6.30.2009

எங்கள் குழந்தைகள் இப்படித்தான் பேசும்.( இதய பலகீனமானவர்கள் தவிர்க்கவும்)

மு.கு- இது சிரிப்பதற்காக அல்ல. எங்கள் அவலத்தை சில மர மண்டைகளுக்கு உணர்த்துவதற்காக.
ஒரு அனானி நண்பர் ஆங்கில மொழி பெயப்புக் கேட்டு இருக்கிறார் , முடிந்தவர்கள் பின்னூட்டத்தில் மொழி பெயர்த்துத் தந்ததால் தமிழுக்கு கீழேசேர்த்து விடுகிறேன்.





என்ன வயித்தில எவ்வளவு பெரிய வெட்டு என்று பார்க்கிறீங்களா?
அதொன்றுமில்லை வயிறு பெரிசா இருக்குதாம் என்ற சந்தேகத்தில செக் பொயிண்டில் (check point)வெட்டிப் பார்த்தவங்க.






இண்டைக்காவது ஒரு துளி பாலை வாயில காட்டு அம்மா






வாவ் ! இன்னும் கொஞ்ச நேரத்தில முந்தநாள் செத்துப் போன அம்மாவை போய்ப் பார்க்கப்போறேனே!



கடவுளே ! இண்டைக்காவது இந்தச் சொம்பில் அறைவாசிக்காவது கஞ்சி வாங்கிடனும். அப்பத்தான் குடும்பத்தில இருக்கும் அஞ்சு பேரும் சமாளிக்கலாம்.







100 பேர் இடம் பெயர்ந்து போகும் போது ஷெல் விழுந்து 60 பேர் செத்துப் போனால் மிஞ்சுவது 40பேர்தானே ரீச்சர்?






செத்துப் போய் விட்டோம் என்று கவலைப் படாதே தம்பி , நாம இனி கல்லறையில ஒளிச்சுப் பிடிச்சு விளையாடலாம்.





அங்கிள்! ஏழாவது அகதி முகாமில எட்டாவது குடிசையில ஒன்பதாவது குடும்பத்தில் இருக்கும் , என் அம்மாட்ட நான் செத்துப் போயிட்டான் என்று சொல்லி விடுங்கள் அங்கிள்.






அப்பா ! நான் இங்கே நாலாவது சவத்திற்குப் பக்கத்தில படுக்கிறன்.





நல்ல அங்கிள்! கால் கடுக்குது என்ற உடனேயே குந்தி இருக்க அனுமதிச்சிட்டார்.





நாங்கதானே உங்கள் ஆசைப்படி செத்துப் போயிட்டம். இனியாவது இறக்கி விடுங்களேன் , கழுத்து வலிக்குது.


25 comments:

நட்புடன் ஜமால் said...

அப்பா ! நான் இங்கே நாலாவது சவத்திற்குப் பக்கத்தில படுக்கிறன்.
\\


:( :( :(

Anonymous said...

இணைப்புக்கு நன்றி
இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தரமுடியுமா?

குடந்தை அன்புமணி said...

படங்களும், அதற்கு தங்களின் கமெண்ட்டும் படிக்கையில் இதயம் கனத்துப்போகிறது.எல்லா படங்களும் ஒவ்வொருவிதத்தில் மனைதக் காயப்படுத்தவே செய்கின்றன நண்பா! நமது கையாலாகாத தனத்தை எண்ணி வெட்கப்படுகிறேன்.

நாணல் said...

:(((

keetha said...

dont make us to cry.... please

S.A. நவாஸுதீன் said...

:( :( :(

ஷாகுல் said...

We dont have words to u.

காமராஜ் said...

என்னிடம் பதவி இல்லை,
என்னிடம் படையில்லை,
உடனே ஓடிவரும் மனசிருக்கிறது.
உடனே உதிர்த்துவிட கண்ணீருமிருக்கிறது
கூடவே இன்னொரு கவிதையுமிருக்கிறது

மயாதி said...

நன்றி
ஜமால் அண்ணா
நவாஸ் அண்ணா
அன்புமணி
கீதா
நாணல்
ஷாகுல்
அனானி நண்பர்

மயாதி said...

காமராஜ் said...

என்னிடம் பதவி இல்லை,
என்னிடம் படையில்லை,
உடனே ஓடிவரும் மனசிருக்கிறது.
உடனே உதிர்த்துவிட கண்ணீருமிருக்கிறது
கூடவே இன்னொரு கவிதையுமிருக்கிறது//

நன்றி நண்பரே !

சந்தனமுல்லை said...

:((((

தேவன் மாயம் said...

கொடுமையான காட்சிகள் மயாதி!!

தேவன் மாயம் said...

நாம் 3 வேளை சோறு தின்பதை எண்ணி வெட்கப்படுகிறேன்!!

பதி said...

:(((

மயாதி said...

சந்தனமுல்லை said...

:((((

July 1, 2009 ௧//

நன்றி நண்பரே!

மயாதி said...

thevanmayam said...

கொடுமையான காட்சிகள் மயாதி!!//

நாம் 3 வேளை சோறு தின்பதை எண்ணி வெட்கப்படுகிறேன்!!//

என்ன செய்வது அண்ணா , கவலைப் பட மட்டுமே நம்மால் முடிகிறது.....

மயாதி said...

பதி said...

:(((//

நன்றி நண்பரே ...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

தமிழ் குழந்தைகளை இப்படிப் பார்க்க முடியாமல் இருக்கிறது. நெஞ்சு துடிக்குதையா, இந்த மதி கெட்ட மாந்தரை நினைக்கையிலே!

Anonymous said...

இண்டைக்காவது ஒரு துளி பாலை வாயில காட்டு அம்மா

மொழிபெயர் முயற்சி : Mom atleast today give me one drop of milk (before I die..)

ப்ரியமுடன் வசந்த் said...

நெஞ்சு கனக்கிறது மயாதி

Anonymous said...

fast translation
pls any mistake corrct.


Wonder who a large cut?
My stomach is so big, so SL army in the check point, cut and open to see inside.

wow, I am going to see my mom who died 2 days b4

Oh god, I must get atleast half basin. then only 5 members in my family can manage

teacher, while 100 people are displacing, 60 were killed in shelling, then balance is 40 no?

Brother dotn worry we are died. We will play hide and seek in tomb(not sure about this word. pls corrct)

uncle, pls pass the messge taht I have died to my mom in the 7th house in the refugee camp

Appa, I am next to the 4th corpse (SPELLING)

good uncle, when I said my leg is swelling, he allowed me to sit.

We have already died as u wished. pls let us down. neck is paining

Venkattan

யாழினி said...

ஐயோ மயாதி வேண்டாமே please....

எங்கள் நாட்டின் கொடுமைகளை எந்த நாட்டிற்கு சொல்லி யார் மயாதி இரக்கப் படப் போகிறார்கள்? இக் கொடுமைகள் ஈழத்தமிழர் எமது பரம்பரைச் சொத்தோ...?

அப்துல்மாலிக் said...

மெய்யாலுமே மனசு கணத்துப்போச்சு, சிலபடங்களை பார்க்கமுடியலே..

இவங்க இந்த மண்ணில் பிறந்தது யார் தவறு இப்படி அல்லோல்லப்பட்டு சவமாக (சொல்லவே நா கூசுது) கிடப்பதற்கா???????

Suresh said...

:-(

சாரு ... ஜெ.. பைத்திகாரன்... நரசிம்.. லக்கி... ஆதிஷா..சுரேஷ்கண்ணா

thamizhparavai said...

நெஞ்சு கனக்கிறது...