங்களையும் தொற்றிக் கொள்ளலாம்.

குறிப்பு- இந்த வழி முறைகள் மூலமே அநேகமான மற்றைய வைரசுக்கள் கூட பரவுகின்றன. பொதுவான தடிமன் கூட இவ்வாறே பரவும் .

பன்றிக் காய்ச்சலினால் உடம்பில் ஏற்படும் அறிகுறிகள் எவை?

  1. காய்ச்சல்
  2. இருமல்
  3. தலையிடி
  4. மூக்கால் தண்ணி ஓடுதல்
  5. தொண்டை அரிப்பு
  6. பசிக்குறைவு
  7. வாந்தி
  8. வயிற்றோட்டம்
  9. வாந்தி வருகின்ற உணர்வு
  10. உடல் பலகீனமான உணர்வு

குறிப்பு- இந்த மாதிரியான குணங்குறிகளை நீங்கள் சாதாரணமான தடிமன் காய்ச்சலில் கூட உணந்திருப்பீர்கள். ஆகவே இந்த அறிகுறிகள் பன்றிக் காய்ச்சலுக்கு மட்டும் உரியதல்ல.

உங்களுக்கும் இவ்வாறான குறிகளோடு காய்ச்சல் வந்தவுடன் பன்றிக் காய்ச்சலோ என்று பயம் கொள்ள தேவை இல்லை.

உங்களுக்கு இந்த மாதிரி காய்ச்சல் வந்தால் நீங்கள் முதலில் கருத்தில் கொள்ள வேண்டியது -

1.வெளியூர் பயணம் ஏதாவது அண்மையில் மேற்க்கொன்டீர்களா ?
2.வெளியூரில் இருந்து வந்த யாரோடாவது தொடர்பு உள்ளதா / வெளியூர் வாசிகள் யாராவது உங்கள் வீட்டில் தங்கி உள்ளார்களா?
3.உங்கள் வீட்டுக்கு அருகிலோ வேலைத்தளத்திலோ யாரவதுக்கு அண்மையில் காய்ச்சல் வந்ததா?

மேலே உள்ள கேள்விகள் ஏதாவது ஒன்றுக்கு பதில் `ஆம்` என்றால் நீங்கள் உடனடியாக வைத்தியரைச் சந்திப்பது உகந்தது.

மற்ற வைரஸ் காய்ச்சல்கள் போல பன்றிக் காய்ச்சலும் மிகவும் விரைவாக தொற்று ஏற்படுத்தினாலும் இது எல்லோருக்கும் பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை.

சில குறிப்பிட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு இது பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம், மரணம் கூட நிகழலாம்.

எவ்வாரானவர்களில் பன்றிக் காய்ச்சல் பாரிய பிரச்சனைகளை உருவாக்கலாம்?

1.வயது முதிந்தவர்கள் (65 )
2.சலரோக நோயாளிகள்
3.ஆஸ்த்மா, இதய நோய் போன்ற நீண்டகால நோய் உள்ளவர்கள்
4.கர்பிணிகள்
5.மிகவும் வயது குறைந்த பிள்ளைகள்.


ஏன் குறிப்பாக இப்படிப்பட்டவர்களுக்கு மட்டும் பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது?
எமது உடலிலே எல்லாவிதமான நோய்களையும் எதிர்ப்பதற்கு இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தி உள்ளது. இந்த நோயை எதிர்க்கின்ற வல்லமை மற்றவர்களை விட மேலே குறிப்பிட்டவர்களில் குறைவாக உள்ளதே இதற்கான காரணம்.
நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக உள்ள நபர் ஒருவருக்கு இந்த நோய் ஏற்பட்டாலும் அது பாரிய பிரச்சனை ஏற்படுத்தா வண்ணம் உடலால் கட்டுப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

பன்றிக் காய்ச்சலை தடுப்பதற்கான வழி முறைகள்

1.தும்மும் போதும் இருமும் போதும் மூக்கு மற்றும் வாயை மூடி , மூடிய மென் காகிதத்தை அல்லது துணியை கவனமாக புதைத்தல் அல்லது எரித்தல் வேண்டும்.
(இதை நோய் உள்ளவரும் , அல்லாதவரும் செய்ய வேண்டும்)
2.நோயாளியை தனிமைப்படுத்தல்( நெருங்கிய தொடர்பினைத் தடுத்தல்)
3.கை கழுவும் பழக்கத்தை கடைப் பிடித்தல்.
4நோயாளியை சுற்றி ஆறு அடி தூரத்துக்கு அப்பால் இருப்பதை உறுதிப்படுத்தல்.( அவர் தும்மலின் வேகம் ஆறு அடி வரை பரவும்)
5.இந்த நோய் பற்றி அறிவு இல்லாதவர்களுக்கு போதிய விளக்கம் அளித்து அவர்களையும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க செய்தல்

இந்தியாவை அல்லது இலங்கையை பொறுத்தவரை இது வரைக்கும் இந்த நடவடிக்கைகள் எடுப்பதற்கான தேவைகள் வரவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

பி. கு - இது எல்லோருக்கும் விளங்க வேண்டும் என்பதற்கான ஒரு அடிப்படை விளக்கமே. மேலும் இது பற்றி அறிந்து கொள்ள விரும்புவர்கள் உங்கள் சந்தேகத்தை பின்னூட்டத்தில் கேளுங்கள் பதில் அளிக்கிறேன்.

8 comments:

நிஜமா நல்லவன் said...

பயனுள்ள பதிவு. நன்றி!

நிஜமா நல்லவன் said...

படம் பயங்கர டெரர்ரா இருக்கு பாஸ்:)

sakthi said...

நீங்க டாக்டரா???

சொல்லவேயில்லை

sakthi said...

உபயோகமான பதிவு

coolzkarthi said...

வாவ்! பயனுள்ள பதிவு தல.....

நட்புடன் ஜமால் said...

அட!

டொக்டரா நீங்கள்!

ம்ம்ம் ... நல்ல பகிர்வு ...

நிலா said...

Great , Informative.
ஆத்தாடி, இம்புட்டு விசயம் தெரிசவரா நீங்க. சொல்லவே இல்ல

மயாதி said...

நன்றி

நிஜமா நல்லவன்
sakthi
coolzkarthi
நட்புடன் ஜமால்
நிலா